உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636 ஒலிப்பதிவுத்‌ தடம்‌

636 ஒலிப்பதிவுத் தடம் . Rz இப்ப்ப படம் 3. ஒலிப்பதிவுக் கருவி பேச்சு ஞெகிழியால் செய்யப்பட்ட நாடாவின் மீது சிறந்த இரும்பு ஆக்சைடு ஒரே சீராகத் தடவப்பட் டுள்ளது. நாடா சீரான வேகத்துடன் ஒரு சிறிய மின்னோடியின் உதவியால் ஒட்டப்படுகின்றது.நாடா லில் முன்பே ஒலிப்பதிவு செய்தவற்றை அழிக்கக் காந்த ஆற்றலை அழிக்கும் ஒரு கருவி (wiping head ) உள்ளது. பதிவுக் கருவி (recording head), அல்லது இசையை ஒலிப்பதிவு செய்வதற்காக அமைந் துள்ளது. இது ஒலி வாங்கியிலிருந்து வரும் மின் னோட்டத்தால் ஏற்படும் மின் அதிர்வுகளைக் கொண்டு உண்டாக்கப்படும் காந்தப் புலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அந்தக் காந்தப் புலத்தைக் கொண்டு பதிவு செய்யப்படுகின்றது. நாடாவிலுள்ள காந்தப்புலம் மாறுதிசை மின்னோட்டத்தைத் தோற்றுவிக்கக்கூடியது. அந்தக் காந்தப்புல வேறு பாட்டில் அதிரும் மின்னோட்டத்தை ஏற்படுத்தி அவ்வதிர்வைத் தோற்றுவிக்கக்கூடிய ஒரு பகுதி (play back head) உள்ளது. ஒலியின் அதிர்வுக்கேற்ப மின் னோட்டத்தை மிகுந்த ஒலியாக மாற்றக்கூடிய மிகைப் பியையும் (amplifier), ஒலிபெருக்கியையும் (loud- speaker) கொண்டுள்ளது. ஒலிப்பதிவு. ஒரு நாடாப் பதிவு எந்திரத்தில் ஒலிப்பதிவு செய்யும் முறையை விளக்கலாம். இதில் ஒலிப்பதிவு இணைப்பு மாற்றியைத் (switch) தட்டிய உடனே நாடா ஒலிப்பதிவு வேகத்தில் ஒரு திசையில் ஓடுகின்றது. இதில் P.Q என்ற இரு வட்டுகள் (disc) உள்ளன. இணைப்பு மாற்றியைத் தட்டியவுடன் ஒலிப் பதிவு நாடா P என்ற வட்டிலிருந்து Q என்ற வட்டிற் குச் செல்கிறது. AB என்பவை நாடாவை ஒரே சீரான நிலையில் வைக்கின்றன. இவை சுழல் சக்கரங்களா கும். நாடா ஒரே சீரான நிலையில் - வைக்கப்பட்ட வுடன்E என்ற அழிக்கும் கருவியும் (wiping head), ஒலிப்பதிவுக் கருவி R உம், நாடாவிற்கு அருகில் தள்ளப்படுகின்றன. ஒரு மாறுதிசை மின்னோட்டம் வேகமாக மாறும் காந்தப்புலத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அழிக்கும் கருவியால் முன்பே பதிவாகியுள்ள E அமைப்புகள் கலைக்கப்படுகின்றன. ஒலிப்பதிவு மின் காந்தத்திற்கு நுண்ணவை ஒலிவாங்கியில் (micro- phone) இருந்து மின்னோட்டம் மிகைப்பியின் மூலம் வரும். செவி உணர் அதிர்வு எண் (audio frequency) அலைகளைக் கொண்ட மின்னோட்டம் நாடாவில் உள்ள காந்தப் பொருளைக் காந்தமாக்குகின்றது. இதன்காந்தத் தன்மை, ஒலிக்கு ஏற்ப அமைந்து இருக்கும். ஒலிப்பதிவு முடிந்ததும் ஓர் இணைப்பு மாற்றியின் உதவியால் நாடாவின் ஒட்டம் நிறுத்தப் படுகிறது. வேறோர் இணைப்பு மாற்றியின் உதவி யால் Qயிலிருந்து Pக்கு நாடா திரும்பிச் செல்வதற் கான அமைப்பைக் கொண்டுள்ளது. ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலியைத் திரும்பவும் பெற ஒலி மீட்பு என்ற வேறோர் இயக்கம் தேவைப் படுகிறது. ஒலிப்பதிவின்போது இயக்கிய வேகத்திலும் திசையிலும் நாடா செல்கிறது. R, என்ற ஒலி மீட்புக் கருவி நாடாவின் அருகில் வருகின்றது. அதிலுள்ள கம்பிச்சுருள் நாடாவில் உள்ள வேறுபட்ட காந்தப் புலத்தால் மின்தூண்டல் அடைகின்றது. இதனால் ஏற்படும் அதிர்வு மின்னோட்டம், மிகைப்பிக்கு அனுப்பப்பட்டுப் பிறகு ஒலிபெருக்கியை (loud speaker ) அடைகின்றது. எனவே ஒலிபெருக்கியில் பதிவு செய் யப்பட்ட ஒலியை மாறுதல் இன்றிக் கேட்கலாம். ஒலிப்பதிவுத் தடம் வி.சி. பழ னி திரைப்படப் பதிவுச் சுருள்களில் ஒலிக் குறியீடுகளை ஒளிச்செறிவு அல்லது காந்தப் புல வேறுபாடுகளாக மாற்றி அவற்றைப் பதிவு செய்து படத்தைத் திரை யிடும்போது அவற்றை மீண்டும் ஒலிக் குறியீடுகளாக மாற்றுவர். திரைப்படச்சுருளின் ஓரங்களில் இதற் காசு ஒதுக்கப்பட்டுள்ள மெல்லிய பட்டையிடம்