உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்படர்த்தி 585

செய்யவும் இதைப்பயன்படுத்தலாம். நன்கு உலர்த் தப்பட்டுச் சீராக்கப்பட்ட மரம். காலணி அச்சு (boot lasts) நூல் சுற்றப்பயன்படும் கதிர்கள் (bobbin) செய்யவும் பயனாகிறது. இம்மரத்தின் இலைகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது. இம்மரத் தினின்று வெளியாகும் பசையும் பயன்படுகிறது.தமிழ் நாட்டின் அனைத்து இலையுதிர் காடுகளிலும் இம் மரம் சாலையோர மரங்களாக வளர்க்கப்படுகின்றது. முருங்கையைப் போல் ஏறத்தாழ 20 செ.மீ. சுற்றளவும் 150 செ.மீ. உயரமும் உள்ள கிளையை நட்டால் அது வளர்ந்து மரமாகும். குறிப்பாக மணல் பாங்கான வறண்ட பகுதியில் மிகச் செழிப் பாக வளரும். ஒப்படர்த்தி டி. கே. சீனிவாசன் பொருள்களின் இயற்பியல் பண்புகளில் அடர்த்தியும் ஒன்றாகும். ஓரலகுப் பருமனுள்ள பொருளின் நிறை அப்பொருளின் அடர்த்தி (density) எனப்படும். இதன் அலகு கிலோகிராம்/கனமீட்டர் ஆகும். அடர்த்தி எண் அல்லது ஒப்பு அடர்த்தி (specific gravity) என்பது ஒரு பொருளின் நிறைக்கும், அதே கன அளவுள்ள நீரின் நிறைக்கும் உள்ள தகவாகும். இது, பொருளின் அடர்த்திக்கும் நீரின் அடர்த்திக்கும் உள்ள விகிதத் திற்குச் சமமாக இருக்கும். அதாவது ஒரு பொருளின் அடர்த்தியை, செந்தரமாகக் கொண்டுள்ள நீரின் அடர்த்தியோடு ஒப்பிட்டுக் ஒப்பிட்டுக் கூறுவது ஒப்படர்த் தியாகும். ஒப்படர்த்திக்கு மதிப்பு மட்டுமே உண்டு, அலகில்லை. எனவே இதன் மதிப்பு, இயற்பியலில் பயன்படும் அலகு முறைகளுக்கு ஏற்ப மாறுபடுவ தில்லை. திண்ம நீர்மப் பொருள்களின் ஒப்படர்த்தியை மதிப்பிடும் முறைகளில், பொதுவாக 4°C வெப்ப நிலையில் (39.20F) உள்ள நீரின் அடர்த்தி செந்தர மாகக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குறிப்பிட்ட வெப்பநிலையில், நீரின் அடர்த்தி 1 கி.கி/க.மீ. ஆக உள்ளது. வளிமப் பொருள்களின் ஒப்படர்த்தியை மதிப்பிடும் முறைகளில், நீரின் உருகுநிலையில் (0°C or 32°F) இயல் வளி மண்டல அழுத்தத்தில் உள்ள காற்றின் அடர்த்தியைச் செந்தரமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். நீரின் அடர்த்தியோடு ஒப்பிடுகையில் காற்றின் அடர்த்தி 0.001293 ஆகும். திண்ம, நீர்ம வளிமப் பொருள்களின் ஒப்படர்த் தியைக் கண்டறிய ஆய்வுக் கூடங்களில் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. திண்ம நீர்மப் பொருள்களின் ஒப்படர்த்தியை, ஆர்க்கிமிடீஸ் பயன்படுத்தி தத்துவத்தைப் மிக நுட்பமாகக் ஒப்படர்த்தி 535 கண்டறியலாம். முதலில் பொருளின் எடையை இயற்பியல் தராசின் மூலம் அறிந்து, பின்னர் அப் பொருளை ஒரு முகவை (beaker) வைக்கப்பட்டுள்ள நீரில் முழுதும் முழுதும் மூழ்கியிருக்குமாறு செய்து, அந் நிலையில் இதன் எடை டயைக் காண வேண்டும். ஆர்க்கிமிடீஸின் கொள்கைப்படி, நிலையான நீர் மத்தினுள் இருக்கும் ஒரு பொருள், தன்னால் இடப் பெயர்ச்சி செய்யப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமமான எடையை இழக்கும். இவ்விரு அளவீடுகளி லிருந்து பொருள் நீரினுள் இழந்த எடையைக் கணக்கிடலாம். இது அப்பொருளால் இடப்பெயர்ச் சிக்கு உள்ளாக்கப்பட்ட நீரின் எடைக்குச் சமமாக இருப்பதால், பொருளின் ஒப்படர்த்தி = காற்றில் பொருளின் எடை நீரில் இழந்த எடை ஆகும். நீர்மப் பொருளின் ஒப்படர்த்தியை அறிய, ஒரு பொருள் நீரிலும், அந்நீர்மத்திலும் இழக்கும் எடையைக் கண்டறிய வேண்டும். இதிலிருந்து நீர்மத்தின் ஒப்படர்த்தியை மதிப்பிடலாம். நீர்மத்தின் ஒப்படர்த்தி = பொருள் நீர்மத்தில் இழந்த எடை அதே பொருள் நீரில் இழந்த எடை நீர்மத்தின் ஒப்படர்த்தியை ஒப்படர்த்திக் குப்பி யால் (specific gravity bottle) மதிப்பிடலாம். ஒப்படர்த்திக் குப்பி, ஒரு சிறிய துளையுள்ள 25ml 20°C