646 ஒலிபெருக்கி
646 ஒலிபெருக்கி பொதுப் பண்பு. ஒலிஃபின் இழைகள் சூரிய ஒளி யால் தாக்கப்படுகின்றன, பிற பல்லுறுப்பிகளைவிடப் பாலிஒலிஃபின் இழைகள் எளிதில் எரியக்கூடியன. இவற்றில் வண்ணம் ஏற்றுவது கடினமாகும்; எனவே இவற்றைத் தயாரிக்கும் முன்னர் நிறமிகளைச் சேர்த்துவிட வேண்டும். பயன், தரை விரிப்பு, திரைச்சீலை, இருக்கை மேலுள்ள திண்டு போன்ற தயாரிப்புகளில் இவை பயன்படுகின்றன. இவ்விழைகள் சணல் விரிப்புகளை விட நிலைப்புத்தன்மை, சுருங்காத இயல்பு, குறைந்த நீர் உறிஞ்சும் தன்மை, எளிதாகக் கிடைக்கும் தன்மை போன்றவற்றைக் கொண்டுள்ளன. ஆனால் இவை சணல் விலை தரை விரிப்புகளைவிட மிகுந்தும், வண்ணம் ஏற்காத தன்மையும் பெற்றுள்ளன. மேலும் வீட்டு இருக்கை அமைப் பிலும் சுவரில் ஒட்டப்படும் தாளிலும் ஒலிஃபின் இழைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொழிலகப் பயன். சணல், கற்றாழை, நைலான் முதலிய வலிய இழைகளுக்கு இணையாகப் பாலி ஒலிஃபின் கயிறுகளும், முறுக்கப்பட்ட நூல்களும் தயாரிக்கப்படுகின்றன. தொழிலக வளர்ச்சியில் ஒலிஃபின் இழைகளின் பங்கு தற்காலத்தில் பெருகி யுள்ளது. வேளாண்மை. பொறியியல், வடித்தல் (filtration) கோழிப்பண்ணை முதலியவற்றிலும் கயிறு, தடுப்பு, பை, குழாய், மீன் வலை. தார் பாய், தைக்கும் நூல் முதலியவை செய்வதற்கும் இவை பயன்படுகின்றன. மேலும் நெய்த, நெய்யப்படாத செயற்கைத் துணிகள், ஸ்பன் துணிகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. ஒலிபெருக்கி எம்.எஸ்.ஒளிவண்ணன் உ மிகைப்பியிலிருந்து வரும் மின்னலைக் குறிப்புகளை (electric signals) ஒலியாக மாற்றும் கருவியே ஒலி பெருக்கி (loud speaker) ஆகும். ஒலிபெருக்கிகள் 20 Hz முதல் 20 KHz வரை அதிர்வெண்களைக்கொண்ட கேள் ஒலிக்குறிப்புகளை (audio signals) உருவாக்கு மாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒலிபெருக்கி அமைப்பு, மின் குறிப்புகளை அதிர்வெண் பட்டைகளாக மாற்றும் ஆற்றல் மாற்றிகளையும் (transducers) ஓர் அடைப்பு (enclosure) அல்லது தடையையும் (baffle) கொண்டது. அலைக் ஒலிபெருக்கிகள், வீடுகளிலும் மகிழ்வுந்து களிலும் உள்ள திட்பக் காட்சிக்கருவிகளிலும் (stereos), தொலைக்காட்சி வானொலி ஆகியவற்றிலுள்ள அலைவாங்கிகளிலும் (receivers). மின்னணு இசைக் கருவிகளிலும், பொம்மைகளிலும் பயன்படுகின்றன. தொழில்நுட்பமுறையில் ஒலிபெருக்கிகள் ஒலிபரப்பு. ஒலிப்பதிவு நிலையங்களிலும், வட்ட (arenas), திரையரங்குகள் களிலும் பயன்படுகின்றன. வகை அரங்குகள் போன்ற பொதுவிடங் ஒலிபெருக்கிகள் பின்வரும் பண்புகளின் அடிப் படையில் வகைப்படுத்தப்படுகின்றன. கதிர்வீச்சு.ஒலி, நேரடிக் கதிர்வீச்சு முறைப் படியோ, கொம்பு வடிவு ஒலிப்பான் மூலமாகவோ. கடத்தப்படுகிறது. ஆற்றல் மாற்றிகள் ஆற்றல் மாற்றிகள். இவை இயங்கு வகை, அசை யும் மின்னக் moving armature) வகை, காந்தப் பரிமாண (magnetostrictive) வகை என மூவகைப் படும். நிலைமின்னியல் (electrostatic) கொண்மிகள். அழுத்த மின் (piezoelectric) படிகங்கள், வெங்களிகள் (ceramics), பல்லுறுப்பிகள் (polymers), ஐயனோஃ Gunar (ionophone), காற்றுத் தாரை ஆகியவை பிற ஆற்றல் மாற்றிகளாகும். இடைத்திரையின் (diaphragam) வடிவம். இடைத் திரைக் கூம்பு, தட்டை, மாடம் (dome) போன்ற வடிவங்களில் காணப்படும். . அலைவெண்களின் எல்லை. ஒலிபெருக்கிகள் ஒலி களின் அலைவெண்களைப் பொறுத்தும் வகைப் படுத்தப்படுகின்றன. அவை குறைந்த அலைவெண். நடுத்தர அலைவெண், உயர் அலைவெண் போன்றவையாகும். பொதுவாக, மூன்று வகை ஒலி பெருக்கிகளே மிகுதியாகப் பயன்படுகின்றன. அவை அசையும் சுருள் (moving coil) ஒலிபெருக்கி, கொம்பு வடிவ ஒலிபெருக்கி (horn loud speaker). நிலைமின் ஒலி பெருக்கி (electrostatic) என்பன. இச்சுருள் அசையும் சுருள் ஒலிபெருக்கி. இவ்வகையில் மின் காந்தத்தின் இருமுனைகளுக்கு இடையே ஒரு கம்பிச் சுருள் தொங்கவிடப்பட்டுள்ளது. இது குரல் கம்பிச்சுருள் (voice coil) எனப்படும். கூம்பு வடிவ இடைத்திரை முனையுடன் இணைக்கப் பட்டு, அசையக்கூடியதாக உள்ளது. ஒலி பெருக்கி யின் எதிரில் ஒலி உண்டாக்கப்படும்போது ஒலிக் கேற்ற மின்சாரம் கம்பிச் சுருளில் செலுத்தப்படுகிறது. இதனால் சுருளில் ஏற்படும் மின் அசைவு இடைத் திரைகூம்புக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள காற்றில் ஒலி அசைவு உண்டாக்கப்படுகிறது. இதனால் முன்பே உண்டாக்கப்பட்ட ஒலி உரக்க உண்டாக்கப்படுகிறது. அவ்வப்போது ஏற்படும் ஒலி வேறுபாடுகளுக்கு