46 எக்ஸ் கதிர்
46 எக்ஸ் கதிர் வட்ட மேடையை அளவுகோலும், அதற்குரிய வெர்னியரும் அமைக்கப்பட்டிருக்கின்றன. படிசு மேடையின் அச் சிலேயே சுழலக்கூடிய புயம் ஒன்றின் மீது அயனிக் கலம் வைக்கப்பட்டிருக்கின்றது. படிக 6 க்குத் திருப்பும்போது புயம் 2 0° திரும்புமாறு இவையிரண்டும் பற்சக்கரங்களால் இணைக்கப் பட்டிருக்கின்றன. படிகத்தின் மீது விழும் கதிர்கள் எதிரொளிக்கப் பட்டுப் புயத்தின் மீது அமைந்த அயனிக் கலத்தை அடைந்து, அதிலுள்ள வளிமத்தை அயனியாக்கம் செய்கின்றன. இதனால் அயனிக் கலத்தோடு இணைக் கப்பட்டுள்ள கால் வட்ட எலெக்ட்ரோ மீட்டரில் விலக்கம் உண்டாகிறது. எக்ஸ் கதிரின் செறிவு விலக்க வீதத்திற்கு நேர் விகிதத்திலிருக்கும். படிகத் தால் எதிரொளிக்கப்பட்ட கதிர்கள் ஆக்கக் குறுக்கீடு செய்திருக்குமானால் அயனிக் கலத்தை அடைந்த அக்கதிர்களின் செறிவு பெரும் (maximum) நிலையிலிருக்குமாதலால் விலக்க வீதமும் பெரும அளவுடையதாக இருக்கும். அவ்வாறின்றி அழிவுக் குறுக்கீடு செய்திருக்குமானால் செறிவு மீச்சிறு நிலையிலிருக்கும். எனவே, விலக்க வீதம் சுழியாகும். சாய் கோணமாகிய 1 இன் மதிப்பைச் சுழி அள விலிருந்து தொடங்கிச் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வரும்போது 8 என்ற சாய்கோண மதிப்புக்கு விலக்க வீதம் முதல் = முறையாகப் பெரும் நிலைக்கு வருவதாகக் கொள்ளலாம். இது முதல் வரிசை (n=1) நிறமாலையைக் குறிக் எனவே 2d Sin 0, கும். 1 ஆகும். தொடர்ந்து சாய் கோணத்தை அதிகரித்துக் கொண்டே சென் றால் 1, என்ற மற்றொரு சாய்கோணத்திற்கு விலக்க ற வீதம் மீண்டும் பெரும நிலைக்கு வரும். இது இரண்டாம் வரிசை (n = 1) நிறமாலையைக் குறிக் கும். எனவே, 2d Sin ig 2 ஆகும். இவ்வாறே மூன்றாம் வரிசை நிறமாலையையும் பெறலாம். இதிலிருந்து, sin 0,: sin 0 = 1:2 என ஆகும். ஆய்வுக் குறிப்புகளிலிருந்து மேற்கூறிய விகிதம் உண்மையே எனக் காட்டினால் படிகம் பற்றிய = பிராக்கின் கருத்தும் எக்ஸ் கதிர்களின் குறுக்கீடு பற்றி அவர் கூறிய சமன்பாடும் முற்றிலும் சரியே என்றாகும். ஆய்வுகள் பிராக் கூறிய கருத்துகளை மெய்ப்பித்ததோடு எக்ஸ் கதிர்களின் அலை நீளங் களையும் அதிர்வெண்களையும் அளவிடுவதிலும் பெரு வெற்றி பெற்றன. எக்ஸ் கதிர் நிறமாலை. எக்ஸ் கதிர்களின் அலை நீளங்களும் செறிவும் நுட்பமாக அளவிடப்பட்டு அலை நீளங்களுக்கும் அவற்றிற்கு உரிய செறிவு களுக்குமாக வரைபடம் வரையப்பட்டது. படம் - 7 ல் காட்டப்பட்டுள்ளது போன்ற அமைப் பைக் கொண்டிருந்தது. பொதுவாக நிறமாலை இருவகைப்படும். ஒன்று குறிப்பிட்ட சிறும இது அலை செறிவு தற்சிறப்பு வரி தொடர்நிறமாலை படம் 7. நீளத்தைக் கொண்ட, வரிசையான பல அலைநீளங் களை உள்ளடக்கிய தொடர் நிறமாலை. மற் றொன்று அத்தொடர் நிறமாலையின் மீது அமைந்த மிக்க செறிவுடைய, குறிப்பிட்ட சில அலை நீளங் களை மட்டுமே உடைய தற்சிறப்பு வரி நிறமாலை. இவ்வரிகள் எக்ஸ் கதிர்களை வெளியிடும் இலக்கு அணுவின் தன்மையைக் குறிப்பதால் தற்சிறப்பு வரிகள் எனப்படுகின்றன. ஆகவே, ஓர் இலக்கு. பொதுவாகப் பல அலை நீளங்களைக் கொண்ட எக்ஸ் கதிர்களை வெளியிடுவதோடு அதன் தனித் தன்மையைக் காட்டக் கூடிய சில வரிகளையும் வெளியிடுகிறது என அறியலாம். ஆற்றல் மிக்க எலெக்ட்ரான்கள் இலக்கு அணு வோடு மோதி எக்ஸ் கதிர்களைத் தோற்றுவிக் கின்றன. ஆனால் எல்லா எலெக்ட்ரான்களும் ஒரே வகையான மோதலும், ஒரே அளவான ஆற்றல் இழப்பும் அடைவன அல்ல. அவை அடையும் ஆற்றல் இழப்பு, அவை அணுவோடு மோதும் கோணம், அணுக் கருவுக்கு அருகே செல்ல நேரிடும் தொலைவு இவற்றைப் பொறுத்து வேறுபடும்.E, என்பது ஆற்றல் இழப்பு, ஆனால் E, = hy, என்ற விதியின்படி ஒ1 அதிர்வு எண் கொண்ட எக்ஸ் கதிரும், E,என்றால் E, == hy, என்ற விதியின்படி ", என்ற அதிர்வு எண் கொண்ட எக்ஸ் கதிரும், இவ்வாறே -