592 ஒப்பனைப் பொருள்களின் தன்மை
592 ஒப்பனைப் பொருள்களின் தன்மை தோலின் மேல் நன்றாக ஒட்டி இருக்க வேண்டும். வண்ணபூச்சு உரிந்து இல்லையேல் நீர்பட்டாலே விடும். வளையும் தன்மை பெற்றிருத்தல். ஒப்பனைப் பொருள்களால் உண்டாக்கப்படும் மெல்லிய படலம் போன்ற பகுதி நன்கு இணங்குவதாக இருக்க வேண்டும். இல்லையெனில் தோல்களை மடிக்கும் போது ஒப்பனைப் படலம் உடைய வாய்ப்பு உண்டு. அடிப்பகுதியை சூட்டிலும் குளிரிலும் மாறா நிலை. செயற்கை ரெசின்களைக் கொண்டு தற்காலத்தில் எந்திரப் பொறிகள் மூலம் காலணியின் இணைக்கின்றனர். எனவே ஒப்பனைப் படலங்கள் மிகுதியான சூட்டில் நிலை மாறாமல் இருக்க வேண்டும். குளிர்ச்சி மிக்க நாட்டில் வாழ்பவர்கள் அணியும் காலணிகள் குளிரைத் தாங்கும் நிலையில் இருக்க வேண்டும். காலணியின் மேல் தோல்கள், ஒப்பனைப் படலங்கள் ஆகியவை கடினமாக மாறி வளையும் தன்மையை இழந்துவிடாதவாறும், கடுங்குளிரில்கூட ஓடிந்து போகாதவாறும் அமைவது நல்லது. தோல்களை நிரப்பும் தன்மை கொண்டிருத்தல். மயிர்கள் அடர்ந்த தோல்களைக் கல்லடித்து (buff ing) ரெசின் பொருள்களால் ஒப்பனை செய்து சீர் செய்வர். இத்தகைய தோல்களுக்குப் பயன்படும் ஒப்பனைப் பொருள் நிரப்பும் தன்மை பெற்றிருக்க வேண்டும். சூரிய ஒளிக்காப்பு, நீர்க்காப்பு, தேய்வுக்காப்பு. காலணி கள், தோல் ஆடைகள், தோல் பொருள்கள் இவை பெரும்பாலும் சூரிய ஒளியில் பயன்படுவதால் அவற் றின் நிறமும் தன்மையும் மாறாமல் இருக்க வேண்டும். பெரும்பாலும் தோலால் செய்யப்பட்ட காவணி களும், தோல் ஆடைகளும் மழையால் பழுதடையா வண்ணம் நீர்காப்புத் தன்மை பெற்றிருக்க வேண்டும். ஒப்பனைப் பொருள்கள் பெரும்பாலும் தேய்வுக் காப்புத்தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது உராய்விலிருந்து காக்கும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். க அடித்தல், தேய்த்தல், மோதுதல் போன்ற செயல் களுக்கு ஏற்றதாக இருத்தல். தோல்களைக் கொண்டு காலணிகளும், பிற பொருள்களும் செய்யப்படும் போது அவை பெரும்பாலும் அடித்தல், தேய்த்தல், மோதுதல் போன்ற செயல்களுக்கு உட்படுத்தப்படும். அப்போது ஒப்பனைப்படலங்கள் கிழியாமலும், நிறம் மாறாமலும், தன்மை மாறாமலும், கவர்ச்சி மாறா மலும் இருக்க வேண்டும். ஒப்பனையில் கவனிக்க வேண்டியவை. ஒப்பனை செய்ய இருக்கும் தோல், ஒப்பனை செய்வதற்கு ஏற்ற தன்மையுடன் உள்ளதா என்பதையும் தோல் பயன்படுத்துவோர் எத்தன்மைகளை விரும்பு கின்றனர் என்பதையும் அறிய வேண்டும். பதனிட்ட தோல் ஒப்பனைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட பதனிடும் பொருள்கள் ஊட்டப் பட்ட எண்ணெயின் தன்மை ஆகியவை தோவில் சீராகச் சேர்ந்துள்ளனவா என்று பார்க்க வேண்டும். சரிசெய்யப்பட்ட தோல்கள் சீராகக் கல்லடிக்கப் பட்டிருக்க வேண்டும். தோல் நீர் உறிஞ்சும் தன்மையை மிகுதியாகக் கொண்டிருக்கக் கூடாது. ஒப்பனையில் தேவைப்படும் பொருள்கள். புரதப் பொருள்கள், ரெசின் ணைப்பி (resin binder), ஞெகிழ்விப்பிகள், இணைப்பிகள், பாதுகாக்கும் பொருள்கள், கெட்டிப்படுத்தும் பொருள்கள் (thicke- ning agent), துரை தடுக்கும் பொருள்கள் (antifoam ing agent), சாயப் பொருள்கள், வண்ணப் பசைகள் அல்லது நிறமிகள், மெழுகு, கோந்து, கரைப்பான்கள் நீர்த்திகள் (diiuents), பளபளப்பைக் குறைக்கும் பொருள்கள் (dulling agent), மெருகு நெய்ப் பொருள் கள் (lacquer). ஃபார்மலின், பாலியூரேத்தேன் பொருள்கள் இவற்றைக் கொண்டு பக்குவப்படுத்திய தோல்களை ஒப்பனை செய்வர். ஒப்பனையின் தரம், இயக்கும் முறை ஆகியவை தோல்களைப் பயன் படுத்தும் தேவைக்கேற்றவாறு முறைப்படுத்தபடு கின்றன. ஒப்பனைப் பொருள்களைத் தோல்களில் மெழுகும் முறை. ஒப்பனைப் பொருள்களைத் தோலின் தேவைக்கு ஏற்றவாறு தோலின் மீது ஊட்டுகின் றனர். அதற்குப் பல புதிய முறையைக் கையாளு கின்றனர். சில கருவிகள் கொண்டு தோல்களை ஒப்பனை செய்கின்றனர். இவை தூரிகை அல்லது சிறு மெத்தையாலான தூரிகை போன்றவற்றாலும் கைகளாலும் பூசப்படும். தெளிக்கும் கருவியைக் கொண்டு கையாலேயே தோலின் மீது நன்றாகத் தெளிக்கவேண்டும். இதனால் ஒப்பனைப்பொருள்கள் நன்கு தோலின் மீது படருமாறு ஒழுங்காக ஒப்பனை செய்ய முடியும். தற்காலத்தில் தானே தெளிக்கும் (automatic spraying machine) பொறிகளைப் பயன்படுத்தித் தோல்களை மிகசிறப்பாகவும் விரைவாகவும் ஒப்பனை செய்கின்றனர். பொறியைப் பயன்படுத்தும்போது ஒப்பனைப் பொருள்களை அது தோலின் மீது சிறப் பாகத் தெளிப்பதால், ஒப்பனைப் பொருள்கள் வீணாவதில்லை. நடைமுறையில் தோல்களை ஒப்பனை செய்தல். நடைமுறையில் தோல்களை ஒப்பனை செய்வது இரு முக்கிய முறையில் செய்யப்படுகிறது. அவை புரதப் பொருள்களைக் கொண்டு பளபளப்பூட்டுதல், ரெசினைக் கொண்டு தோல்களை ஒப்பனை செய்தல் ஆகும். புரதப் பொருள்களைக் கொண்டு பளபளப்பூட்டும் தோல் ஒப்பளை, இவ்வகை வெள்ளாட்டுத் தோலுக்கும் .