உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/813

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிர்‌ மின்னிறக்கம்‌ 789

இடப்பெயர்ச்சி வேகம் பெருகித் தணிப்புச்செயல் மேம் படத் தொடங்கிவிடுகின்றன. பல ஆக்சைடுகள், சல்ஃபைடுகள், செலினைடு கள், டெலூரைடுகள், ஆர்செனைடுகள், பாஸ்ஃபைடு கள் ஆகியவற்றில் ஒளிர்வு மையங்களுக்கு எலெக்ட் ரான் இயக்கத்தின் மூலம் ஆற்றல் மாற்றப்படுகிறது. இவற்றில் துத்தநாக சல்ஃபைடு விரிவாக ஆராயப் பட்டுள்ளது. எதிர்மின் முனைக்கதிர்க்குழாய்களிலும், மின் ஒளிர்வு விளக்குகளிலும் அது ஒளிர்பொருளாகப் பயன்படுகிறது. துத்தநாக சல்ஃபைடில் Ag+Cu+ போன்ற ஒற்றை இணைதிறன் தூண்டிகள் படுகின்றன. அவைZ.*+ அயனிகளின் டங்களைப் பிடித்துக் கொள்கின்றன. மின் நடுநிலையைப் பேணZn'+க்குப் பதிலாக A+' க்குப் பதிலாக CI- போன்ற அணிக்கோவை அயனிகளைப் பொருத்த வேண்டியுள்ளது. இத்தகைய கூடுதல் அயனிகள் துணைத்தூண்டிகள் (coactivators) எனப்படுகின்றன. கே.என்.ராமச்சந்திரன் கலக்கப் நூலோதி. R.S. BeckerTheory and Interpreteation of Fluorescence and Phosphorescenc2, Wiley Intersci- ence, Newyork, 1969. ஒளிர் மகுடம் சூரியனின் செந்நிறப்புரைக்கு (chromosphere) அப் பால் சூரிய மண்டலத்தின் இறுதி எல்லைப் பகுதியில், பல மில்லியன் கி.மீக்குப் பரவியிருக்கும் புகைபோன்ற வெண்மை நிறத்தையுடைய ஓர் ஒளிவட்டமே சூரியன் ஒளிர்மகுடம் (corona) எனப்படும். சூரிய மண்டலத் தின் மேல் கிரீடம் போல் தோற்றமளிப்பதால் இதை ஒளிர்மகுடம் எனவும் கூறுவதுண்டு. ஆனால் உண்மை யில் மகுடம் போன்ற தன்மை இல்லாமல், ஓரிடத்தில் பெருத்தும் ஓரிடத்தில் சிறுத்தும் ஒரு பக்கம் ஒளி மிகுந்தும் ஒரு பக்கம் ஒளி மங்கியும் தோற்றமளிக்கும். சூரியன் முழு மறைப்பு ஏற்படும் ஒரு சில நிமிடங் களில் வானியல் ஆய்வாளர்கள், படங்கள், காட்சிக் குறிப்புக்கள் எடுத்து ஆய்வு நடத்தினர். ஆனால் தற் காலத்தில் அனுப்பப்படும் பல விண்வெளிச்சாதனை கள். ஓ.எஸ்.ஓ. (orbiting solar observatory) பலூன்கள், ஸ்கைலாப் ஏவூர்தி (skylab space craft ) போன்றவை திரட்டி அனுப்பும் செய்திகளிலிருந்தும், படங்களிலிருந்தும் தகவல்கள் திரட்டப்படுகின்றன. மேலும் கதிரியக்கத் தொலைநோக்கிகள் (radio telescopes) மூலமும் கதிரியக்க அலை நீளங்களைக் கொண்டும் ஆய்வுகள் நடத்துகின்றனர். ஒளிர்மகுடம், பொதுவாக K-ஒளிர்மகுடம் அல்லது உள்ஒளிர்மகுடம் (K-corona or inner corona) ஒளிர் மின்னிறக்கம் 789 என்றும்,E ஒளிர்மகுடம் அல்லது வெளி ஒளிர்மகுடம் (F-corona or outer corona) என்றும் வகைப்படுத்தப் படுகிறது. K - வகை, 75000 கிலோ மீட்டருக்குமேல் உயர் வெப்பநிலை உடையதாகவும், தொடர்ச்சியான நிறமாலை கொண்டதாகவும். வேகமாக இயங்கு கின்ற எலெக்ட்ரான்கள் உடையதாகவும் இருக்கும். F வகை, சற்றுக் குறைவான வேகத்துடன் இயங்கும். தூசிப் பொருள்களையுடையதாகவும், உட்கவர் நிற மாலை கொண்டதாகவும், கோள்களுக்கிடைப்பட்ட வெளியில் பல மில்லியன் கிலோமீட்டர் பரப்புடைய தாகவும் உள்ளது. சூரியக் கறைகளைப் (sun spots) பொறுத்து ஒளிர் மகுடத்தின் அமைப்பு மாறுகிறது. சூரியக் கறைகள் குறைவாக இருக்கும் இடத்தில், வெள் ளொளிச் சிறகுகள் போலவும், நீண்ட கதிர்கள் போலவும், சிறு கண்ணிகள் போலவும் பல அமைப்பு களில் தோற்றமளிக்கும். கறைகள் மிகுதியாக இருக்கு மிடத்தில் சூரிய வட்டத்தைச் சுற்றிலும் அவ்வள வாகச் சீராக அமையாமல் ஆனால் சமமாகப் பரவி யுள்ளது. உள்ள 1930இலிருந்து சூரிய ஆய்வில் ஈடுபட்ட ஆய் வாளர் ஒளிர்மகுடத்தில் உள்ள வளிமத்தின் வெப்ப நிலை மிகமிக உயர்ந்து உள்ளதென்றும், அணுக்களில் எலெக்ட்ரான்கள் மிகுஅளவில் நீக்கப்படு கின்றன என்றும், எலெக்ட்ரான்கள் அயனிகள் அடங்கிய துகள்களால் விண்வெளிப் பொருள்களில் ஒரு சில தாக்கமுறுகின்றன என்றும் கண்டுபிடித் துள்ளனர். ஸ்கைலாப் அனுப்பிய விவரப்படி ஒளிர் மகுடத்தின் வட÷ தென் துருவங்கள் அருகில் அடர்த்தி குறைவான பொருள்கள் இருப்பதுடன் இப்புரைகளிலிருந்து வெளிப்படும் சூரியக்காற்று புவி யின் வெளிமண்டலத்தில் காந்தப்புயலை (magnetic storm) ஏற்படுத்துவதாகவும் தெரிகிறது. ஒளிர் மின்னிறக்கம் பங்கஜம் கணேசன் வளிமப் பொருள்களில் மின்னோட்டம் ஏற்படுவதே ஒளிர் மின்னிறக்கம் (glow discharge) எனப்படுகிறது. வெண்ணிறக் குழல் மின் விளக்கும், அறிவிப்புக் குழல் மின் விளக்குகளும், பாதரசு, சோடிய வளிம மின் விளக்குகளும் ஒளிர் மின்னிறக்கத்தின் சான்று களாகும். மழைக் கருமுகில் கூட்டத்தில் ஆங்காங்கே பளபளக்கும் மின்னலற்ற ஒளிச்சிதறல் இயற்கையின் ஒளிர் மின்னிறக்கக் காட்சியாகும். பொதுவாக, வளிமப் பொருள்களில் மின்னோட் டம் நிகழ்வதில்லை. ஆனால் 1725இல் டு ஃபே என் பார் செஞ்சூடான உலோகத் தகட்டின் அண்மையில்