உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/807

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளியேற்றம்‌ 783

ஒளியேற்றம் 783 ரேடியோ அதிர்வெண்ணுடைய காந்தப்புலத்தில் பாதரச ஆவி வைக்கப்படும்போது கிளர்நிலையின் பிற காந்தத் துணை மட்டங்களுக்கு இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்நிலையில் வெளியிடப்படும் கதிர் வீச்சில் ச-வகை ஒளிர்தலும் அடங்கியிருக்கும். (a- வகை என்பது காந்தப்புலத் திசைக்குச் செங்குத்துத் திசையில் முனைவாக்கமுடைய ஒளிர்தல்). இவ்வகை இடப்பெயர்ச்சியைப் படம் 1 (இ) இல் காணலாம். ஈ-வகை ஒளிர் கதிர்வீச்சின் செறிவு குறைவதைக் கொண்டும் ர-வகை ஒளிர்கதிர்வீச்சின் செறிவு உயர் வதைக்கொண்டும் கிளர்நிலையில் உள்ள பாதரச ஆவியின் காந்த ஒத்ததிர்வு இடப்பெயர்ச்சியைக் கணக்கிடலாம். இந்த ஆய்வில் ஒரு வகை இரட்டை ஒத்ததிர்வு செயற்படுத்தப்படுகிறது. ஒளியியல் ஒத்ததிர்வு, ரேடியோ அதிர்வெண் ஒத்ததிர்வு ஆகிய இரண்டும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. திசையைப் உண்டாக்க படம் 1 (ஈ)இல் காட்டியுள்ளபடி வட்ட முனை வாக்கமுடைய அல்லது ர-வகைக் கதிர்வீச்சு Z -அச்சு வழியாக முன்னேறும்போது வட்ட முனைவாக்கத் தின் பொறுத்து m; = +1 அல்லது mj = - 1 என்னும் மட்டங்களில் கிளர்ச்சி உருவாக்கப் படுகிறது. ர+, ர வகைக் கதிர் வீச்சுகளைப் பயன் படுத்தி வேறு வகையான கிளர்ச்சியை லாம். இதைப் படம் 1 (உ) இல் காணலாம். இவ் வகை ஆய்வில் காந்தத்திருப்புத் திறன் மாறிலியாக உள்ளது. அணுவில் ஒத்ததிர்வு ஒளிர்தலின் முனை வாக்க விளைவில் ஏற்படும் மாறுபாட்டைக் காண் பதன் மூலம் துணை மட்டங்களுக்கு இடையேயான கிளர்வுறு காந்த ஒத்ததிர்வு டப்பெயர்ச்சியைக் கண்டு பிடிக்க இயலும். நிலையான மின்புலத்தில் பாதரச ஆவி வைக்கப் படும்போது ஸ்டார்க் விளைவு ஏற்படுகின்றது. காந்தப் புலத்தின் மீது மின்புலமும் இணையாக மேலே பொருத்தப்படும்போது m = 0 என்னும் ஆற்றல் மட்டத்திற்கும் m = 1 என்னும் ஆற்றல் மட்டத் m=1 திற்கும் இடையேயான இடைவெளியும் m = 0, m=-1 ஆகிய மட்டங்களுக்கிடையேயுள்ள இடைவெளியும் சமமாக இரா. அத்துடன் அணுக்கருத் தற்சுழற்சி காந்தத் திருப்புத்திறன் இருப்பதால், காந்தத் துணை மட்டங்கள் மேலும் பிரிவடைகின்றன. இத்தகு சூழ்நிலையில் சீமன் (zeeman) ஒத்ததிர்வு இ பெயர்ச்சியைக் காண்பதுடன் மீநுண் பெயர்ச்சியையும் காணலாம். மேற்கூறிய பெயர்ச்சிகளை ஒளிர்தலின் செறிவு, முனைவாக்க மாற்றங்களால் உணரலாம். டப் தாழ்நிலை அணு. ஒளியேற்ற ஆய்வுகள், தாழ் நிலையில் உள்ள அணுக்களின் முகப்புநிலை இணைப் பொருமையை (orientation alignment) உருவாக்கப் பயன்படுகின்றன. இவ்வாய்வுகளை அணுக்கற்றைகள் அல்லது பரும ஆவியின் மீது செய்ய இயலும். அ 201 255 H kw படம் 2. உடைய +½ - 1/2 +4 ½ படம் 2 (அ) இல் காட்டியுள்ளபடி, சோடிய ஆவி விளக்கு வெளியிடும் D, வரி வடிகட்டி நீக்கப்பட்ட வட்ட முனைவாக்கமுடைய D. வரி உள்ள கதிர் வீச்சுக் காரத்தன்மை உலோக ஆவி அடங்கிய செல்லின் (Cell) மீது செலுத்தப்படுகிறது. ஒளியேற்ற கதிர்வீச்சுத் திசைக்கு இணையாகக் காந்தப்புலம் (H) அமைக்கப்பட வேண்டும். செல்லின் வழியாக ஊடுருவிச் செல்லும் ஒளியின் செறிவைக் கண்காணிக்க வேண்டும். இம்முறையில் தூண்டப் பட்ட இடப்பெயர்ச்சிக்குத் தேர்வு விதி உண்டு. அதன் மூலம் A mj = +1 அல்லது - 1 ஆக இருக்கலாம். ஆனால் இரண்டுமாக இருக்கக்கூடாது. இத்தேர்வு விதி வட்ட முனைவாக்க விளைவின் திசையைப் பொறுத்தும், காந்தப்புலத் திசையைப் பொறுத்தும் படம்2 (ஆ) ல் காட்டியுள்ளவாறு அமையும். . தாழ்நிலை. ஒன்றிலிருந்து டப்பெயர்ச்சி அடைந்து கிளர்வுறு நிலையை அடைகிறது. ஆனால் கதிர்வீச்சை வெளியிட்டு மீண்டும் தன்நிலை அடையும்போது இரு துணை மட்டங்களுக்கும் திரும்பி விடும். முதலில் ஒளியேற்ற கதிர்வீச்சில் வைக்கப்படும்போது ஆவி செல்லின் ஒளி புகாத் தன்மையைக் காணலாம். அணுக்கள் உட்கவர் நிலை களில் இருந்து வெளியேற்றப்படுவதால் ஊடுருவும் கதிர் வீச்சின் செறிவு உயர்கிறது. இது வெளி யேற்றுதல் மீளுதல் ஆகியவற்றிற்கிடையே சமநிலை ஏற்படும் வரை நிகழும். இருளில் குறிப்பிட்ட நேரம் மீள் நிலை எய்த ஏற்பளித்தால், கதிர்வீச்சு வெளி யிடுதலைக் காணலாம். மீண்டும் ஒளியேற்றும்போது ஆவி செல்லின் ஒளிபுகாத் தன்மை உயர்கிறது. இது மீள் நிலை எய்திய அணுக்கள் மீண்டும் வெளியேற்றப் படுவதால் நிகழ்வது.