உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760 ஒளியியல்‌ உரு

760 ஒளியியல் உரு பொருளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் வில்லை பொருளருகு வில்லை என்றும் கண்ணுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் வில்லை கண்ணருகு வில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றன. கண்ணருகு வில்லை ஒற்றையாக இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்பாக இருந்தால் நிறப்பிறழ்ச்சி (chromatic aberration), ஒற்றை நிறப்பிறழ்ச்சி (mono chromatic aberration) போன்ற உருக்குறைபாடுகளை நீக்கலாம். மேலும் உருப்பெருக்குந் திறனையும் பார்வைப் புல்த்தையும் (field of view) பெருகச் செய்யலாம். பிறழ்ச்சி. வில்லையிலிருந்து பொருள், உரு இவற்றின் தொலைவுகளுக்கிடையேயுள்ள தொடர்பு களைப் பெறும்போது வில்லையின் இடையிடம் குறைவாக உள்ளது என்றும், பொருளிலிருந்து வரும் கதிர்கள் முதன்மை அச்சுடன் (principal axis) ஏற் படுத்தும் கோணம் குறைவாக உள்ளது என்றும் கருதப்படுகின்றன. எனவே புள்ளிப் பொருளின் உரு புள்ளியளவாகவே உள்ளது. ஆனால் நடைமுறையில் பயன்படும் வில்லைகளின் இடையிடம் மிகுதியாக உள்ளது. புள்ளிப் பொருளில் உருவை உண்டாக்கு வதற்கு அச்சருகுக் கதிர்களோடு ஓரக்கதிர்களும் சேர்ந்து (marginal rays) கொள்கின்றன. வில்லையில் ஒளிவிலகல் நிகழ்ந்தபிறகு இந்த இரண்டு வகையான கதிர்களும் முதன்மை அச்சில் ஒரு புள்ளியில் தொடா மல் வெவ்வேறு புள்ளிகளில் தொடுகின்றன. எனவே புள்ளிப் பொருளின் உரு புள்ளியாகத் தோன்றாது. ஒரு வில்லையின் குவியத் தொலைவு வெவ்வேறு வண்ணங்களுக்கு வெவ்வேறாக இருக்கும். ஆகையால் வெண்மை நிறப் பொருளிலிருந்து புறப்படும் கதிர்கள் வில்லை வழிச் சென்று முதன்மை அச்சின் புள்ளியில் குவியாமல் மிகக் குறுகிய ஒரு நீள் நிற மாலையாக (linear spectrum) அமையும். இக்காரணங்களால் ஒரு பொருளின் உருபல்வேறு டங்களில் பல வண்ணங்களிலும் பல அளவுகளிலும் அமையும். பொருளின் உருவில் ஏற்படும் இக்குறை பாடு பிறழ்ச்சி எனப்படுகிறது. அலைநீளத்துடன் விலகல் எண் மாறுவதால் ஏற்படும் உருக்குறைபாடு நிறப்பிறழ்ச்சி என்றும், ஓரக் கதிர்களால் ஏற்படும் உருக்குறைபாடு ஒற்றை நிறப்பிறழ்ச்சி என்றும் கூறப்படுகின்றன. ஒற்றை நிறப் பிறழ்ச்சிகளில், கோளப் பிறழ்ச்சி, வால் விண்மீன் பிறழ்ச்சி (coma), உருட்சிப் பிழை (astigmation), வளைவு (curvature), ருக் குலைவு (distortion) என ஐந்து வகையுண்டு. இடையிடம் மிகுந்துள்ள ஒரு வில்லை அச்சருகுக் கதிரையும், ஓரக் கதிரையும் முதன்மை அச்சில் வெவ்வேறு இடங்களில் குவிப்பதால் கோளப் பிறழ்ச்சி (spherical aberration) என்னும் குறைபாடு உண்டாகிறது.0 என்னும் புள்ளி அளவுப் பொருளின் உரு ஒரு புள்ளியாக அமையாமல் 111 என்னும் நேர்கோடாக அமையும். 11. இன் நீளம் வில்லையின் அச்சுக் கோளப் பிறழ்ச்சி எனப்படும். 1 இல் ஒரு திரையை வைத்தால் இன் உரு 0 வட்டமாகத் தெரியும். I இல் உருவின் மையப்பகுதி பொலிவுமிக்கும் பாதிப்பகுதி பொலிவு குன்றியும் இருக்கும். 1 இலி ருந்து I, ஐ நோக்கித் திரையை நகர்த்தினால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உருவிற்கான வட்டம் முழுமையும் ஒரே சீரான பொலிவுடன் இருக்கும். இவ்வட்டம் தெளிவு வட்டம் எனப்படுகிறது. இத் தெளிவு வட்ட ஆரத்தின் மதிப்பு, குறுக்களவுக் கோளப் பிறழ்ச்சியின் அளவாகும். ஓரக் கதிர்களின் குவியும் தன்மையை ஏதாவது ஒரு வகையில் சிறிது குறைத்தால் ஓரக் கதிர்களும் அச்சருகுக் கதிர்களும் ஒரே இடத்தில் குவியும். ஒரு முப்பட்டகத்தில் படுகதிரும் விடுகதிரும் அவற்றின் படம் 2. படம் 1.