உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருங்கிணைந்த களை பராமரிப்பு 605

பருமனளவை விடச் உள்ள நுண்துளைகள் கரைப்பான் மூலக்கூறின் பருமனளவை விடப் பெரியவையாகவும், கரை பொருளின் மூலக்கூறுகளின் சிறியவையாகவும் இருப்பதால், கரைப்பான் மூலக் கூறுகள் மட்டும் சவ்வின் வழியே ஊடுருவிச் செல்ல முடியும்; கரைபொருள் மூலக்கூறுகள் சவ்வின் வழியே ஊடுருவிச் செல்ல முடியாது. உயிர்ப் பொருள்களின் செல் சுவர்கள் நீரை மட்டும் எளிதில் ஊடுருவிச் செல்லவிடும் சவ்வு களாகச் செயல்படுகின்றன. நீர்மத்தில் ஆனால் கரைந்துள்ள பொருள்களைப் பெரும்பாலும் ஊடுருவிச் செல்ல விடுவதில்லை. நீர் மூலக்கூறுகள் செல் களின் ஊடே சென்று. அவற்றினுள்ளே அழுத் தத்தை மிகுவித்துச் செல் சுவர்களை லேசாகப் பருக்கச் செய்து அவற்றை விறைப்பாக இருக்கும் படிச் செய்யும். எனவேதான் புல் தண்டுகள், இலை கள், பூவிதழ்கள் ஆகியவை சிறிது நீண்டு சுருங்கும் தன்மையுடையனவாக உள்ளன. தாவரத்தை வெட்டிவிடும்போது செல் சுவர்களின் வழியாக நீர் ஆவியாகிச் செல்வதால், உயிரணுக்களாலான நீர் மத்தின் கன அளவு குறைந்து, செல் சுவர்கள் செழிப்பை இழந்துவிடுகின்றன. தாவரம் உலர்ந்து வதங்கி விடுகிறது. ஆனால் சிறிதளவு உலர்ந்த தாவ ரத்தை நீரில் வைத்தால், செல் சுவர்கள் வழியே சவ்வூடு பரவல் மீண்டும் நிகழத் தொடங்கி, செல் சுவர்கள் மீண்டும் விறைப்பாகித் தாவரம் முன்பு இருந்த தோற்றத்தைப் பெறும். இயற்கையில் கிடைக்கும் விலங்குச் சவ்வுகள் முற்றிலும் ஒருகூறுபுகவிடும் சவ்வுகளாக அமைவ தில்லை. மேலும் இந்தச் சவ்வுகளின் மேல் மிகுதி யான அழுத்தம் உண்டானால் எளிதில் கிழிந்துவிடு கின்றன.பொதுவாக, கரைசல்களின் சவ்வூடு பரவல் அழுத்தம் மிகுதியாகவே உள்ளது. ஆகவே, சவ்வூடு பரவலழுத்தத்தை அளக்க, வலிவானதும், முற்றிலும் ஒருகூறுபுகவிடும் பொருளாகவும் உள்ள செயற்கைச் சவ்வுப் பொருளைப் பயன்படுத்த வேண்டும். காப்பர் சல்ஃபேட் கரைசலையும் பொட்டாசியம் ஃபெரோ சயனைடு கரைசலையும் வேதி முறையில் வினையுறச் செய்து, அதனால் உருவாகும் காப்பர் ஃபெரோசய னைடை ஒரு பீங்கான் குவளையிலுள்ள நுண் துளை களில் படியச் செய்தால், எளிதில் பாழ்படாத, வலி வான ஒரு கூறுபுகவிடும் சவ்வு கிடைக்கிறது. நீரில் கரைவதும், குறைந்த மூலக்கூறு எடை கொண்டது மான கரைபொருள்களுக்கு இந்தச் சவ்வு மிகச் சிறந் தது. கரிமக் கரைப்பானில் கரைவதும், மூலக்கூறு எடை மிகுதியும் கொண்டதுமான கரிமக் கரை பொருள்களுக்குச் செல்லுலோஸ் கொலோடையான் ஏடுகள் சிறந்த ஒருகூறுபுகவிடும் சவ்வுகளாகும். கே. சுந்தரம் ஒருங்கிணைந்த களை பராமரிப்பு 605 ஒருங்கமை நேரியல் வகைகெழுச் சமன்பாடு காண்க: இயல்பான வகைக்கெழுச் சமன்பாடு ஒருங்கிணைந்த களை பராமரிப்பு களைகளால் பயிரின் விளைச்சல் 20% முதல் 100% வரை தாக்கமுறுகிறது. களைகளில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை வகை என்பன வாகும். பருவம் வகை. புல், கோரை, அகன்ற இலைக்களைகள், நீர்க் களைகள் போன்றவை. பருவம். இது ஒரு பருவம், இரு பருவங்கள், பல பருவங்கள் எனப் பிரிக்கப்படும். பொதுவாக ஒரு பருவக் களைகள் விதையிலிருந்து முளைத்து வரும். பல பருவக் களைகள் விதைத்த வேர்த் துண்டுகள், கிழங்குகள் மூலமாகவும் பரவும். தமிழ் நாட்டின் முக்கிய களைகள். நெல் வயலில், சேற்றுப்புல் அல்லது செத்த களை, வயல் கோரை. கரிசலாங்கண்ணி, ஆலக்கீரை, நீர் மேல் நெருப்பு. நீர்த்தாமரை, நீர்க்கிராம்புக் களைகளும் தோட்டக் கால் இடங்களில் குதிரைவாலிப்புல், மாதங்கிப்புல், இஞ்சிப்புல், வக்காகட்டைப்புல், அரிசிப்புல், டில்லிப் புல், அருகம்புல், கோரை, சிலந்தி, சாரணை, மூக்குரட்டை, குப்பைக்கீரை, பருப்புக்கீரை, அம்மாம் பச்சரிசி, முதலைப்பூண்டு பசலிக்களைகளும், மானா வாரி இடங்களில் பண்ணைக்கீரை, ஊமத்தை அமலை, மேலாநெல்லி, தொய்யக்கீரை, தும்பை, கொழுஞ்சி, சுடுமல்லி, காட்டுக் கண்டங்கத்தரி, கோரை போன்ற களைகளும் வளர்கின்றன. ஒருங்கிணைந்த களைத்தடுப்பு. பயிர்களை போட்டித் தன்மை, (crop-weed competition) சாகுபடி முறை (இறவை, மானாவாரி), நடும் முறை (விதைப்பு, நடவு), பயிர்த்தன்மை (உயரம், குட்டை) மிகுதியான தூர் விடும் தன்மை, உழவியல் முறை (நிலம் பண் படுத்துதல், பயிர் இடைவெளி, உரம் இடுதல், நெல் விதை) ஆகியவற்றைப் பொறுத்தமையும், களைகளை அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கட்டுப்படுத்தலாம். இதற்கு நான்கு முறைகள் உள்ளன. அவை உழவியல் முறை, எந்திரமுறை, உயிரியல் முறை, களைக் கொல்லி முறை எனப்படும். ஒரு பருவக் களையை எந்திர முறை அல்லது களைக்கொல்லி மூலம் எளிதில் கட்டுப்படுத்தலாம். இந்நான்கு முறைகளையும் இணைத்துப் பயிர்களின் இளம் பருவத்திலேயே பலபருவக்களையை முழுமை கட்டுப்படுத்தலாம். கோடையில் ஆழமாக யாகக்