உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 ஒவ்வாமை (மருத்துவம்‌)

664 ஒவ்வாமை (மருத்துவம்) யும் தனியாக முன் முழங்கையில் 0.1 மி.லி. அளவில் தோலினுள் ஊசிமூலம் செலுத்திப் பத்து நிமிடங்கள் கவனிக்க வேண்டும். ஓர் இடத்தில் தூய உப்பு நீர் செலுத்தி அதன் விளைவையும் கவனிக்க வேண்டும். ஒவ்வாமை எப்பொருளுக்கு அப் உள்ளதோ. பொருளை ஊசிமூலம் செலுத்தும்போது செலுத்திய இடத்தைச் சுற்றி தோல் வீங்கியும் வீக்கத்தைச் சுற்றிச் சிவந்தும் காணப்படும். ஒவ்வாமை அளவைக் குறிக்கும் முறை. உப்புநீர் நிர்ணய அளவு போல் 21 மடங்கு வீக்கமும் 20 மி.மீ. சிவப்பும் இருந்தால் மூன்று மடங்கு வீக்கமும் 25 மி.மீ. சிவப்பும் நான்கு மடங்கு வீக்கமும் 30 மி.மீ. சிவப்பும் ஆறு மடங்கு வீக்கமும் 35 மி.மீ. சிவப்பும் இவ்வாறு பொருளை ஒவ்வொன்றாக ஒவ்வாமையின் அளவை அறியலாம். 1 + 2 + 3+ 4+ ஆய்ந்து மருத்துவம். ஒவ்வாமை உண்டாக்கும் பொரு ளுக்கு எதிர்ப்பாற்றலை வளர்க்க வேண்டும். அப் பொருள்களைத் தவிர்த்து வந்து ஹிஸ்ட்டமின் எதிர் மருந்து கொடுக்க வேண்டும். ஊசிமூலமும் கொடுக் கலாம். செய்யலாம். எதிர்ப்பாற்றலை வளர்க்கும் முறை. ஒவ்வாமை உண்டாக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் கூருணர்ச்சி நீக்கப்பட்ட வாக்சின் <desensitising vaccine) தனியாகத் தயார் செய்யப்படுகிறது; இதை நோய்க் கிருமிகளிலிருந்தும் தயார் வாக்சின் 1:500, 1:50 என்ற செறிவில் தயாரிக்கப்படும். முதலில் குறைந்த செறிவுடைய 1:500 வாக்சினில் 0.1மி.லி. அளவு தோலின் அடியில் ஊசி மூலம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் 0.1 மி.லி. அளவு எனக் கூட்டிப் பத்து வாரங்கள் கொடுத்து வர வேண்டும். பிறகு 1:50 செறிவில் வாக்சினை 0.1 மி.லி. அளவில் தொடங்கி 0.1 மி.லி. ஒவ்வொரு வாரமும் கூட்டிப் பத்து வாரங்கள் கொடுக்க வேண்டும். இவ்வாறு சிறிது சிறிதாக எதிர்ப்பாற்றலை மிகுதியாக்கினால் ஒவ்வாமையால் மூச்சிழுப்பு வருவதைத் தடுக்கலாம். ஒரு முறை தடுப்பு மருத்துவம் செய்தால் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நலமாக இருக்கலாம். ஒரே ஊசி மருந்தில் குறைந்தது நான்கு பொருள்களுக்கான வாக்சினைத் தயாரிக்க லாம். மருந்தோ, அதன் சிதைமாற்றப் பொருளோ, மருந்துடன் சேர்ந்துள்ள பொருளோ நோயாளி களிடத்தில் ஏற்படுத்தும் இடை வினையின் விளைவு மருந்து ஒவ்வாமை எனப்படும். மருந்தை முதல் தடவை செலுத்தும்போது அது எதிர் செனி (antigen) அல்லது எதிர்ப்பொருள் ஊக்கியாகச் செயல்பட்டு எதிர்ப் பொருள்களை (antibodies) உருவாக்குகிறது. அதே மருந்தை மீண்டும் செலுத்தும்போது எதிர்ப் பொருள் ஊக்கி, எதிர்ப்பொருளுடன் வினைபுரிந்து டை வினைப் பொருள்களை (mediators) வெளி யிடுகிறது. இவை ஒவ்வாமை வினைகளை ஏற்படுத்து கின்றன. ஒரு நோயாளிக்கு இரண்டாம் முறை எதிர்ப்பொருள் ஊக்கி செலுத்தப்பட்டால் அவருக்கு ஒவ்வாமை ஏற்படும் என்று எண்ண வேண்டியதில்லை, பலருக்குப் பெனிசிலினுக்கு எதிர்ப்பொருள் உண்டாகி யிருந்தும்கூட ஒரு சிலரே பெனிசிலினுக்குத் திடீர் ஒவ்வாமையுடையவராக உள்ளனர். மருந்து ஒவ்வாமை வினைகள், உடனடி ஒவ் வாமை, தன் ஒவ்வாமை, கலவை ஒவ்வாமை, தாமதவகை ஒவ்வாமை என நான்கு வகைப்படும். Q உடனடி ஒவ்வாமை. செலுத்தப்படும் மருந்து திசுக் களைக் கூருணர்ச்சிப்படுத்தும் (sensitizing) எதிர்ப் பொருள்களை உண்டாக்கி இரத்த வெள்ளையணுக் களில் நிலை நிறுத்துகிறது. மறுமுறை செலுத்தப்படும் மருந்து, எதிர்ப்பொருள்களுடன் சேர்ந்து மேற்கூறிய வள்ளையணுக்களை ளைத் தூண்டுகிறது. தனால் உண்டாகும் ஹிஸ்ட்டமின், பிரோஸ்டாகிளாண்டின். உடனடி ஒவ்வாமை வினைபுரியும் பொருள்கள் ஆகியவை இரத்த ஓட்டச் சீர்குலைவு, தோல்தடிப்பு, ஆஸ்த்துமா போன்ற வேண்டாத தீயவிளைவுகளை சில நிமிடங்களில் உண்டாக்குகின்றன. இவ்விளைவு கள் 1-2 மணி நேரம் நீடிக்கலாம். தகுந்த மருத்துவ ரிடம் உடனடி மருத்துவம் பெறாவிடில் பெரும் பாலோருக்கு மரணம் நேரிடும். இவ்வகை வினையை உண்டாக்கும் பெனிசிலின் மருந்துக்குப் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். தன் ஒவ்வாமை. மருந்து அல்லது அதன் சிதை மாற்றப்பொருள் உடலிலுள்ள ஒரு புரதத்துடன் சேர்வதால் உடல் எதிர்ப்பொருளை உண்டாக்கு கிறது. ஹைட்ரசீன் ஏற்படுத்தும், இணைப்புத்திசு நோய், மீத்தைல்டோபா, பெனிசிலின், ரிஃபாம்பிசின் இவற்றால் ஏற்படும் சிவப்பணு அழிவுறும் சோகை haemolytic anaenia) முதலியவை இவ்வகை ஒவ் வாமையால் ஏற்படுகின்றன. கலவை ஒவ்வாமை. உடலில் செலுத்தப்படும் எதிர்ப்பொருள் ஊக்கியும், எதிர்ப்பொருளும் சேர்ந்து பெரிய கலவைகளாக மாறிக் காம்பளிமெண்ட் (com- plement) என்ற பொருளைத்தூண்டுவதால் பல்வேறு உறுப்புகளின் இரத்த நுண் நாளங்கள் சிதைவடை கின்றன. இவ்வினை ஏற்படும் இடங்களில் இரத்த வெள்ளையணுக்கள் ஈர்க்கப்பட்டு, மேற்குறிப்பிட்ட கலவைகளை விழுங்கி ஹிஸ்டமின், ப்ரோஸ்டோ கிளான்டின் போன்ற பொருள்களை வெளியீடு கின்றன.மேலும் திசுக்களை அழிக்கும் லைசோசோமை