உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலி நீரடி 633

படங்களிலிருந்து தரையடி தகவல்கள் பெறப்படுகின்றன. நிலைகளைப் பற்றிய கே. என். ராமச்சந்திரன் ஒலி நீரடி 633 ஒலிகடவாச் செவிடு செவியில் கடுமையாக அடிபடுவதால் செவிப்பறை கிழிந்து செவிச் சிற்றெலும்புகளின் தொடர்ச்சி விட்டுப் போக ஒலிகடவாச் செவிடு (traumatic conductive deafness) ஏற்படுகிறது. செவியுள் தவறுதலாகச் சென்ற பொருளைக் கூர்மையான பொருளைக் கொண்டு எடுக்க முயற்சி செய்யும்போதும் செவிப்பறை கிழியலாம். குத்துச்சண்டையின் போதும், உள்ளங்கை யால் செவிமடலோடு சேர்த்து அடிக்கும் போதும், ஆழ்கடலில் பாதுகாப்பின்றி மூழ்கும்போதும் செவிப் பறை கிழியலாம். நீரில் விளையாடும்போது, காதி னுள் நீர் இருக்கையில் செவியில் அடித்தால் செவிப் பறை கிழியும். சளி பிடிததிருக்கையில் மிக அழுத்தத் துடன் மூக்கைச் சிந்துவதாலும், தொண்டை நடுச் செவிக்குழாயில் மிக அழுத்தத்துடன் காற்றுச்செல்லும் போதும் செவிப்பறை கிழிய வாய்ப்புண்டு. காது கேளாமை. தலைசுற்றல், செவியிலிருந்து இரத்தம் வடிதல் ஆகியவை இந்நிலையின் அறிகுறிகள் ஆகும். ஒலி நீரடி டி.எம். பரமேஸ்வரன் காற்றை விட நீரில் ஒலியின் திசைவேகம் மிகுதி யாகும். நீரின் உப்புத் 'தன்மையையும் வெப்பநிலை யையும் பொறுத்து ஒலியின் திசைவேகம் மாறுகிறது. மேலும் ஆழம் மிகும் போது திசைவேகமும் மிகும். கடலுக்கு அடியில் செல்வச் செல்லப் பொதுவாக வெப்பநிலை குறையும். எனவே, ஒலியின் பாதை வளைந்து காணப்படும். இந்நிலையில் ஒரு கப்பலி லிருந்து அனுப்பப்பட்ட ஒலியை நீருக்கு அடியில் குறிப்பிட்ட தொலைவில் உள்ள ஒலி வாங்கும் அமைப்பு ஏற்க முடியாமல் போகும். சில சமயங்களில் நீரின் மேற்பரப்பு குளிர்ச்சி யாகவும் ஆழம் மிகும்போது இளஞ்சூடாகவும் இருப்பதுண்டு. இந்நிலையில் ஒலியலைகள் மேல் நோக்கி வளைகின் றன. ஒலியலை நீரின் அடிப் பகுதியில் படத்தில் காட்டியுள்ளவாறு தத்திச் செல்லும். நீருக்கடியில் ஒலியின் திசையை அறிவதற்குச் சில தனிப்பட்ட கருவிகள் பயன்படுகின்றன.கூம்பு வடிவத்தில் எக்காளத்தைப் போன்றமைந்த இணை ஒலிநீரம் யான அச்சுகளை உடைய இரு நீளமான குழாய்கள் கொண்ட ஒலி அமைப்பின் சிறு முனைகளுடன் இணைக்கப்பட்ட சிறு குழாய்கள் ஆய்வாளரின் காதுகளில் பொருத்தப்படுகின்றன. ஆனால் இக் கருவியைப் பயன்படுத்த ஓரளவு பட்டறிவு தேவை யாகும். ? நீருக்கடியில் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றி அறியவும், கடலின் ஆழம் அடிப்பகுதியின் தன்மை இவைபற்றி அறியவும் எதிரொலிப்புக்கருவி பயன்படுகின்றது. வெடிப்பு ஒலியலைகளைப் பயன் படுத்திக் கடலில் அவற்றின் திசைவேகத்தைப் பல ஆய்வாளர்கள் நுட்பமாகக் கண்டறிந்துள்ளனர். மார்ட்டி என்பார் நீருக்கடியில் நீரடி ஒலிவாங்கிகளை நேர் கோட்டு அமைப்பில் பயன்படுத்தி வெடிப்பு அலைகள் நீரில் பரவுவதை ஆய்வு செய்தார். அவர் முடிவின்படி 14.5°C வெப்பநிலையிலும் கடல் நீரின் அடர்த்தி 1.0245 கி]செ.மீ. உள்ள போதும் நீரில் ஒலியின் திசைவேகம் 1503.5 மீ/நொடி ஆகும். அதற்குப் பின்னர் உட், பிரவுன் போன்றோர் கடலுக் கடியில் 19கி.மீ இடைவெளிகளைப் பயன்படுத்தி ஆய்வுகள் செய்தனர். இவர்களின் முடிவு +0.001 நொடி நுட்பமானது. கோடையிலும் மழைக் காலத் திலும் பல ஆய்வுகள் செய்து ஒலியின் திசைவேகம் 16.95°Cஇல் 1510.4மீ | நொடி எனவும் 7°Cஇல் 1477. 3மீ/நொடி எனவும் கண்டனர். இரு நிலை களிலும் நீரின் உப்புத்தன்மை 35% இருந்தது.ஆய்வு முடிவுகளிலிருந்து ஒலியின் திசைவேகத்திற்கும் வெப்ப நிலைக்கும் உள்ள தொடர்பைப் பின்வரும் கோவை யின் மூலம் உணர்த்தலாம் எனவும் கண்டனர்.