ஒளிப்படவியல் 725
பின்னும் உள்ள பொருள்களின் உருத்தோற்றமும் ஓரளவிற்குத் தெளிவாகவே இருக்கும். இவ்வாறு எடுக்கப்பட்ட படத்தில், பொருள்கள் முன்னும் பின்னும் அமைந்துள்ள நிலையை உணர முடியும்.f எண் குறைந்த நிலையில் எடுக்கப்படும் படங்களில் இத்தன்மை குறைவாகவே இருக்கும். 1 500 மேற்கூறிய இடைத்திரைத் துளையைத் தேவை யான நேரத்திற்குத் திறந்து மூடுவதற்குள்ள அமைப்பு. மூடி (shutter) ஆகும். இந்த மூடியை நொடி யிலிருந்து ஒரு நொடி வரை பல்வேறு திட்டமிடப் பட்ட கால அளவுகளுக்குள் திறந்து மூட இயலும். மேலும், ஒரு நொடிக்கு மேல் விரும்பும் அளவு நேரத் திற்கு ஒளி விடுப்புச்செல்ல B என்னும் ஓர் அமைப்பு உண்டு. இதனால், இடைத்திரைத் துளை அளவிற் கும் ஒளிச்செறிவிற்கும் ஏற்றவகையில் ஒளிப்படப் பெட்டியினுள் செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப் படுத்த முடியும். எடுத்துக்காட்டாகத் துளையின் அளவு குறைவாக இருந்தாலும் பொருளின் பொலிவு குறைவாக இருந்தாலும் ஒளிவிடுப்புக் காலத்தை உயர்த்திக் கொள்ளலாம். 』 ஒளிப்படப் பெட்டியின் மேல்பகுதியில் அமைந் துள்ள காட்சித்திரை அமைப்பு, படம் பிடிக்க வேண் டிய பகுதியை உறுதிப்படுத்திக்கொள்ள உதவுகிறது. அதற்கேற்றவாறு, ஒளிப்படப் பெட்டியை முன்னும் பின்னுமாகவோ பக்கவாட்டிலோ நகர்த்தி, காட்சியின் தேவையான பகுதியை மட்டும் காட்சித் திரையில் வைத்துக் கொள்ளலாம். இப்பகுதியின் உருத்தோற்றம் மட்டுமே ஒளிப்படப் பெட்டியினுள் சென்று ஒளிப்படச்சுருளில் பதிவாகும். ஒரு ஒளிப்படத்தைப் பதிய வைக்கத் தேவைப்படும் படச்சுருள், ஓர் உருளையில் சுற்றப்பட்டு அதன் வெளிமுனை மற்றோர் உருளையுடன் இணைக்கப் பட்டிருக்கும். வில்லையால் தோற்றுவிக்கப்பட்ட படம் ஒளிப்படப் பெட்டியினுள் வில்லைக்கு நேராக இருக்கும் படச்சுருளில் பகுதியின் மீது விழும். ஒவ்வொரு படத்திற்கும் ஒளிவிடுப்புச் செய்யப்பட்டதும் படம் விழுந்திருந்த சுருள் பகுதி உருளையில் தக்க அளவு சுற்றப்படும். படங்கள் முழுதும் எடுக்கப்பட்டு முடிக்கும் நிலையில் முதல் உருளையிலிருந்து படச்சுருளின் பெரும்பகுதி இரண்டாம் உருளைக்கு வந்திருக்கும். இதை முழுது மாக இறுகச்சுற்றி உருளையை வெளியே எடுக்க வேண்டும்.புறவொளி, படச்சுருளைத்தாக்காவண்ணம் அதன் பின்புறம் கறுப்புத்தாள் சேர்க்கப்பட்டிருப்ப துண்டு. பட அளவிலும் ஒளியுணர் தன்மையிலும் வேறு பட்ட பல வகைப் படச்சுருள்கள் நடைமுறையில் உள்ளன. குறைந்த ஒளியில் நுட்பமாகப் படங் களைப் பதிவு செய்ய மிகுநுட்பச் சுருள்களும் 16 ஒளிப்படவியல் 725 தெளிவாக மிகப் பெரிய அளவில் உருப்பெருக்கம் செய்யத்தக்க வகையில் அமைந்த ஒருவகைச் சுருள்களும் தயாரிக்கப்படுகின்றன. இச்சுருள்கள் மி.மீ. 35 மி.மீ. 60 மி.மீ போன்ற அளவுகளில் கிடைக்கின்றன. ஒளிப்படப்பெட்டியின் அளவிற்கு ஏற்றவாறு தக்க அளவுடைய படச்சுருள் களைப் பயன்படுத்த வேண்டும். ஒளியுணர் தன்மைமையைச் சுருளின் வேகம் என்றும் குறிப்பிடுவ துண்டு. இது பெரும்பாலும் ASA (American Standards Association) எண்களால் குறிப்பிடுவது மரபு . ASA 400 என்னும் படச்சுருள் ASA 100 என்னும் படச்சுருளை விட மிகுதியான ஒளியுணர் வேகம் கொண்டது. பொதுவாக படச்சுருள்கள் ASA 400, 20. 160,125,100,80, 40 போன்ற வேகங் களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கட்புலன் நிறமாலையிலுள்ள அனைத்து வண்ணங்களில் ஒளியையும் சரிவரப் பதிவு செய்யப் பன்னிறமுணர் (panchromatic) சுருள்கள் தற்காலத்தில் பயன்படு கின்றன. ஒளிப்படப்பெட்டி உண்டாக்கித் தரும் உருவம், அதில் உள்ள ஒளியுணர் தன்மை கொண்ட வேதிப் பொருள் பூசப்பட்ட படச்சுருள் அல்லது தட்டின் மீது விழுகிறது. ஒளிப்படம் எடுக்கப்பட வேண்டிய உருவத்தில் உள்ள பல்வேறு அளவு ஒளி அடர்த்திக்கு ஏற்றவாறு சுருள் தளத்தின் மீதுள்ள வேதிப் பொருள் மாற்றம் அடைகிறது. இம்மாற்றம் கண்ணுக்குத் தெரியாது. அதாவது வேதிப் பொருளில் ஓர் உள்ளுறை உருத்தோற்றத்தை உண்டாக்குகிறது. இச்சுருள் ஓர் இருட்டறையில் தோற்றுவிப்பான் அல்லது உருத்துலக்கி (developer) எனப்படும் வேதிக் கலவை நீர்மத்துடன் செயல்பட்டுக் கண்ணுக்குத் தெரியக்கூடியவாறு ஓர் உருவத்தை உண்டாக்குகிறது. டை ஒளிப்படச்சுருள் மீது பூசப்பட்ட வேதிப்பொருள் பொதுவாக, வெள்ளி ஹாலைடு புரோமைடு, ஐயோ ட்டு உப்பாகும். ஒளியால் பாதிக்கப்பட்டுப் பின்னர் தோற்றுவிப்பானுடன் செயல்படும்போது இந்த உப்பு, கருமையான வெள்ளியாக மாறுகிறது. ஆகவேதான், உருத்துலக்கப்பட்ட உருத்தோற்றத்தில் பொலிவான பகுதிகள் கருமையாகவும், பொலிவு குன்றிய பகுதிகள் அவ்வாறு இல்லாமலும் தோன்று கின்றன. இத்தோற்றம் நிலையானது அன்று, ஏனெனில், ஒளிபடாத இடங்களில் உள்ள வேதிப் பொருள்கள் முன்பிருந்தவாறே இருக்கும். இப் படத்தை இருட்டறையை விட்டு வெளியே கொண்டு வந்தால் அனைத்து இடங்களிலும் ஒளிபட்டு முற்றிலும் கருமையாகிவிடும். எனவே, உருத்துலக்கல் முடிந்ததும் படம், ஹைப்போ நீர்மத்தில் சிறிது நேரம் வைக்கப்படுகிறது. ஹைப்போ நீர்மம், ஒளியால் செயல்படாத இடங்களிலுள்ள வேதிப் பொருள்களை நீக்கிவிடுகிறது. இதனால், தோற்று விக்கப்பட்ட படம் நிலையாக இருக்கும். இப்படம் க