உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி மண்டலம்‌ 739

முடிவுகளைச் சரிபார்த்துக் கொள்ளத் தேவையான பற்பல தகவல்களைப் பெற முடிகிறது. இதன் மூலம் அவர்களின் சுற்பனைகளும் அணு அமைப்பைப்பற்றிய கருத்துக்களும் சரியானவையா என்பதையும் கண்டு பிடிக்க முடிகிறது. ஒவ்வொரு தனிம அணுவும் தனக்கே உரிய சிறப்புத் தன்மையுடன் குறிப்பிட்ட அலை நீளங் களும் சார்புப் பொலிவும் கொண்ட நிறமாலையை வெளியிடுகிறது. எனவே பல தனிமங்கள் கொண்ட ஒரு சேர்மத்தை எடுத்துக் கொண்டு அதில் சிறி தளவை ஆவியாக்கி, அதிலிருந்து வெளிப்படும் நிற மாலையைப் பதிவு செய்து, அதிலுள்ள வரிகளின் அலை நீளங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் சேர். மத்திலுள்ள தனிமங்களை இனம் காணவும். அவற்றின் விகிதங்களைக் கண்டுபிடிக்கவும் முடி கிறது. ஆய்வகங்கள், உற்பத்தித் தொழிலகங்கள், குற்றம் சார்ந்த அறிவியல் துறை ஆகியவற்றில் நிற மாலை மூலமான வேதிப் பகுப்பாய்வு பெரும்பங்கு வகிக்கிறது. மூலக்கூறு இனங்களையும் இதே போல இனம் கண்டு பகுப்பாய்வு செய்ய முடியும். ஆனால் மூலக்கூறு நிறமாலைகளின் சிக்கலான தன்மை காரணமாக இது கடினம் மிகுந்த பணியாகியுள்ளது. கே.என். ராமச்சந்திரன் ஒளி மண்டலம் சூரியனின் பரப்பே ஒளிமண்டலம் எனப்படுகிறது. தோற்றவியலாகவோ, தொலைநோக்கி வழியாகவோ காணும் வட்ட வடிவச் சூரியனே ஒளிமண்டலமாகும். நேரிடையாகக் கண்களாலோ, சிறிய தொலை நோக்கியாலோ பார்க்கும்போது இது சீரான தோற்ற முடையதாகத் தெரிகிறது. ஆனால் பகு திறன் மிகுதியாகக் கொண்ட பெரும் தொலைநோக்கியால் ஆயும்போது அது துணுக்குகளால் பின்னப்பட்டது என்பது புலப்படுகிறது. இத்துணுக்குகள் ஏறத்தாழ 1500 கி.மீ விட்டமுடையனவாக உள்ளன. புவியின் வளிமண்டலத்தின் மங்கலாக்கும் ஆற்றலால் இத் துணுக்குகளை ஆராய்வதற்குக் கடினமாக உள்ளது. சூரியத்துணுக்குகளும் சூரிய வெப்பச் சலனமும். சூரியத் துணுக்குகள் ஒளிமையத்தில் வளி இயக்கம் மேல்நோக்கியும் அதன் இருண்ட எல்லைகளில் கீழ் நோக்கியும் இருப்பதை டாப்ளர் விளைவு அளவைகள் சுட்டிக் காட்டுகின்றன. அவை பொதுவாக வெப்பச் சலனமண்டலத்தின் மிக உயர்ந்த வரிசையில் மெலெழுகின்ற வெப்ப வளிமத்தின் மேல் முனையாக விளங்குகின்றன. சூரியனின் வெப்பச்சலன மண்டலம் இருப்பதைப் புகைப்படங்களோடு கூடிய டாப்ளர் விளைவு அளவைகள் மெய்ப்பிக்கின்றன. ஒளி மண்டலம் 739 இம்மண்டலம். இருண்ட வெற்றிடங்களால் பிரிக்கப்பட்ட ஒழுங்கற்ற வடிவமுடைய ஒளியுடன் கூடிய வளிப்பகுதிகளாக இருப்பதை அறிவுறுத்து கிறது. உண்மையில் இருண்ட பகுதியின் வளிம அடர்த்தி, ஒளிப்பகுதிகளின் வளிம அடர்த்தியை விடச் சிறிதளவே வேறுபடுகின்றது. உள்ளிருந்து, அப்போதுதான் மெலெழுந்து வெப்ப வளிமத்தைக் கொண்டிருப்பதால் சூரியத்துணுக்குகளின் மையம் ஒளிமிக்கதாகத் தோற்றமளிக்கிறது. இவற்றின் டைவெளிகள், வெப்பச் சலன மண்டலத்தில் கீழ் நோக்கிச் செல்லும் குளிர்ந்த வளிமத்தைக் கொண் டுள்ளன. இப்பகுதிகளில் உள்ள வளிமம், குளிர்ந்த நிலையில் இருப்பதால் குறைந்த வீசு கதிர் ஆற்ற லுடன், மேல்நோக்கிச் செல்லும் வளிமத்தைவிட இருண்டு காணப்படுகிறது. சலன புவியின் வளிமண்டலத்தில், ஒரு வெப்பப் பரப்பிலிருந்து மேல்நோக்கிச் செல்லும் வளிமம் தோன்றுவதை நன்கு உணரலாம். சூரியனின் கதிர்வீச்சு அடிக்கடி புவியின் பரப்பை. அதன்மேல் அடுத்துள்ள காற்றை விடப் பெருமளவு வெப்பப் படுத்துகிறது. இந்நிலப் பரப்பைத் தொடும் வளிமம் வெப்பமாகி, விரிவடைந்து, மிதந்து வெப்ப வளிம மாக மேலெழுந்து புவியின் வளிமண்டலத்தில் வெப்பச் மண்டலத்தைத் தோற்றுவிக்கிறது. வெப்பச் சலன மண்டலத்தின் மேல்நிலை வழக்கமாக 3000 அடி உயரத்தில் உள்ளது. இவ்வெப்பக் காற்று மேல் நோக்கிச் செல்லும்போது அதன் வெப்பம் குறைந்துகொண்டு செல்லும். ஈரப்பதம் குளிர்ந்து, சுருங்கி நீர்த்துளிகளாகமாறி மேகத்தையும் மழையை யும் தோற்றுவிக்கிறது. சில சமயங்களில் வளிமண்ட லத்தில் மேல் நோக்கிச் செல்லும் காற்றின் மேல் பரப்பில் மட்டும் இந்த நெருக்கம் நிகழ்கிறது. அப் போது அந்த மேல்பரப்பு தனித்த மேகப் பகுதியாகக் காணப்படும். வெப்பச் சலன மண்டலத்தைக் குறிக் கும் இம்மேகப் பகுதிகள் சூரியனின் வெப்பச் சலன மண்டலத்தை ஒத்துள்ளன. ஒவ்வொரு மேகமும் சூரிய ஒளி மண்டலத்திலுள்ள ஒளிமிகுந்த சூரியத் துணுக்குகளை ஒத்துள்ளது. . மேம்பட்ட சூரியத் துணுக்குகள். சூரிய நிற மாலையின் டாப்ளர் விளைவு அளவைகள், சூரிய மேற் பரப்பிலுள்ள வளிமங்களின் பெரிய அளவு இயக்கங் களை வெளிப்படுத்துகின்றன. இவ்வியக்கங்கள் சூரியத் துணுக்குகளிலுள்ள வளிமங்களின் இயக்கத்தை ஒத்துள்ளன. ஆனால் இவை மிகத் தொலைவு நீட்டிக் கொண்டும் நீண்ட நேரம் நீடித்துக் கொண்டும் உள்ளன. இந்த இயக்கங்களால் சூரியனின் முழுப்பரப்பும் வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கப் படுகிறது. இப்பகுதிகளின் மையத்தில் இருந்து வெளி நோக்கி அவற்றின் எல்லைகளுக்கு வளிமம் செல் வதை, டாப்ளர் விளைவு முடிவுகள் குறிப்பிடுகின்றன. அண்மைக் காலத்தில் முன்னேற்றமடைந்த டாப்ளர்