806 ஒளிவளைவு (வானியல்)
806 ஒளிவளைவு (வானியல்) தெரியும். மேலும் சில நேரங்களில் சூரிய மறைப்பி லிருந்தும். மேக மறைப்பு அல்லது வானிலை மாறு தல்களால் ஒன்று மே செய்ய முடியாமல் வானியல் அறிஞர்கள் மிகுந்த ஏமாற்றமடைவதுமுண்டு. இவற்றைத் தவிர்க்க, செயற்கையாகச் சூரிய முழு மறைப்பு ஏற்படுத்த, பெர்னார்டு லயட் என்னும் பிரெஞ்சு நாட்டு வானியல் அறிஞர், 1930இல் ஒளி வளைய வரையி (coronograph) என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். இதில் ஒரு தொலைநோக்கியின் பொருளருகு வில்லையின் குவிதளத்தின் மையத்தில் கருமை பூசிய வட்டத் தகடு பொருத்தப்பட்டுள்ளதன் மூலம் சூரிய மறைப்புச் செயற்கையாக ஏற்படுத்தப்படும். மேலும் சூரிய ஒளிக்கதிர் எதிரொளிக்கப்படாதவாறும், மங்க லாக ஒளிர் மகுட ஒளி மட்டும் தெரியுமாறும் அமைக் கப்பட்டிருக்கும். இத்துடன் நுணுக்கமாகக் கண்டு பிடிக்கப் பொருத்தப்பட்டிருக்கும் பொறியமைவுக்கு (detector) முன்னால் குறுகிய பட்டைக் கோடுகள மைப்பில் ஒளி ஊடுருளிச் செல்லுமாறும் அமைக்கப் பட்டிருப்பதால், E-ஒளிர் மகுடத்திலிருந்து வெளிப் படும் ஒளிக்கோடுகளையும் காணமுடியும். பங்கஜம் கணேசன் ஒளிவளைவு (வானியல்) மாறு விண்மீனின் (variable star) ஒளிர்வுத் திறனில் காணப்படும் முறையான அல்லது முறையற்ற மாற்றங்களைத் தக்க வரைபடங்களால் காட்டப் பயன்படும் கோடுகளே ஒளிவளைவுகள் (light curves) எனப்படுகின்றன. ஒரு விண்மீனின் ஒளிர்வுத்திறன் மாறிமாறி ஒரு சீரான மாற்றத்திற்கோ ஏறக்குறைய ஒரே சீரான மாற்றத்திற்கோ உட்படுமெனில், ஒரு குறிப்பிட்ட காலக்கட்ட வேறுபாட்டிற்கு ஏற்ப அதன் ஒளிர்வுத் திறனில் காணப்படும் மாற்றங்களை ஒரு வரைபடமாகக் காட்டலாம். காலக் கட்ட வேறுபாட்டின் தொடக்கமாக, இரும மாறுவிண் மீன்களில் அவை மங்கலாகத் தோன்றும் காலத்தை யும் தனி விண்மீன்களில், மாறு அது மிகவும் வெளிச்சமாகத் தோன்றும் காலத்தையும் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகக் காலக்கட்ட வேறுபாட்டை நேரஞ் சார்ந்த ஒரு சார்பாகவும். ஒளிர்வுத் திறனை விண் மீன்கள் வகையில் பொலிவுப்பரிமாணமாகவும் (magnitude) குறிப்பிடலாம். ஒரு விண்மீனின் ஒளிர்வுத் திறனைக் குறிப்பிடுவதற்கு, வானியலார் பொலிவுப் பரிமாண நிலையையே ஓர் அளவு கோலாகக் கொண்டுள்ளனர். வரைபடத்தில் பொலிவுப் பரிமாணத்தை மடக்கை அலகில் (logarith- mic scale) குறிப்பிடுவர். இதனால் ஒளிர்வுத் திறனில் மிகுதியான மாறுதல் இருப்பினும், அதை ஒரு குறுகிய நெடுக்கைக்குள் ஏற்படும் ஒரு மாற்றமாகக் காட்ட இயல்கிறது. எடுத்துக்காட்டாக, பொலிவுப் பரிமாணத்தில் 5 அலகு மாற்றம் என்பது ஒளிர்வுத் திறனில் 100 மடங்கு மாற்றத்திற்குச் சமம். இது போன்ற ஒளிர்வுத் திறன் மாறுபாடுகள் சில செந்நிற மாறு விண்மீன்களில் (red variable stars) காணப்படு கின்றன. பெருமளவிலான மாற்றங்கள் ஒளிர் விண் மீன்களிலும் (novae), சிதைவுறு ஒளிர் விண்மீன் களிலும் (super novae) ஏற்படுகின்றன. சிலவகையான ஒளிவளைவுகள் படம் - 1 இல் காட்டப்பட்டுள்ளன. வகைகளில் பயன்கள். ஒளி வளைவுகள் பல பயனுள்ளதாக உள்ளன. ஒளிமறைப்பு விண்மீன்களை அவற்றின் நிறமாலை வரைவியில் விவரங்களுடன் இணைத்து ஆய்வு செய்யும்போது விண்மீனின் பரி மாணம். நிறை, அடர்த்தி போன்றவற்றைப் பற்றி அறிய முடிகிறது. துடிக்கும் மா று விண்மீன்களாக (Pulsating variable star) இருக்குமெனில் (அவற்றைச் சிஃபைடு (Cepheid) என்பர்) அவற்றின். ஒளிர்வு மற்றும் அலைவுக்காலத்திலிருந்து, அவற்றின் மாறு படும் ஒளிர்வுத்திறனைக் கண்டறியலாம். மாறு விண்மீனின் தோற்ற ஒளிர்வுத் திறனை மதிப்பிட்டு அவற்றின் தொலைவுகளையும் அறியலாம். இதில் அருகிலுள்ள ஒரு விண்மீனின் ஒளிர்வுத் திற னுக்கும், மாறு விண்மீனின் ஒளிர்வுத் திறனுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டையே வரைபடத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வழிமுறையால் சில அண்டங்களின் தொலைவு களையும்மதிப்பிடலாம். ஒளி வளைவின் தோற்றம் எந்த அதிர்வெண்ணில் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது என்பதைப் பொறுத் தது. மறைக்கும் இரும விண்மீன்களில் வெப்பமிக்க விண்மீன் குறைந்த வெப்பமுடைய விண்மீனின் பின்னால் இருக்கும்போது மிகுதியான அலை நீளங் களைவிடக் (மஞ்சள், சிவப்பு) குறைந்த அலைநீளங் களில் (புற ஊதா,ஊதா) பெருமளவு ஒளி இழக்கப் படுகிறது. அவ்விரு விண்மீன்களும் முன்பின்னாக மாறி இருக்கும்போது இதற்கு எதிர்மாறாக கின்றது. ஏற்படு ஒளிர்வு மாற்றம் ஒரு சீரான சுற்று முறைக்குட் படாமலும் இருக்கலாம். அப்போது அதன் ஒளிர்வுத் திறனுக்கும், ஆய்வு மேற்கொண்ட காலத்திற்கும் இடையில் மட்டும் வரைபடம் வரைய இயலும். இத்தகைய நிலை, செந்நிற மாறுவிண்மீன் மற்றும் வெடிக்கும் மாறுவிண்மீன் (explosive variables) போன்ற அமைப்புகளில் காணப்படுகிறது. ஒளி வளைவுக்கோட்டைப் புலனறி முறை, ஒளிப்பட முறை, ஒளிமின் முறை ஆகியவற்றால் அறிகின்றனர். புலனறி முறை எளிமையானது. இது