உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலி உட்கவர்பு 627

ஒலி உட்கவர்பு 627 ஒளிச் ஒளி மின்கலத்தில் (photo electric cell) விழச் செய்து பெருக்கி (amplifier), ஒலிபெருக்கி (loud speaker) ஆகியவற்றின் வழியே ஒலி மீட்கப்படும். இவ்வகைப் பதிவில், ஒலிச் செறிவு மாற்றத்திற்கேற்ற செறிவு மாற்றத்தை ஏற்படுத்தி ஒளிப்படப் பதிவு செய்தல் செறிவு மாற்று முறை (varinble density method) எனவும், ஒலியின் செறிவுக்கேற்றவாறு ஒலிப்பதிவுப் பரப்பை மாற்றிப் பதிவு செய்வது பரப்பி மாற்று முறை (variable area method) எனவும் பெயர் பெறும். சீரான வேகத்தில் இயங்கும் துருப்பிடிக்காத எஃகு கம்பியிலோ இரும்பு ஆக்சைடு பூசப்பட்ட நாடாவிலோ காந்தவியலாக ஒலியைப் பதிவு செய்து இந்தக் கம்பி அல்லது நாடாவை, அதே வேகத்தில் மீண்டும் இயக்கி மின்காந்த முறையில் ஒலியை மீட்பது இக்காலத்தில் பெரிதும் பயன்படும் முறை யாகும். இரண்டு நுட்ப ஒளி ஏற்பிகளைத் தக்க இடைவெளியில் அமைத்து ஒலியைப் பதிவு செய்து அவற்றைத் தனித்தனியே தக்க இடைவெளியில் அமைந்த இரு ஒலி பெருக்கிகளில் மீட்பதன் மூலம் ஒலிப்பதிவின்போது ஒலி மூலங்கள் இருந்த நிலை களை உணரலாம். இது திசை- தொலைவு ஒலிப்பதிவு (stereophonic sound recording) முறை எனப்படும். இவ்வாறே நான்கு நுட்ப ஒலி ஏற்பிகளைக் கொண்டு ஒலிப்பதிவு செய்து நான்கு ஒலி பெருக்கிகளில் முறையும் மீட்கும் நான்கொலி (quadraphonic) உண்டு. இம்முறைகளில் பதிவு செய்யப்பட்ட ஒலி மீட்புறும்போது, வெவ்வேறு ஒலி மூலகங்களின் உணர்வும், இடவலநிலை அவற்றின் தொலைவு உணர்வும் (illusion of depth) ஏற்படுவதால் இவ் வகை ஒலி மீட்பு, பெரிதும் விரும்பப்படுகிறது. புவியியல் ஆய்வு. புவியின் விளிம்பில் (crust) ஏற்படும் கேளா அக அதிர்வுகளை நில நடுக்க ஆய்வுக் கருவி கொண்டு ஆய்வதன் மூலம் மண்ணுக்குள் அமைத்துள்ள பாறைப் படிவமைப்புகளைப் பற்றி அறியலாம். ஒலி அதிர்வுகளின் மீளலிலிருந்து புவிப்பரப் பின் கீழ் அமைந்துள்ள கனி வளங்களைப் பற்றியும் அறியலாம். இந்த ஆய்வில், புவிப் பரப்பின் கீழ் ஒலி அலைகளை ஏற்கப் பயன்படும் கருவி புவி ஒலி ஏற்பி (geophone) ஆகும். கடல் ஆய்வு. கடல் நீர்ப் பரப்பின் கீழ் அமைந் துள்ள பாறைகள் போன்ற தடைப் பொருள்களையும், நீர் மூழ்கிக் கப்பல்களையும், கடலின் ஆழத்தையும் ஒலி அலைகளின் மீளலிலிருந்து அறியலாம். நீருக்குள் ஒலி அலைகளை ஏற்கப்பயன்படும் கருவி நீர் ஊடக ஒலி ஏற்பி (hydrophone) ஆகும். கடலின் ஆழம் அறிவதிலும், கடற்பயணங்களிலும் ஒலி அலைகளைப் பயன்படுத்தும் முறை சோனார் (SONAR) எனப் பெயர்பெறும். ஆழ்கடலில் ஏறக்குறைய 4°C வெப்ப நிலையில் உள்ள நீரின் வழியே, ஒலி அலைகள் மூலம் அ.க. 6-40அ . ஒலிமூலத்தின் திசையையும் தொலைவையும் அறியும் முறைக்கு சோஃபார் (SOFAR) எனப்பெயர். அ. ஆசப் அலி ஒலி உட்கவர்பு ஒலி அலைகளின் ஆற்றல் வெப்பமாக மாறுவதன் காரணமாக ஒலியின் செறிவு (intensity) குறையும். இம்முறைக்கு ஒலி உட்கவர்தல் என்று பெயர். ஓர் ஊடகத்தின் வழியே ஓர் அலகு நேரத்திற்கு ஓர் அலகு பரப்பில் ஒலி செல்லும் திசைக்குச் செங்குத்துத் திசையில் சராசரியாகப் பாயும் ஆற்றல் குறைவிற்குச் செறிவு வீழ்ச்சி (attenuation) என்று பெயர். ஒரு புள்ளி மூலம் (point source) ஓர் இலட்சிய ஊடகத் தில் ஆற்றலைப் பரப்புவதாகக் கொண்டால் ஒலியின் செறிவு தொலைவின் இருமடிக்கு நேர்விகிதத்தில் குறையும். மேலும், காற்றிலும், கடல் நீரிலும் ஒலி செல் லும்போது ஒலிச் சிதறல் காரணமாக ஆற்றல் குறைவு ஏற்படுகிறது. வெவ்வேறு இயற்பியல் குணங் களைக் கொண்ட ஊடகங்களின் வழியே ஒலிசெல் லும்போது எதிரொலிப்பும் ஒலி விலகலும் ஏற்படு கின்றன. இம்முறைகளின் காரணமாக குறைவு ஏற்படுகிறது. ஊடகத்தின் இயற்பியல் குணங்களுக்கும் ஒலி அலைக்கும் இடையே ஏற்படும் செயல் விளைவு (interaction) காரணமாக உட்கவர்பு ஏற்படுகிறது. ஆற்றல் ஒலி இந்தச் செயல் விளைவு ஒலியாற்றலை வெப்ப மாக மாற்றுவதால் அலையின் செறிவு குறைகிறது. இதனைப் பின்வரும் தொடர்பால் குறிக்கலாம். மூல ஒலியின் செறிவு 1. எனலாம். தொலைவில் ஒலியின் செறிவு, I=Ioe 100- தில் C என்பது செறிவு உட்கவர்பு குணகமாகும். ஒலி உட்கவர்பின் அடிப்படைக் காரணங்கள், பொருள் ஊடகங்களில் ஏற்படும் உட்கவர்பிற்கான அடிப்படைக் காரணங்கள் பின்வருமாறு: பாகுத் தன்மை (viscosity), வெப்பக்கடத்தல், வெப்பக் கதிர் வீசல், விரவல் (diffusion) என்பன. பாகுத்தன்மை. பாய்மங்கள் நகரும்போது அவை செல்லும் திசைக்கு இணையாக உள்ள அடுக்கில் செல்லும் பாய்மம் அடுத்துள்ள அடுக்கின் வழியே செல்லும் பாய்மத்தின் இயக்கத்தைத் தடைப்படுத்து கிறது. வெப்பநிலை அதிகரிக்கும்போது நீர்மத்தின்