உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/788

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764 ஒளியியல்‌ சுழல்‌ வினை

764 ஒளியியல் சுழல் வினை அவ்வாறு பிரிக்கப்பட அடிப்படையாகும் தளத்திற்குச் சமச்சீர்மைத் தளம் என்று பெயர். சமச்சீர்மைத் தளம் கொண்ட மூலக்கூறு சமச்சீர் மூலக்கூறு என்றும், அவ்வாறில்லாத முலக்கூறு சமச்சீரிலா மூலக்கூறு என்றும் கூறப்படும். சமச்சீர் மூலக்கூறின் ஒரு பாதி மற்றொரு பாதியின் கண்ணாடிப் பிம்பத் தின் மேற்பொருந்தும் (superimposable) அமைப் புடையது. ஆனால் சமச்சீரிலா மூலக்கூறின் பாதி அவ்வாறான பிம்பத்தின்மேல் பொருத்துவதில்லை. டார்ட்டாரிக் அமிலத்தின் மாற்றியங்கள் வெவ் வேறு வடிவமைப்புக் கொண்டுள்ளன. இதன் சமச்சீர் மூலக்கூறு வடிவையும் சமச்சீரிலா மூலக்கூறு வடிவை யும் பின்வருமாறு குறிப்பிடலாம். இவ்வாறே சமச்சீர்மை மையத்தையும் விளக்க லாம். மூலக்கூறு வடிவின் ஏதேனும் ஒரு புள்ளியை அடிப்படையாகக் கொண்டு ஒரு திசையில் கோடு இழுத்தால் எதிர்ப்படும் அணுக்கள் அல்லது அணுத் தொகுதிகள். அதன் எதிர்த்திசையில் கோடு இழுக்கப் பட்டால் தொலைவில் அதே அணுக்களோ அணுத் தொகுதிகளோ அமைந்திருக்குமானால் அப்புள்ளி சமச்சீர்மை மையம் எனப்படும். இதைப் பின்வரும் எடுத்துக்காட்டுகள் விளக்கும். H3 C H அதன் ஆடிப் பிம்பமும் மாற்றியங்களாக அமையும் அவை இரண்டும் மேற்பொருத்தம் அற்றவையாக இருக்கும். ஒளிச்சுழற்சித் தன்மை பெற்றிருக்கும் மூலக்கூறு களில் சமச்சீரிலாக் கார்பன் அணுவில் ஏதேனும் ஒன்றே இருக்கும். இத்தகைய மூலக்கூறுகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிய அமைப்புகளைக் கொண்டுள்ளன. மாற்றியங்களின் மூலக்கூறு வாய் பாடுகளும் அமைப்பு முறைகளும் ஒன்றையொன்று ஒத்துள்ளன. இவை இயற்பியல், ளேதிப் பண்புகளில் வேறுபடாமல் ஒளிச்சுழற்சித் தன்மையில் மட்டும் வேறுபடுகின்றன. இவை ஒளிசார் மாற்றியங்கள் (enantiomers) எனப்படும். மூலக்கூறுகளின் இப் பண்பு ஒளிசார் மாற்றியத்தன்மை என்று குறிப்பிடப் படுகிறது. சமச்சீரிலாக் கார்பன் அணு ஒன்று கொண்ட ஒளிச்சுழற்சிச் சேர்மத்திற்கு எடுத்துக்காட்டு லாக்ட் டிக் அமிலமாகும். இதில் கார்பனுடன் H, OH, CH,, COOH ஆகிய வெவ்வேறான அணுக்களும், அணுத் தொகுதிகளும் இணைந்துள்ளன. இச்சேர்ம மூலக் கூறு பின்வரும் இரு அமைப்புகளைக் கொண்டுள்ளது. இவ்விரு அமைப்புகளும் தங்களுக்குள் மேற்பொருத்த மின்றி உள்ளன. ஒன்றின் கண்ணாடிப் பிம்பமாக மற்றது அமைந்துள்ளது. ஒரு வடிவம் மற்றதன் ஆடிப் பிம்பத்துடன் மேற்பொருத்தம் கொண்டிருப் பதை அறிந்துகொள்ளலாம். H3 C H- CO CH₂ CH2 CH3 COOH சமச்சீர் மூலக்கூறு CH3 HO_( HO-C-H CO. CH3 CH3 NH H கண்ணாடி COOH H-C-OH | CH3 சமச்சீரிலா மூலக்கூறு H வான்ட் ஹாஃப்-பெல் சுருத்துக்கேற்ப, கரிமச் சேர்மங்களின் கார்பன் அணு மையமாக அமைந் திருக்க அதன் நான்கு பிணைப்புகளும் நான்முகி மூலைகளை நோக்கித் திசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு மூலக்கூறில் நான்கு பிணைப்புக்களும் வெவ் வேறான அணுக்களுடனோ அணுத்தொகுதி களுடனோ இணைக்கப்பட்டிருந்தால் அந்தமூலக்கூறு சமச்சீரிலா மூலக்கூறு எனப்படும். அவ்வாறான கார்பன் அணு சமச்சீரில்லா கார்பன் (assymetric carbon) எனப்படும். சமச்சீரிலா மூலக்கூறு வடிவமும் மேற்குறிப்பிட்டதில் ஒன்று வலஞ்சுழி லாக்ட்டிக் அமிலமாகவும், மற்றது இடஞ்சுழி லாக்டிக் அமில மாகவும் இருக்கும். வலஞ்சுழி அமைப்பு (+) அல்லது d - எனும் குறியீட்டாலும், இடஞ்சுழி அமைப்பு (-) அல்லது 1 - என்ற குறுயீட்டாலும் குறிக்கப்படுகின்றன. (+) அமிலம் திசைமுக ஒளியை வலக்கைப்புறமாகவும், (-) அமிலம் இைடக்கைப் புறமாகவும் திருப்பு கின்றன. இவை இரண்டும் தவிர மூன்றாம் யான லாக்டிக் அமிலமும் உண்டு. இது சுழற்சித் தன்மையின்றி உள்ளது. இது d - லாக்டிக் வகை ஒளிச்