உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 ஒலிப்பதிவு

638 ஒலிப்பதிவு விளக்கு நாடா காந்தம் வில்லை எதிர்ப்படி 111318 ATU நேர்படி ஒளித்தடத்தை உருத்துலக்கம் (develop) செய்யும் போது ஏற்படும் தவிர்க்க முடியாத குறைபாடுகளின் காரணமாக ஒலியின் தன்மையில் குலைவு ஏற்படு கிறது. பதிவு செய்யும்போதும், படி எடுக்கும்போதும் சரியான அளவில் ஒளியைப் பயன்படுத்துவதன் மூலம் இக்குலைவைக் குறைக்கலாம். உருத்துலக்கும் செயல் முறைகளை நுட்பமாகச் சீர்படுத்தியும் குலைவைக் குறைக்கலாம். ஒளிப்படத்தகட்டின் குறுநொய்க் கட்டமைப்பின் காரணமாகவும் தேவையில்லா ஒலிகள் ஏற்படும். ஒளிப்படலத்தின் கீறல் அல்லது இருந்தாலும் இவை தோன்றும். ஒளிப்பதிவு செய்யும் போதும் ஒலி மீட்புச் செய்யும்போதும் படச்சுருள் சீராக ஓட்டப்படாவிட்டால் ஒலியின் தரம் குறைந்து விடும். தூசு முப்பரிமாண ஒலிகளை வெளியிட ஒரே திரைப் படச் சுருளில் மூன்று அல்லது நான்கு காந்த ஒலித் தடங்கள் அமைக்கப்படுகின்றன. காந்த நாடாப் பதிவி (magnetic tape recorder) செயல்படுவதைப் போலவே இவற்றிலிருந்து ஒலியை மீட்கும் கருவியும் செயல்படுகிறது. கே.என். ராமச்சந்திரன் படச்சுருள் நாடா அமைப்பு படம் 2 அகலம் இதற்கு உதவுகிறது. 35 மில்லி மீட்டர் உள்ள திரைப்படச்சுருளில் ஒலித்தடம் 0.1 அங்குல அகலமுள்ளதாகப் பற்சக்கரத் துளைகளை ஒட்டி உட்புறமாக அமைந்திருக்கும். மாறு திரைப்படம் திரையிடும்போது ஒலிமீட்புச் செய்ய ஒளிமின்கல அமைப்புப் பயன்படுகிறது. ஒரு கூரிய ஒளிக்கற்றைத் திரைப்படச்சுருளின் ஒலித்தடத்தின் வழியே சென்று ஓர் ஒளிமின் கலத்தில் விழுகிறது. ஒலித்தடத்தின் அடர்த்தி அல்லது பரப்பு படுவதன் காரணமாக ஒளி மின்கலத்தில் விழும் ஒளி யின் அளவும் மாறும், அதற்கேற்ற வகையில் ஒளி மின்கலத்திலிருந்து வெளியாகும் மின்னோட்டத்தின் வலியும் மாறுபடுகிறது. அந்த மின்னோட்டத்தை முறையே பெருக்கி, வடிகட்டி, சமனிகள் ஆகிய வற்றின் வழியே செலுத்தி ஒலிபெருக்கிகளில் ஒலி யாக மாற்றி வெளியிடுகின்றனர். வடிகட்டிகள், படப் படலத்தின் தன்மை காரணமாக ஒளிச்சைகை கள் இல்லாதபோதும் தோன்றும் ஒலிகளை வடிகட்டி விடும். சமனிகள் ஒலியின் அதிர்வெண் சிறப்பியல்பு களைத் தக்கபடி மாற்றியமைத்துத் திரைப்பட அரங்கில் மிகச் சிறந்த வகையில் ஒலி தோன்றுமாறு செய்கின்றன. ஒலிப்பியல் பேச்சை உருவாக்கும் ஒலிகளைப் பற்றி ஆராய்வது ஒலிப்பியல் எனப்படும். ஒலி உற்பத்தி முறைகள், உணர் முறைகள், வகைப்படுத்தல், பட்டியலிடுதல் ஒலிகளின் இயற்பியல் சிறப்புப் பண்புகள், வெவ்வேறு மொழிகளிலும் பேச்சு வழக்குகளிலும் ஒலிகளில் காணப்படும் மாற்றங்கள் ஆகியவற்றை ஆராய்வதும் இதில் அடங்கும். , உச்ச எழுத்தில் ஒலிகளைக் குறிப்பிட எழுத்துருவங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் ஆங்கில வரி வடிவங் களில் பற்றாக்குறை, காணப்படுகிறது. அவை ரிக்க ஓரளவு வழிகாட்டினாலும், பல எழுத்துகளுக்கு வெவ்வேறு உச்சரிப்புகள் இருப்பது ஒரு சிக்கலாகும். அகராதிகளில் உச்சரிப்பு முறைகள் குறியீட்டு வடி வங்களாகக் (diacritical marks) குறிப்பிடப்பட்டிருப் பதைக் காணலாம். அனைத்து நாட்டு ஒலிப்பியல் கழகம் (International phonetic Association) இந்த நோக்கத்திற்கு வகையான வேறு குறியீடுகளைப் பயன்படுத்துசிறது. . சில ஒலிகள் ஒற்றை அலகுகளாகப் புலப்பட் டாலும் அவற்றைக் குறியீட்டுக் குழுக்களாகக் குறிக்க வேண்டியுள்ளது. சில கூட்டொலிகள் ஒரே குறியீட் டால் குறிக்கப்படுகின்றன. ஆங்கிலம் தவிரப் பிற மொழிகளிலும் இக்குறியீடுகளில் சிலவற்றைப் பயன்