648 ஒலிமிதவை
648 ஒலிமிதவை ஒவ்வொரு வகையான கணக்கீடுகளில் பயன்படுத்தப் படுகிறது. ஒப்புமை ஒலி மறுப்பு. அழுத்தத்திற்கும் பரும் ஓட்டதிற்கும் உள்ள தகவால் இது பெறப்படுகின்றது. குவிக்கப்பட்ட சுற்று உறுப்புகள் அடங்கிய, குறை அதிர்வெண் சுற்றுகளில் இது பயன்படுகிறது. ஒப்புமை ஒலி மறுப்பின் (analogous impedance) மதிப்பு, குழா யின் நீளம் அரை அலைநீளத்திற்குக் குறைவாக உள்ளபோது, குழாயின் குறுக்கு வெட்டுப்பரப்பு நன்கு மாறுபடுவதாக இருப்பினும், குழாயின் நீளத் தைப் பொறுத்துக்குறிப்பிடத்தக்க அளவு மாறுபாடு அடைவதில்லை. . க ஒலி மறுப்பு எண். இது அழுத்தத்திற்கும் திசை வேகத்திற்கும் உள்ள தகவால் பெறப்படுகின்றது. ஒப்புனம் மறுப்பைப் பரப்பால் பெருக்கக் கிடைப்பது ஒலி மறுப்பு எண் (pecific acoust'c impe dance) ஆகும். ஒலி Z= SZx எந்திரவியல் கதிர்வீச்சு ஒலி மறுப்பு.(Z,) இது விசைக்கும் திசைவேகத்திற்கும் உள்ள தகவால் பெறப்படுகின்றது. ஒலி மறுப்பு எண், பரப்பு ஆகிய வற்றின் பெருக்கற்பலனாலும், ஒப்புமை ஒலி மறுப்பு, பரப்பின் இருமடி ஆகியவற்றின் பெருக்கற்பலனாலும் எந்திரவியல் கதிர்வீச்சு ஒலி மறுப்பு (mechanical radiation impedance) அளவிடப்படுகின்றது. ஒலி மறுப்பின் ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு வகையான இணை மாற்று மின்சுற்று வரையப்பட லாம். ஒலி மறுப்புக் கொள்கையை நன்கு புரிந்து கொள்வதற்காக மட்டுமே இந்த இணைமாற்றுச் சுற்றுகள் பயன்படுகின்றன. ஒலி மறுப்பின் பரிமாணம், மின்தடையின் பரிமாணத்தைப் பெற்றிருப்பதில்லை. மின்சுற்றுகளில் மின்னிணைப்புக் கம்பி, ஆம்பியர், வோல்ட் என்பனவற்றிற்கான ஒலித் தொகுப்பு மாற்றுச் சுற்றுகளில் இணைமாற்றுகள் முறையே குழாய்கள், காற்று ஓட்டம், காற்று அழுத்தம் ஆகும். மின்சுற்றுகளின் பல்வேறு பகுதிகளில் மின்னோட்டத்திற்கும் மின்னழுத்தத் திற்கும் எவ்வாறு நேரடித் தொடர்பு உள்ளதோ, அதே போன்று ஒலித் தொகுப்பு இணைமாற்றுச் சுற்றுகளில் பரும ஓட்டத்திற்கும், அழுத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ணை ஒலி மறுப்பைப் பின்வரும் முறைகளால் அளவிட லாம்: சென்னல்லி என்பார் முதன்முதலாக ஒலி மறுப்பின் மதிப்பை ஆய்வு முறையில் அளவிட முனைந்தார். ஒரு மின் முறை மூலமாக அவர் அதிரும் திரை, அதனுடன் தொடர்பு கொண்ட காற்றுப் பொந்து ஆகியவற்றின் பயனுறு ஒலி மறுப்பைக் கண் டறிந்தார். ஆனால் அவருடைய ஆய்வில், திசை வேக வீச்சு மிகுதியாக உள்ளபோது. திரையின் . இயைவு எதிர்வெண்ணுக்கு அருகில் மட்டும் சரியான மதிப்பைப் பெற. முடிந்தது. இதன் தொடர்பாக, பல்வேறு அதிர்வெண் நெடுக்கங்களிலும் ஒலி மறுப் பைக் காண வேறு பல ஆய்வுகள் கண்டறியப்பட்டன. இயைவு அதிர்வியின் துளை ஒன்றில் தோன்றும் ஒலி மறுப்பைக் காண்பதற்கான நேரடி அளவீட்டு முறை ரிச்சர்ட்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது. கணத்துக்கள் திசைவேகம், கண அழுத்தம் ஆகியவை ஒரே சமயத்தில் அறியப்பட்டு அவற்றிலிருந்து ஒலி மறுப்பின் மதிப்பைக் காண்பதற்கான வழிமுறையை யும் அவர் உருவாக்கினார். குஸ்டர் என்பாரால் முற்றிலும் ஒலியியல் செயல் முறையைச் சார்ந்த ஒப்பீட்டு முறை உருவாக்கப்பட்டது. இம்முறையில் தெரியாத ஒலி மறுப்பு ஒன்று, அளவீடுகள் குறிக்கப் பட்டதும் மாற்றத்தக்கதும் ஆகிய மறுப்பு (கம்பளி வட்டு ஒன்றினால் மூடப்பட்ட, மாற்றத்தக்க நீளம் கொண்ட காற்று அமைப்பு) ஒன்றுடன் ஒப்பிடப்படு கின்றது. ஒலிமிதவை க. பாஸ்கரன் சு.சுந்தரம் கடலில் நிறுவப்படும் ஒரு மிகச் சிறிய ஒலிபரப்பு நிலையம் ஒலி மிதவை (sonobuoy) எனப்படும். இந் நிலையம் ஆழ்கடல் ஒலிகளைப் பெற்று அவ்வொலி களை விமானத்துக்கோ தேவைப்படும் இடத்திற்கோ அனுப்புகிறது. கடலில் நீர்மூழ்கிகள் ஏற்படுத்தும் பல் வேறு ஒலிகளைக் கண்டுபிடித்து மேலே செல்லும் விமானத்திற்குத் தெரிவிக்க இக்கருவி முக்கியமாகப் பயன்படுகிறது. தங்கி இக்கருவியின் அடிப்படைக் கொள்கை லாந்தைச் சேர்ந்த பிளாக்கெட் என்பாரால் 1941இல் உருவாக்கப்பட்டது. அமெரிக்கப் பாதுகாப்புப்படை யினரின் ஆய்வுகள் இக்கருவியின் மேம்பாட்டுக்கு வழி வகுத்தன. இரண்டாம் உலகப்போரில் தேவையான அளவில் பயன்படுத்தப்பட்ட ஒலிமிதவை மேன் மேலும் நன்கு வளர்ச்சி அடைந்தது. பல நாடுகளில் நீர்மூழ்கிகளைக் கண்டுபிடித்து அவற்றைத் தாக்கும் பணியில் ஒலிமிதவை பயன்பட்டு வருகிறது. நீர்மூழ்கிகள் நீருக்கு அடியில் மறைவாகச் செல் வதை விமானங்கள் எளிதில் காணமாட்டா. அதனால் நீர்மூழ்கிகள் விமானங்களை எளிதில் தாக்கும் தீமை உள்ளது. எனவே விமானங்கள் கடலில் ஆங்காங்கே விடப்படும் ஒலிமிதவைகளின் துணை கொண்டு நீர் மூழ்கிகளின் இருப்பிடத்தைக் கண்டுகொள்ள முடியும். ஒலிமிதவைகளை நீர்மூழ்கியைத் தாக்கும் விமானங்களின் துணை கொண்டு தேவையான