உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/793

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளியியல்‌ நேரிலா 769

. அதிர் வரை கலப்பும் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளன. வெண் கூட்டல் கலப்பு 185 நானோமீட்டர் குறைந்த அலை நீளங்களில் பயன்படுத்தப்பட் டுள்ளது. கண்ணுக்குப் புலனாகும் கதிர்களையும் கீழ்ச்சிவப்புக் கதிர்களையும் உண்டாக்க அதிர்வெண் வேறுபாட்டுக் கலப்பைப் பயன்படுத்தலாம். இம் முறையில் 2 மி. மீ. வரை அலை நீளமுள்ள கதிர் வீச்சுகள் உண்டாக்கப்பட்டுள்ளன. படு அலைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிர்வெண்ணை மாற்ற முடியுமானால் உருவாக்கப்பட்ட அலையின் அதிர்வெண்ணும் மாற்றக் கூடியதாயிருக்கும். இந்த அமைப்பை உயர் பகுதிறன் நிறமாலையியல் கருவி களுக்கு ஏற்ற ஒளி மூலமாகப் பயன்படுத்தலாம். துணை அலகு உற்பத்தி. இது அதிர்வெண் கூட்டல் கலப்பின் தலைகீழ்ச் செயல்முறையாகும். இதில் '3 அதிர்வெண்ணுள்ள ஓர் ஒற்றை உள்ளீட்டு என்னும் குறைந்த அதிர்வெண் களுடைய இரண்டு அலைகளாக மாற்றப்படுகிறது. இங்கு vs = v; +v2, K, = K, + K, என்னும் கட்டப் பொருத்த விதிமுறை நிறைவு செய்யப்படுவதைப் பொறுத்து 1, V2 ஆகியவற்றின் எண்மதிப்புகள் அமையும். பொதுவாக ஒரு குறிப்பிட்ட பரவல் திசைக்கு ஒரு நேரத்தில் இரண்டு அதிர்வெண்களுக்கு மட்டுமே மேற்காணும் விதிமுறை நிறைவு செய்யப் படும். கட்டப்பொருத்த விதிமுறைகளை மாற்றுவ தன் மூலம் தனிப்பட்ட உயர் அலை நீளக் கதிர்களின் அதிர்வெண்களை மாற்றலாம். துணை அலகு உருவாக்கத்தைக் குறைந்த அதிர்வெண்ணுள்ள அலைகளை உருப்பெருக்கம் செய்யவும். ஓர் அலை வாங்கியிலும். அதிர்வெண் மாற்றக்கூடிய கண் ணுக்குத் தெரியும் ஒளி அல்லது கீழ்ச்சிவப்புக் கதிர் களின் மூலமும் பயன்படுத்தலாம். அலை ஒளியியல் திருத்தம். இரண்டாம் வரிசை முனை வாக்கத்தின் அதிர்வடையாத ஆக்கக் கூறு ஒரு மின் னழுத்தத்தை உண்டாக்குகிறது. இது ஒளியியல் திருத்தம் (optical rectification) எனப்படும். இது மிகச்சிறிய அதிர்வெண்களில் செயல்படும் மின்சுற்று களில் ஏற்படும் திருத்தத்தை ஒத்ததே. மிக நுண்ணிய லேசர் துடிப்புகளின் உதவியுடன் மிக நுண்ணிய மின் துடிப்புகளை உண்டாக்க இச்செயல் முறை பயன் படுகிறது. இதன் மூலம் சில பைகோ நொடிகளே (pico seconds) நீடிக்கும் நுண்ணிய மின் துடிப்புகளை உண்டாக்க முடியும். - மூன்றாம் வரிசை இடைவினை. இவை பல வகையான நேர்போக்கற்ற விளைவுகளை உண்டாக்கு கின் றன. நான்கு அலைத் துணை அலகுக் கலப்பில் v, = vi+v,+v, என்னும் வடிவிலான அதிர்வெண் கூட்டல் - கழித்தல் கூட்டிணைப்புகளின் அதிர்வெண் களைக் கொண்ட அலைகளை உண்டாக்கும் இடை வினைகள் பங்கு கொள்கின்றன. Ks = K, ±K, ±K; என்பது இதற்கான கட்டப் பொருத்த விதிமுறை ஒளியியல் நேரிலா 769 யாகும். நேர்கோட்டில் அமையாத கிளர்வூட்டு (pump) ஒளிக் கற்றைகளைப் பயன்படுத்தி நீர்மங் களில் கட்டப் பொருத்தம் வழக்கமாக உண்டாக்கப் படுகிறது. வளிமங்களில் கட்டப் பொருத்தத்தை உண்டாக்க உட்கவர் ஒத்ததிர்வுகளுக்கு அண்மை யிலுள்ள முரணிய பிரிகைகள் பயன்படும் அல்லது முரணிய பிரிகை காட்டும் வளிமக் கலவைகள் பயன் படுகின்றன. இரண்டாம் வரிசைக் கலப்புக்குப் பயன் படும் திண்மங்களைவிட வளிமங்கள் குறைவான மற்றும் மிகுதியான அலைநீளக்கதிர்களைத் தம் மூடாகப் பெருமளவில் பரவவிடுவனவாகும். அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் துணை அலகுக் கலப்பு இடைவினைகளை ஒரு பரந்த நெடுக்கமுள்ள அலைநீளங்களில் நிகழ்த்த முடிகிறது. V V1~V2-V3 என்னும் வகையைச் சேர்ந்த நான்கு அலைக் கலப்புச் செயல்முறைகள் 25 மைக்ரோ மீட்டர் அளவில் அலைநீளமுள்ள தொலைக் கீழ்ச் சிவப்புக் கதிர் வீச்சுகளை உண்டாக்கப் பயன்படுகின்றன. அதிர்வெண் கூட்டல் கலப்பும் மூன்றாம் அடுக்குச் சுர உருவாக்கமும் வெற்றிடப் புறஊதா வரையான கதிர்வீச்சுகளை உண்டாக்க உதவுகின்றன. மேலும் மிகுவரிசைச் செயல்முறைகளின் மூலம் 38 நானோ மீட்டர் வரை அலைநீளக் கதிர்கள் பெறப்பட்டுள்ளன. உள்ளீடு கதிர்களின் அதிர்வெண்கள், அவற்றின் மடங்குகள் அல்லது கூட்டல் கழித்தல் கூட்டிணைப் புகள் நேர்போக்கற்ற ஊடகத்தின் தக்க ஆற்றல் மட்டங்களுடன் பொருந்திவிடும்போது ஒத்ததிர்வுள்ள மேம்படல் (resonant enhancement) தோன்றும். அதன் மூலம் நேர் போக்கற்ற ஏற்புத் திறன் சில சமயங்களில் நான்கு முதல் எட்டு மடங்கு வரை எண் மதிப்பில் உயருகிறது. இரண்டு ஃபோட்டான் ஒத்ததிர்வுகள் குறிப்பிடத்தக்கவை. ஏனெனில் அவற்றில் படுகதிர் அலைகளோ உண்டாக்கப்படும் அலைகளோ வலிவாக உட்கவரப்படுவதில்லை. வளிமங்களில் நிகழும் அதிர்வெண்ணை ஒத்ததிர்வுள்ள மாற்றக்கூடிய மேம்படல் வண்ண மூலம், லேசர்களை நேர் போக்கற்ற இடைவினைகளுக்குப் பயன்படுத்த இயலும். இதனால் வெற்றிடப்புற ஊதாப் பகுதியிலும் தொலைக் தொலைக் கீழ்ச் சிவப்புப் பகுதியிலும் பயன்படும் அதிர்வெண்ணை மாற்றக் கூடிய ஓர் ஒளி மூலம் கிடைக்கிறது. அணுக்களையும் மூலக்கூறுகளையும் நிறமாலையியல் மூலம் ஆய்வு செய்ய இக்கதிர்வீச்சுகள் பயன்படும். களை நான்கு அலை அதிர்வெண் கூட்டல் அலைகளின் உற்பத்தியைப் பயன்படுத்திக் கீழ்ச்சிவப்புக் கதிர் எளிதாகக் காணக்கூடிய கதிர்களாக மாற்ற முடிகிறது. இந்த இடைவினைகள் கீழ்ச்சிவப்பு நிற மாலையியல் ஆய்வுகளிலும், கீழ்ச்சிவப்பு உருத் தோற்ற மாற்றங்களிலும் பயன்படுகின்றன. மூன்று அலைக் கலப்பு முறை மூலமும் கீழ்ச்சிவப்பு அலை களைக் காணக்கூடிய அலைகளாக மாற்றலாம்.