798 ஒளிர்வு (இயற்பியல்)
798 ஒளிர்வு (இயற்பியல்) இவை மிகவும் எளிய முறையில் மின்னாற்றலை ஒளியாக மாற்றுகின்றன. இவற்றின் ஒளிர் வளமை, மிகு வெப்பநிலையில் ஒளிரும் இழை விளக்குகளை மூன்று அல்லது நான்கு மடங்கிற்கு மேல் விட உள்ளது. ஒளிர் வளமை என்பது கீழ்க்காணும் வகையிலும் அறிவியலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வீசு கதிர் ஆற்றலின் ஒளிர் வளமை (luminous efficacy of radiant power) வெளியிடும் ஒளியாற்றல் மொத்த மாக வெளியிடும் வீசுகதிர் ஆற்றலால் வகுத்துக் கணக்கிடப்படுகிறது. விளக்கின் ஒளிர் வளமையை விட, வீசுகதிர் ஆற்றலின் ஒளிர்வளமை சிறிது மிகுதி யாகவே இருக்கும். ஏனெனில் பயன்படுத்தப்படும் மின்னாற்றல் அனைத்தும் வீசுகதிர் ஆற்றலாக மாற்றப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தில் வெளியிடப்படும் ஒளி ஆற்றலுக்கும், அதே அலைநீளத்தில் வெளியாகும் வீசுகதிர் ஆற்றலுக்கும் உள்ள விகிதம், நிறமாலை யைச் சார்ந்த ஒளிர் வளமை எனப்படுகிறது. ஏறத் தாழ 5500 × 10-10 மீட்டர் அலைநீளத்தையுடைய ஒளியை நன்கு உணரக்கூடிய தன்மையைக் கண்கள் பெற்றுள்ளன. எனவே இந்த அலை நீளத்தில் (5500 ×10°மீ, நிறமாலையைச் சார்ந்த ஒளிர் வளமை உச்ச அளவை அடைகிறது. 3800×10-10 மீட்டருக் கும் குறைவான, 7600X100 மீட்டருக்கும் மேலான அலைநீளங்களில், நிறமாலையைச் சார்ந்த ஒளிர் வளமை சுழியாகும். நிறமாலையைச் சார்ந்த ஒளிர் வளமைக்கும், அலைநீளத்திற்கும் உள்ள தொடர்பு வெவ்வேறு அலைநீளங்களில் வெளியாகும் ஒளியைக் கண்கள் எந்த அளவிற்கு உணரக்கூடிய தன்மையைப் பெற்றுள்ளன என்பதைக் குறிக்கும். ஒளிர்வு (இயற்பியல்) சு. சக்திகுமார் குறிப்பிட்ட திசையில் ஒரு பரப்பின் ஒளிச் செறிவை luminous intensity), அந்தத் திசையில் இருந்து பார்க்கும்போது தெரியும் அந்தப் பரப்பு வீழலால் (projection) வகுத்தால் கிடைப்பது ஒளிர்வு(luminance) எனப்படுகிறது. ஒளி விளக்கத்திற்கான அனைத்து நாட்டு ஆணையம் விதித்துள்ள வரையறை மூலம் ஆய்விற்குரிய புள்ளி அடங்கிய ஒரு -மிக நுண்ணிய பரப்புக்கூறின் ஒரு குறிப்பிட்ட திசையிலான ஒளிச் செறிவை, அந்தத் திசைக்குச் செங்குத்தான ஒரு தளத்தில், அந்தப் பரப்புக் கூறின் செங்குத்து வீழ லால் வகுத்தால் கிடைக்கும் ஈவாக ஒளிர்வு விளக்கப் படுகிறது. சுருக்கமாக இதை அலகுப் பரப்பிற்கான ஒளிச் செறிவு எனலாம். அதை ஒளி அளவியல் பொலிவு (photometric brightness) எனவும் குறிப் பிடுவதுண்டு. ஒளிச்செறிவு காண்டெலா காண்டெலா என்னும் அலகால் அளக்கப்படுகிறது. எனவே ஒரு பரப்பின் ஒளிர்வு அல்லது ஒளி அளவியல் பொலிவு கான்டெலா சதுர செண்டிமீட்டர் போன்ற அலகுகளில் அளவிடப்படும். ஒளிர்வைப் பின்வரும் சமன்பாட்டின் மூலம் கணக் கிடலாம். L=dI/dA cos # இங்கு L என்பது ஒளிர்வு.8 என்பது dA என்னும் பரப்புக்கு வரையப்படும் செங்குத்துக்கும் பார்வைக் கோட்டுக்கும் இடையிலுள்ள கோணம். 1 என்பது ஒளிச்செறிவு ஆகும். ஒரு கான்டெலா சதுர செண்டிமீட்டர் என்பது ஸ்டில்ப் (stilb) எனப்படுகிறது. ஒரு லூமென்[சதுர மீட்டர் என்னும் வீதத்தில் ஒளியை உமிழும், ஓர் இலட்சியத் தன்மை கொண்ட ஒளி கசியும் பரப்பின் ஒளிர்வை அபோஸ்டில்ப் (apostilb) என்னும் அலகால் ஐரோப்பாவில் குறிப்பிடுவதுண்டு. கே.என்.ராமச்சந்திரன் ஒளிர்வு (வேதியியல்) து வெப்பச் செயல் அல்லாத வேறு செயலால் கண் ணுக்குப் புலனாகும் ஒளிக்கற்றையைத் தோற்றுவித்த லாகும். இக்காரணத்தால் இத்தோற்றப்பாடு குளிர் ஒளி (cold light) என்றும் குறிப்பிடப்படுகிறது. வெப் பச் செயல் தவிர்த்த வேறு ஏதாவதொரு செய்கை மூலம் எலெக்ட்ரான்களைக் கிளர்வு கொள்ளச் செய்து பின்னர் அத்தகைய கிளர்வுற்ற எலெக்ட் ரான்கள் மீண்டும் அவற்றின் அடிமட்ட ஆற்றல் நிலைக்குத் திரும்பும்போது கண்ணிற்குப் புலனாகும் ஒளிக்கதிர்களை வெளிவிடுகின்றன. இந்நிகழ்ச்சியே ஒளிர்வு (luminiscence) எனப்படுகிறது இதைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம்: வேதி ஒளிர்வு. வேதி வினைகளின்போது தோன் றும் ஒளிர்வு, வேதி ஒளிர்வு (chemiluminiscence) எனப் படும். பிற அனைத்து வகை ஒளிர்வுகளிலும் இது மிகவும் இன்றியமையாதது. ஒருவகையில் வேதி ஒளிர்வு, ஒளி வேதியியல் வினையின் மறுதலையாகும். ஒரு பொருள் ஒளியை உறிஞ்சி அதனால் நிகழும் வேதிவினையின்போது ஒளிர்வு தோன்றுகிறது. ஒரு கரிய பொருள் சாதாரணமாகக் கட்புல னாகும் ஒளியை உமிழாத ஒரு உமிழாத ஒரு வெப்ப நிலையில் (773 K க்குக்கீழ்) ஒரு வேதி வினை நிகழ்வதால்