உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/828

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

804 ஒளிவரை அளவியல்‌

804 ஒளிவரை அளவியல் தேவையான அளவுகளைக் அளவியல் பயன்படுகிறது. கணிக்க ஒளிவரை திட்பக்காட்சி. 23 செ.மீ 23 செ.மீ. அளவு எதிர்மறைத் தளத்தையுடைய ஒளிப்படக் கருவியுடன் திட்டமிட்ட ஒரு நேர்கோட்டில் குறிப்பிட்ட உயரத் தில் குறிப்பிட்ட வேகத்தில் விமானம் பறந்து செல்கிறது. விமானத்தின் வேகத்திற்கேற்பக் கணக் கிடப்பட்ட நேர இடைவெளியில் ஒளிப்படக் கருவி தானாக இயங்கி ஒளிப்படங்களை எடுக்கிறது. அடுத் தடுத்த இரு நிழற்படங்கள் உள்ளடக்கும் நிலப் பரப்பில் 60% இரண்டுக்கும் பொதுவாக இருக்குமாறு நேர இடைவெளி கணக்கிடப்படுகிறது. இப்பொது நிலப்பரப்பிலுள்ள பொருள்களின் உருவங்கள் அடுத் தடுத்த இரு ஒளிப்படங்களிலும் காணப்படும். ஒரே பொருளின் இரு உருவங்களும் இருவேறு நோக்குக் கோணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு எடுக்கப்பட்ட இரு ஒளிப்படங்களைக் கணக்கிடப்பட்ட தொலைவில் அருகருகே வைத்து இடப்புறமுள்ள நிழற்படத்தை இடக் கண்ணாலும், வலப்புறமுள்ள நிழற்படத்தை வலக் கண்ணாலும், பார்க்கும்போது பொது நிலப்பரப்பிலுள்ள உருவங் களில் இரு காட்சிகளும் கட்புலன் ஆற்றலால் ஒருங் கிணைந்து பெறப்படும் முப்பரிமாணக்காட்சியே (புடைப்பியல் வடிவங்கொண்ட) திட்பக் காட்சி (stereo vision) ஆகும். இதுவே ஒளிவரை அளவிய லின் அடிப்படை ஆகும். விமானத்திலிருந்து எடுக்கப் பட்ட நில ஒளிப்படங்களில் திட்பக் காட்சியைக் காண்பதற்குக் கண்களுக்குப் பயிற்சி தேவையாகும். விமானத்தில் பொருத்தப்பட்ட ஒளிப்படக் கருவி யின் மூலம் எடுக்கப்படும் நில-ஒளிப்படத்தில் பதி வாகும் உருவங்கள் இடமாறு தோற்றத்துடன் பதி வாகின்றன. விமானம் முன்னோக்கிப் பறப்பதால் ஏற்படும் இடமாறு தோற்றம் (X) - இடமாறு தோற்றம் என்றும், விமானச் சாய்வினால் ஏற்படும் இடமாறுதோற்றம் (Y) இடமாறு தோற்றம் என்றும் குறிக்கப்படும். இவற்றில் X-இடமாறு தோற்றமே தேவையானதும் பயனுடையதுமாகும். இதைக் கோட்டுப் படத்தின் மூலம் கணித முறையில் விளக் கலாம். ஒரு மலை உச்சியையும், அதன் அடிவாரத்தை யும் உள்ளடக்கிய பரப்பின் நில ஒளிப்படம் எடுக்கும் முறை படம் 1 இல் காட்டப்பட்டுள்ளது. இப்படம் இடமாறுதோற்றப்பிழையை விளக்கவும் பயன்படும். L, Lg என்பன அடுத்தடுத்த இரு ஒளிப்படங்கள் எடுக்கும் நேரங்களில் விமானத்தின் நிலைகளைச் சுட்டுகின்றன. Pu. P என்பன முறையே L, L, என்னும் நிலைகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படப் பதிவுகள் ஆகும். இப்பதிவுகளில் ஒளிப்படக் கருவியின் அச்சு 0, 0 என்னும் இடங்களிலும் அடிவாரம் B இன் பதிவுகள் b, b1' என்னும் இடங்களிலும் மலை P N D 2 o lo a படம் 1. படம் 1.கோட்டுப் படம் (குறுக்கு வெட்டுத் தோற்றம்) LL₂ நிழற்படம் எடுத்த இடம் P, P; -நிழற்படம் A.B - பொருட்புள்ளிகள் (மலைஉச்சி, அடிவாரம்) ab- முதல் நிழற்படத்தில் A-, B - இவற்றின் உருவப் புள்ளிகள் 3, b1 - இரண்டாம் நிழற்படத்தில் A-, B- இவற்றின் உருவப் புள்னிகள் 0 - Oat PA- A இன் இடமாறு தோற்றம் (Xa) (Kal) 0b - Obt PB B இன் டமாறு தோற்றம் (Xb) (Xb') உச்சி A இன் பதிவுகள் a, a ' என்னும் இடங்களிலும் முறையே பெறப்பட்டுள்ளன. இடமாறு தோற்றப் பிழையால் Oa, olat இரண்டும் அவ்வாறே ob, o b' இரண்டும் சமமாக இரா. இவற்றிடையே உள்ள வேறுபாடுகளை இடமாறு தோற்றப் பிழை என்பர். 02 - 0a' A - இன் இடமாறு தோற்றப் பிழை (Xia) oa என்றும்,o b-o b', B-இன் இடமாறு தோற்றப் பிழை (Xh) என்றும் குறிப்பிடப்படுகின்றன. விமானத்திலிருந்து பார்க்கும்போது உயரமான நிலப் பொருள்களின் இடப்பெயர்ச்சி (X - இடமாறு தோற்றம்) மிகுதியாகவும், தாழ்வான பொருள்களின் இடப்பெயர்ச்சி (X - இடமாறு தோற்றம்) குறைவாக