உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி உட்கரு எதிர்வினை 679

எ.கா. பகல் சாராத் தாவரங்கள். இவ்வகைத் தாவரங்கள் அனைத்து ஒளிக்காலங்களிலும் பூக்கின்றன. தக்காளி, சூரியகாந்தி, வெள்ளரி. ஒளிக்கால உணர்வும், பூத்தல் தூண்டப்படுதலும். தாவரங்கள் ஏற்புடைய ஒளிக்காலத்திற்கு இலக்கா கும் போது இலைகள் உள்ளேற்கின்றன. இலைகள் நீக்கப்பட்ட தாவரத்தில் பொருத்தமான ஒளிக்காலம் எந்தவொரு விளைவையும் உண்டாக்குவதில்லை. போதிய ஒளி உணர்வைப் பெறுவதற்கு ஓர் இலையே தாவரம் முழுதும் பூத்தலைத் தூண்டுவத்ற்குப் போது மானது என்றும் அறியப்பட்டுள்ளது. இலைகளால் உள்ளேற்கப்பட்ட ஒளி உணர்வு தாவரத்தின் நுனி அல்லது இலைகோண மொட்டுகளில் அதன் விளைவைப் பூக்களாக வெளிப்படுத்துகிறது. இலை களால் உள்ளேற்கப்படும் ஒளியுணர்வு அவற்றில் ஓர் உயிர்வேதியியல் வினைமாற்றத்தை உண்டாக்கி, பூத் தலைத் தூண்டக்கூடிய ஒரு குறியாக மாற்றுகிறது. பின்னர் இது இலைகளிலிருந்து நுனி அல்லது பக்க மொட்டுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு பூமொட்டுகள் வளரத் தூண்டுகிறது. சைலக்ஜான் (chailachjan) என்ற அறிவியலார் இத்தகைய குறி தாவரங்களின் ஒரு ஹார்மோனைப் போன்று ளது என்று கூறி, அதற்கு ஃபுளோரிஜென் என்று பெயரிட்டார். ஃபுளோரிஜென் ஹார்மோன் இருப்ப தாகக் கருதப்படுகிறதேயன்றி, அது இதுவரை தாவ ரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அதன் வேதியியற் பண்புகள் அறியப்படவில்லை. உள் ஒளிக்காலத்தைத் தவிர ஒளியின் அளவும் ஒளித் தரமும் (quality of light) பூத்தலைக் கட்டுப்படுத்து கின்றன. பொதுவாக ஒளிக்காலத்தில் தாவரம் இலக் காகக் கூடிய ஒளியின் அளவு மிகுந்தால் பூக்களின் எண்ணிக்கையும் மிகும். ஒளிக்கற்றையின் சிவப்பு நிறமே சிறந்த முறையில் பூப்பதைத் தூண்டுகிறது. மேலும் இச்செயலில் பச்சைநிறம் ஆற்றல் அற்றும் ஊதா நிறம் சிறிதளவு ஆற்றல் பெற்றும் உள்ளன. பூப்பதில் ஒளியுணர்வுக்காலச் செயல்கள் அனைத் துமே ஃபைட்டோக்ரோம் என்னும் நிறமித் தொகுதி களின் மூலமாகவே நிகழ்கின்றன. ஒளிக்காலத்துவம் தாவரங்களின் பூத்தலைத் தூண்டுகிறது என்னும் சிறப்புப் பணியைத்தவிர, இது தாவரங்களின் காலத்திற்குக் கட்டுப்பட்ட கால மாற் றங்களை உணரக்கூடிய காலங்காட்டும் உயிர்லயங் களில் (biorhythms) ஒன்றாகத் திகழ்வதும் குறிப் பிடத்தக்கதாகும். ஒளி ஆற்றல் தி.பாலகுமார் இது பார்வையால் உணரக்கூடிய கதிர்வீச்சின் ஆற் றல் அல்லது ஒளியின் அளவு ஆகும். இவ்வொளி ஒளி உட்கரு எதிர்வினை 679 மின்காந்த அலைகளின் பண்புகளை ஒத்துக் காணப் படுகின்றது. பார்வையால் உணரக்கூடிய ஒளி 380 760 நானோமீட்டர் (nm) வரை அலைநீளத்தைக் கொண்டது. ஒளி ஆற்றல் இவ்வலை நீளங்களுக்குட் பட்ட பகுதியிலேயே அமைந்துள்ளது. ஒளிமூலம் ஒரு நொடியில் உமிழும் ஒளி ஆற்றல் ஒளிப்பாயம் (luminous flux) எனப்படுகிறது. ஒளிப் பாயத்தின் அலகு லுமென் என்பதாகும். லுமென், திறனின் அலகு வாட்டுடன் (watt) தொடர்புடையது, 5.540 × 10 108. அலை நீளமுடைய பச்சை நிற ஒளியின் 621 லுமென் ஒரு வாட்டுக்குச் சமம். ஓர் ஒளி மூலம் அனைத்துத் திசைகளிலும் ஒளிப் பாயத்தைப் பரவச் செய்கிறது. ஜா.சுதாகர் நூலோதி. Nelkon and Parker, Advanced Level physics. Arnold-Heineman Publishers, Fifth Edition, 1983. ஒளி உட்கரு எதிர்வினை அணுக்கருவில் பல புரோட்டான்களும் நியூட்ரான் களும் பிணைந்துள்ளன. எந்த ஒரு துகளும் அணுக் கருவை விட்டுப் பிரிந்து வெளியேற வேண்டுமென் றால், அது வெளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் (அதாவது அத்துகளின் பிணைப் பாற்றலுக்கு மேல்) உள்ள ஆற்றலை எவ்வாறேனும் பெற வேண்டும். அது வெளியிலிருந்து அணுக் கருவை நோக்கி வந்து அதோடு மோதும் வேறொரு துகளின் இயக்க ஆற்றலாகவோ மின்காந்த அலை ஆற்றலாகவோ இருக்கலாம். அணுக்கரு தன்னோடு மோதிய ஆற்றலை உட்கவர்ந்து தன் நிலையில் அமைதியிழந்து பிறகு சில துகள்களை உமிழ்கிறது. இந்நிகழ்ச்சியைப் பொதுவாக அணுக்கரு எதிர்வினை என்பர். அவற்றில் அவற்றில் மின்காந்த அலைகள் அணு கருவோடு மோதி நிகழ்த்தும் எதிர்வினைகளை மட்டும் சிறப்பாக ஒளி உட்கரு எதிர்வினைகள் எனக் குறிப்பிடலாம். பெரும்பாலும் காமாக் கதிர்களே ஒளி உட்கரு எதிர்வினைகளை (photonuclear reactions) நிகழ்த்துகின்றன. மோதும் காமாக் கதிரின் ஆற்றல் மிகும்போது அதன் அலைநீளம் அணுக்கருவின் விட்டத்திற்கு ஏறக்குறைய சம அளவை அடையப் பலவகை அணுக்கரு எதிர்வினைகள் நிகழ்கின்றன. அவற்றின் விளைவாக நியூட்ரான் அல்லது புரோட்டான் உமிழப்படுகிறது. சில சிறப்பு நிகழ்வுகளில் நிறை மிக்கவையான ஆல்ஃபா துகள், டிரிடியம் (tritium), டியுட்ரியம் (deuterium) போன்றனவும் அல்லது