உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702 ஒளிக்கோட்டம்‌

702 ஒளிக்கோட்டம் 41 bஇரு பிளவிற்கு இடைப்பட்ட தொலைவாகவும் கொள்ளலாம். ஒருதள ஒற்றை நிற அலைமுகப்பு கீற்றணியில் செங்குத்தாகப் படுவதாகக் கொண்டால், அவை கீற்றணியில் ஊடுருவி அச்சுப்புள்ளியில் ஒரு நடு ஒளிப் பெருமத்தினை ஏற்படுத்தும். அச்சில்லாத மற்றொரு புள்ளி படுதிசையிலிருந்து 8 கோணம் சரிந்து (படம் 6) காணப்பட்டால் அப்புள்ளியில் ஏற்படும் ஒளிச்செறிவு அங்கு வந்தடையும் அலை களின் பாதை வேறுபாட்டினைப் பொறுத்தது. (a+b} sin f=nA ஆனால் அப் பெருமச் செறிவினைக் கொண்டிருக்கும். பாதை வேறுபாடு புள்ளி D B M P படம் 5. செறிவு பங்கீடு - இரட்டைப்பிளவு நான்கு மடங்கு அதிகம். துணைப் பெருமங்களிலும் கூடக் குறுக்கீட்டுப் பெருமமும் சிறுமமும் காணப்படு கின்றன. குறுக்கீட்டுப் பெருமச் சிறுமங்களின் இடை வெளி a, b இவற்றின் மதிப்பினைப் பொறுத்தது. a,b இவற்றின் சில குறிப்பிட்ட மதிப்பீடுகளுக்குக் குறுக் கீட்டுப் பெருமங்கள் கிடைக்காமல் போகின் றன. தனக்கோட்ட விளைவுக் கீற்றணி. கோட்டக் கீற்றணி என்பது எண்ணற்ற சிறு பிளவுகளைப் பக்கவாட்டில் அடுக்கி வைத்திருக்கும் அமைப்பிற்குச் சமமாகும். அத்தகைய அமைப்பில் ஒளியலைப்பட்டு மீளும்போது கோட்டப்படிவம் கிடைக்கின்றது. ஜோசப் ப்ரான் கோபர் முதன் முதலில் எண்ணற்ற மெல்லிய கம்பிகளைப் பக்கவாட்டில் அடுக்கி ஒரு கீற்றணியை உருவாக்கினார். தற்போது கண்ணாடிப் பரப்பில் சம தொலைவுள்ள இணையான வரிகளை நுண்ணிய வைரமுனை கொண்டு ஏற்படுத்திக் கீற்றணி தயாரிக்கப்படுகிறது. வரிகள் ஒளியைத் தடுக்கவும். இடை வெளிகள் ஏற்கவும் செய்கின்றன. இத்தகைய கண்ணாடிக் கீற்றணிகள் நடைமுறையில் மிகக் குறைவு. மாறாக இவற்றின் புகைப்பட நகல்கள் தாம் கீற்றணிகள் செய்யப்பயன்படுகின்றன. இவ் வாறே எதிரொளிப்புக் கீற்றணிகளும் உள்ளன. ஆய்வுக்கூடத்தில் பயன்படும் கீற்றணிகளில் வரிகளின் எண்ணிக்கை ஒரு செண்டி மீட்டருக்கு ஆறாயிரம் ஆகும். கீற்றணியின் படிவத்தினை விளக்க மேற்கூறிய அதிர்வு வளைவு முறையினை மீண்டும் பயன்படுத்த லாம். இருப்பினும் எளிய கணக்கீடு முறையில் அதன் சிறப்பியல்புகளாவன: aஎன்பது பிளவின் அகலமாகவும், படம் 6. கீற்றணி ஒளிக்கோட்டம் } 21 3A N'N 'N IN பெருமச் n = 1,2...... என்ற மதிப்புகளுக்கு 0, 0 செறிவுத் திசைகளாகும். ஒற்றை நிற ஒளியின்றி, வெண்ணிற ஒளி பயன்படுத்தப்பட்டால், மத்திய பெருமத்தின் இருபுறமும் நிறமாலைகள் பல்வேறு படிகங்களில் தோன்றும். மேற்கண்ட கோணத்தினை என்று அதிகரிக்கத் துணைச்சிறுமங்கள் காணப்படும். இங்கே N என்பது கீற்றணி வரிகளின் எண்ணிக்கை, இரண்டு முதன்மைப் பெருமத்திற் கிடையே N. 1 துணைச்சிறுமங்களும் N-2 துணைப் பெருமங்களும் காணப்படும். கதிரின் படுகோணம் செங்குத்தாக இல்லையென்றாலும் இதனைப் போன்ற கணக்கீடுகளினால் படிவத்தினை விளக்கலாம். கீற்றணி, ஆய்வுக் கூடத்தில் நிறமாலை வரிகளின் அலை நீளங்களைக் காணப் பெரிதும் உதவுகிறது. கீற்றணி மூலம் கிடைக்கும் நிறமாலை மிகுந்த செறி வுடன் காணப்படாவிட்டாலும் மிகத்தூய்மையாக இருக்கும். மேலும் கீற்றணியின் பகுதிறன் பகுதிறன் மிக அதிகம்.