உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்தியங்கு கொண்மி 577

மிகக் குறைந்த துடிப்புகளைக் கண்காணிக்க உதவும் எதிர்முனைக் கதிர் அலை பதிப்பியும் (CRO), ஒத்தியங்கு அளவி என்றே குறிப்பிடப்படுகிறது. ஒத்தியங்கு கொண்மி வா. அனுசுயா. ஒரு சிறந்த மின்திறன் அமைப்பு (power system) என்பது சரியான அலைவெண்ணும் நிறைவான மின்னழுத்தமும் கொண்டதாகும். அலைவெண் ணைச் சரியான அளவிற்கு அதாவது 50 சுழற்சி நொடி என்ற அளவில் நிலைநிறுத்தும் (maintain) பொருட்டு மின் ஆக்கமும் மின்சுமையும் ஒருங் கிணைந்து வேண்டும். அதே சமயம் மின் அழுத்தத்தை நிறைவான அளவில் நிலைநிறுத்தச் செயல்பாட்டு மின்திறனும் (active power) எதிர்வினைப்பு மின்திறனும் (reactive power) ஒருங்கிணைந்து கட்டுப்படுத்தப்படவேண்டும். கட்டுப்படுத்தப்பட . ஒரு மின்திறன் அமைப்பின் செயல்பாட்டு மின் திறன் சுமையும் எதிர்வினைப்பு மின்திறன் தேவை களும் மின்சுமையின் மாற்றங்களுக்கேற்ப உடனுக் குடன் மாறுகின்றன. செயல்பாட்டு மின்திறன் என்பது மின்னாக்க நிலையங்களில் கட்டுப்படுத்தப் படும்போது எதிர்வினைப்பு மின்திறன் என்பது மின் கொண்மி அடுக்குகள் (capacitor banks) அல்லது ஒத்தியங்கு கொண்மிகள் (synchoronous condensers) மூலமாக அக உற்பத்தி (local generation) எதிர் வினைப்பு கி.வோ.அ. (reactive KVA) மூலமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒத்தியங்கு மின்னோடி, திறன் கூற்று எண்ணை 0.7-1.0க்கு உயர்த்துவதற் கும் முந்தும் திறன் கூற்று அளவை (leading power factor) உண்டாக்குவதற்கும் பயன்பட்டால் அதற்கு ஒத்தியங்கு கொண்மி எனப் பெயர். மின் கொண்மி அடுக்குகளைவிட ஒத்தியங்கு கொண்மிகள் 100% எதிர்வினைப்பு மின்திறனை வழங்கவல்லவை. மேலும் மிகுதியான நிலைப்புப்படுத்தும் வி ளைவுகளை (stabilising effects) மின்திறன் அமைப்பின் மின்ன முத்தங்கள் மீது ஏற்படுத்த வல்லவை. எந்திரங்களுக் கிடையே ஒத்தியக்கத்தை (synchoronism) நிலைப் படுத்த வல்லவை. ஒத்தியங்கு கொண்மி என்பது மிகுதியான கிளர்வின்போது எதிர்வினைப்பு மின்திறனை வழங் கும் ஓர் ஒத்தியங்கு மின்னோடியாகச் (synchoronous motor) செயல்படும். ஓர் ஒத்தியங்கு மின்னோடியின் மின்திறன் கூற்றை (power factor) விரும்பிய அளவில் மாற்றம் செய்யலாம் என்பதால் அது பல முக்கிய மின் எந்திர நிறுவனங்களில் குறைந்த மின்திறன் கூற்றில் இயங்கும் இடங்களில் பயன்படுகிறது. அ.க. 6-37 ஒத்தியங்கு கொண்மி / 577 ஒத்தியங்கு மின்னோடி மிகுதியான கிளர்வின் போது ஒரு மின் கொண்மியாகச் செயல்பட்டு முந்தும் மின்சுமையை (leading KVA) எடுத்துக்கொண்டு செல்கிறது. இதன் காரணமாக ஒத்தியங்கு மின் னோடி அதனுடன் தொடர்புடைய திறன் அமைப்பு களுடன் மின்திறன் கூறை முன்னேற்றம் செய்வதற் காக இணைநிலையில் இணைக்கப்படுகிறது. எந்திரச் சுமை (mechanical load) கிடைக்கப்பெறாதபோதும் இத்தகைய மின்னோடிகளைக் குறைந்த சுமையில் இயக்குவது பயன்மிக்கதாகும். ஏனெனில் அவற்றின் தலையாய் குறிக்கோள் மின்திறன் கூற்றை னேற்றுவதேயாகும். முன் திறன் கூற்றை மின்திறன் பெறும் முனையிலேயே (receiving end) கட்டுப்படுத்தாவிட்டால், நெடுந் தொலைவு மின்செலுத்தக் கம்பித் தொடர்களை நிறைவான முறையில் இயக்குவது கடினமாகும். அதிக ஒத்தியங்கு மின்னோடிகளைக் குறைந்த அழுத் தத்தில் ஓடச் செய்வதன் மூலம் இது செய்யப்படு கிறது. ஒத்தியங்கு மின்னோடிகள் எந்திரச்சுமை இல்லாமல் இயங்குகிறபோது அவற்றின் தலையாய முத்தறுவாய்த்திறன் D.C I P.F= 1.0 Is புலம் IL PF=Cos 0, ஒத்தியங்கு கொண்மி படம் 1 (அ) ஒத்தியங்கு கொண்மியின் மூலம் திறள் கூற்றை 1-க்கு உயர்த்துதல் 0709-2 திறன் கூற்றுச்