உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 எக்ஸ்‌ கதிர்‌ ஒளியியல்‌

56 எக்ஸ் கதிர் ஒளியியல் h எனவே da = m.c ஆகும். இது ஒரு மாறிலி. தைக் காம்ப்டன் அலை நீளம் என்பர். 3) 9 = 180° என்றால் d =. ஆகும். 2h m.C எலெக்ட்ரான்கள் அனைத்துமே கட்டற்ற நிலையில் இருப்பன அல்ல. படு ஃபோட்டான் கட்டுண்ட எலெக்ட்ரானுடன் மோதுவதாகக் கொண்டால் அதன் ஆற்றல் அந்த எலெக்ட்ரானை வெளியேற்றப் போதுமானதாக இல்லாதபோது அது அணுவுடன் மோதுவதாகவே கொள்ளவேண்டும். அப்போது di க்கான சமன் பாட்டில் m. க்குப் பதில் அணுவின் எடை M ஐப் பதிலீடு செய்யவேண்டும். da - 2h MC Sin 2 2 என ஆகும். M மிகவும் பெரியதானால் da கணக்கிடமுடியாத அளவு குறைந்துவிடும். அதாவது சிதறிய கதிரின் அலை நீளத்திற்கும் படுகதிர் அலை நீளத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். இதுவும் ஓரியல் (coherent) சிதறல்தான். படுகதிரின் அலை நீளத்துடன் புதிய அலை நீளமும் காணப்பட்டால் அச்சிதறல் ஓரியலற்ற சிதறலாகும். காம்ப்டன் தன் ஆய்வுக்கு மாலிப்டினம் Ka வரியை எடுத்துக்கொண்டார். அதன் அலை நீளம் 0.708 A ஆகும். ஆய்வுச் சாலையில் செய்முறையின் போது 90° சிதறல் கோணத்தில் கிடைத்த புதிய அலைநீளம் 0.730 A° ஆக இருந்தது. எனவே da 0.730 - 0.708 = 0.022 A ஆகும். வாய்பாட்டின் படி ந 90 ஆக இருக்கும்போது dA h m.C ஆகும். இதன் மதிப்பு 0.024 A° ஆகும். செய் முறையில் பெற்ற முடிவு, கொள்கை வழிக்கணக்கிட்ட முடிவுடன் வியக்கத்தக்க அளவு ஒத்திருந்தது. மேலும் Kp வரியைப் பயன்படுத்திச் செய்த ஆய் விலும் dh= 0.022A ஆகவே இருந்தது. பொதுவாகக் குறைந்த அணு எண் கொண்ட தனிமங்களைக் கொண்டு சிதறச் செய்யும்போது புதிய அலை நீளங்களைக் கொண்ட ஓரியலற்ற சிதறலும், கனமான அதிக அணு எண் கொண்ட தனிமங்களைக் கொண்டு சிதறச் செய்யும் போது புதிய அலை நீளமில்லாத ஓரியல் சிதறலும் ஏற்படு கின்றன. எக்ஸ் - கதிர் முனைவாக்கம். அலைகள் குறுக்கு அலைகளா. நெடுக்கு அலைகளா என்பதை முனை வாக்கம் கொள்ளும் நிகழ்ச்சியால் அறுதியிடலாம். குறுக்கு அலைகள் மட்டுமே முனைவாக்கம் கொள்ளும் நிகழ்ச்சியை உண்டாக்குகின்றன. பார்க்லா என்பார் தம் ஆய்வுகள் மூலம் எக்ஸ் கதிர்கள் முனைவாக்கம் கொள்வதை எடுத்துக்காட்டி அவை குறுக்கு அலை களே என நிலை நாட்டினார். எக்ஸ் கதிர்க் குழாயிலிருந்து வெளிவரும் கதிர்கள் X அச்சுக்கு இணையான கோட்டில் அமைக்கப்பட்ட பல பிளவுகளால் (I) (slits) மெல்லிய கற்றையாக்கப் பட்டு S, என்னும் சிதறச் செய்யும் பொருளின் மீது பட்டு எல்லாத் திசைகளிலும் சிதறுகின்றன. Y அச்சுக்கு இணையான திசையில் சிதறிய கதிர்களை மட்டும் எடுத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு பிளவுகள் II அமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு Y அச்சுக்கு இணையாகப் பெறப்பட்ட கதிர்கள் S, என்ற மற்றொரு சிதறச் செய்யும்பொருள் மீது படுகின்றன. அங்கிருந்து X அச்சுக்கு இணை யாகச் சில பிளவுகளும் (III). Z அச்சுக்கு இணை யாக மேலும் சில பிளவுகளும் (IV) அமைக்கப்பட்டி ருக்கின்றன. வை S, ஆல் சிதறப்பட்ட கதிர்களில் X அச்சுக்கு இணையாக வருபவற்றையும், Z அச்சுக்கு இணையாக வருபவற்றையும் எடுத்துக்கொள்ள உதவுகின்றன. இவ்வாறு X திசையிலோ, Z திசை யிலோ வந்தடையும் கதிர்களை ஆய்வு செய்ய அயனிக்கலம் அல்லது ஒளிப்படத் தகடு அல்லது ஒளிர் திரை ஆகியவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். மேற்கூறியவாறு ஆய்வு செய்தபோது S, இலிருந்து X திசையில் வெளிவந்த கதிர்களின் செறிவு பெரும நிலையிலும் Z திசையில் வெளிவந்த கதிர்களின் செறிவு ஏறக்குறைய சுழி அளவிலுமிருந்தன. இந்நிகழ்ச்சியில் எக்ஸ்கதிர்க் குழாயிலிருந்து வெளிவந்த கதிர்க்கற்றை X அச்சுக்கு ணையான திசையில் S1இல் பட்டுச் சிதறி முனைவாக்கம் கொண்ட கதிர்களாக Y அச்சின் திசையில் வெளி வருகின்றன. ஆகவே S1 முனைவாக்கப்படுத்தும் பொருளாகச் செயற்படுகிறது. இவ்வாறு முனை வாக்கம் கொண்ட கதிர்கள் S, இல் பட்டு X திசை யில் மட்டுமே சிதறலடைந்து செல்வதையும் Z திசை யில் சிதறலடைந்து செல்லாததையும் அறியலாம். X மற்றும் Z திசைகள் இரண்டுமே Y திசைக்கு 90° இல் அமைந்தவைதாம் என்றாலும் அக்கதிர்கள் Sஆல் X திசையில் மட்டுமே சிதறலடையக் காரண மாக அக்கதிர்கள் S., இன் மீது படுவதற்கு முன்பே முனைவாக்கம் கொண்டிருக்கின்றன என்பதையும், அவ்வாறு முனைவாக்கம் கொண்ட கதிர்களை ஆய்வு செய்யும் பொருளாக S, செயற்படுகிறது என்பதையும் அறியலாம்.