உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ்‌ கதிர்‌ 43

எக்ஸ் கதிர் 43 இலக்கின் அணுக்களுடன் மோதி, ஆற்றல் மாற்றம் பெற்று எக்ஸ் கதிர்களைத் தோற்றுவிக் சின்றன. சாய்வான மோதல் முதல் நேரடி மோதல் வரை பல வகைகளில் மோதல் நிகழக்கூடும். மோதல் நிலைக்கு ஏற்ப ஆற்றல் மாற்றங்களும், ஆற்றல் மாற்றத்திற்கேற்ப எக்ஸ் கதிர்களும் தோன்றுகின்றன. E என்பது ஆற்றல் மாற்றத்தின் அளவு என்றால் Ehv என்ற பிளாங்க் விதிப்படி" என்னும் அதிர்வு எண் கொண்ட எக்ஸ் கதிர் வெளிவரும். இங்கு h என்பது பிளாங்க் மாறிலி ஆகும். உயர் பீட்டாட்ரான். பீட்டாட்ரான் எனப்படும் துகள் முடுக்கியைக் கொண்டு எலெக்ட்ரான்களை வேகங்களுக்கு முடுக்கி, உயர் ஆற்றலுடன் எக்ஸ் கதிர்களைப் பெற இயலும். காண்க, பீட்டான்ரான். சாதாரண ஒளியைப் போன்றே எக்ஸ் கதிர்களும் ஒருவகை மின்காந்த அலைகளே ஆகும். ஆனால் வை கண்ணுக்குத் தெரிவதில்லை துடன் ஊடுருவுதிறன் மிக்கவை. இவற்றின் அலை நீளங்கள் மிகக்குறைவாகும் (0.02Â - 10Ā). பண்பு. என்ப எக்ஸ் கதிர்கள் பொருள்களின் வழியே செல்லும் போது பொருள்களால் உட்கவரப்படுவதால் செறிவு குறைகின்றது. உட்கவர் பொருள்களின் அணு எண் ணுக்கு ஏற்ப உட்கவர்தல் அதிகரிக்கிறது. குறைந்த அலைநீளமுடைய எக்ஸ் கதிர்கள் அதிக ஊடுருவு திறன் கொண்டவை. எக்ஸ் கதிர்கள் செறிவுமிக்க வளிமங்களை அயனியாக்கம் செய்கின்றன. எனினும் இதன் அயனியாக்கத் தன்மை மிகக் குறைவு; சில வகைப் படிகங்கள், உப்புகள் போன்றவற்றின் மீது எக்ஸ் கதிர்கள் விழும்போது உடனொளிர்வு, நின் றொளிர்வு போன்ற நிகழ்வுகள் உண்டாகின்றன. வ இக்கதிர்கள் மின்னோட்டமற்றவை ஆதலால், மின்புலத்தாலோ, காந்தப் புலத்தாலோ இவை பாதிக்கப்படுவதில்லை. இவை ஒளிப் படத்தகடுளில் வேதியியல் மாற்றங்களை விளைவிப்பதால், இவற் றைக் கொண்டு ஒளிப்படங்கள் எடுக்கலாம். இப் பண்புகள் காரணமாக, எக்ஸ் கதிர்கள் இன்று அறி வியல். பொறியியல், மருத்துவத் துறைகளில் பேருதவி புரிகின்றன. அளவிடல் செறிவு. எக்ஸ் கதிர்களின் அயனியாக்கத்திறன் மூலம் அவற்றின் செறிவு அளவிடப்படுகிறது. இதற்கு அயனியாக்கக் கலம் ஒன்றும், கால் வட்ட எலெக்ட்ரோ மீட்டர் ஒன்றும் பின்வருமாறு படுத்தப்படுகின்றன. பயன் படத்தில் C என்ற உலோகப் பெட்டிக்கு மெல்லிய அலுமினிய மூடியிட்ட W என்ற சாளரம் பொருத்தப் C W R B QE படம் 3. பட்டிருக்கிறது. செறிவு காண வேண்டிய எக்ஸ் கதிர்கள் இச்சாளரத்தின் வழியாகப் பெட்டியுள் செலுத்தப்படுகின்றன. பெட்டியின் அச்சில் உலோகத் தண்டு (R) அமைக்கப்பட்டு அது கால்வட்ட எலெக்ட்ரோ மீட்டருடன் இணைக்கப்படுகிறது. உயர்மின்னழுத்த மின்கலத் தொடர் ஒன்றின் நேர் முனை உலோகப் பெட்டியுடன் இணைக்கப்பட்டு, மறுமுனை தரையிடப்படுகிறது. பெட்டியுள் எளிதில் அயனியாக்க மடையும் ஏதாவது ஒரு வளிமம் அடைக் கப்படுகிறது. பெட்டியுள் நுழையும் எக்ஸ் கதிர்கள், அவற்றின் செறிவுக்கு ஏற்ப வளிமத்தை அயனியாக்கம் செய் கின்றன. நேர்மின் அயனிகள் எதிர்மின் முனையை நோக்கியும், எதிர்மின் அயனிகள் நேர்மின்னழுத்தம் பெற்றுள்ள உலோகப் பெட்டியை நோக்கியும் நகர் கின்றன. இதனால் ஏற்படும் அயனி மின்னோட்டம் கால்வனா மீட்டரில் விலக்கம் உண்டாக்குகிறது. காலத்திற்கும் விலக்கத்திற்குமாக வரையப்படும் வரைப்படத்திலிருந்து விலக்க வீதம் கணக்கிடப்படு கிறது. இந்த வீதம் எக்ஸ் கதிரின் செறிவுக்கு நேர் விகிதத்தில் இருக்கும். உட்கவர்தல் எண். எக்ஸ் கதிர்கள் பொருள்களால் உட்கவரப்படுகின்றன. எக்ஸ் கதிர்கள் தடித்த காரீயத் தகடுகளை மட்டுமே ஊடுருவிச் செல்ல