உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/835

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி விலகல்‌ 811

தோற்றமளிக்கின்றன. பயண வழி நடத்து (naviga- tion) நோக்கங்களுக்காக ஒரு விண்பொருளின் உயரத் தைப் பதிவு செய்கையில் இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலைவனங்களிலுள்ள கானல் நீரும், தொலை விலுள்ள பொருளும் அருகில் உள்ளவை போலத் தோற்றமளித்தலுக்கு வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளி விலகலே காரணம். அங்கு ஒரு விரிந்த பரப்பில் செங்குத்தான திசையில் வளிமண்டலத்தின் அடர்த்தி ஒரு சீராக மாறுகிறது. வளிமண்டலத்தில் ஒளி பய ணம் செய்யும் பாதையில் வளிம அடர்த்தியில் விரை வான, . சிறிய ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதன் காரண மாகவே விண்மீன்கள் சிமிட்டுகின்றன. கோள வடிவ நீர்த்துளிகளில் சூரிய ஒளி, நிறப்பிரிகை, பன்மை எதிரொளிப்புகள், விலக்கம் ஆகியவற்றுக்கு ஆளாவ தாலேயே வானவில்கள் உண்டாகின் றன. பிற மின்காந்த அலைகள். ஒளியைத் தவிரப் பிற மின்காந்த அலைகளும் விலக்கமடைகின்றன. பெரும் அலை நீளமுள்ள கதிர்களுக்குப் பல பொருள்களின் விலகு எண், அவற்றின் மின்கடவா மாறிலியின் dielectric constant ) இருமடி மூலத்திற்குச் சமமாக உள்ளது. பொதுவாக உட்கவர் பட்டைகளின் அருகில் ஏற்படும் முரணிய நிறப்பிரிகைப் (anomalous disper- sion) பகுதிகளைத் தவிரப் பிறவற்றில் dn/da எதிரின் மாக உள்ளது. ஓர் உட்கவர் பட்டையின் குறைந்த அலைநீளப் பக்கத்தில் II ஒன்றைவிடக் குறைவாயிருக்க முடியும். விலகு எண்ணை வரையறுப்பதில் அலையின் குழுத் திசை வேகம் (group velocity) தொடர்புபடாமல் அதன் கட்டத் திசை வேகமே (phase velocity ) தொடர்புபடுகிறது. எனவே வெற்றிடத்தில் உள்ள ஒளியின் திசைவேகத்தைவிட மிகுதியான திசைவேகத் தில் ஆற்றல் பரவ முடியாது என்னும் சார்பியல்விதி மீறப்படவில்லை. அதிர்வெண்கள் மிகுதியாயிருக்கும் போது அனைத்துப் பொருள்களுக்கும் விலகு எண் (1) ஒன்றைவிடச் சற்றுக் குறைவாகவே உள்ளது. புவி வளி மண்டலத்தில் பார்வைக் கோட்டுக்கு அப்பால் ரேடியோ அலைகள் பரவுவதற்கு விலகல் உதவுகிறது. ஏறத்தாழ அலை புகாத்தன்மை கொண்ட பொருள்களுடன் மின்காந்த அலைகள் செய்யும் இடைவினை பல சமயங்களில் ஒரு கூட்டு விலகல் எண்ணின் அடிப்படையில் விளக்கப்படு கின்றது. இந்த அளவின் மெய்ப்பகுதி பொருளின் உள்ளே நுழையும் சிறிய அளவு ஒளிக்கு வழக்கமான பொருளுடையதாகவும், கற்பனைப் பகுதி உட்கவரப் படும் ஒளியின் அளவைக் குறிப்பிடுவதாகவும் அமை யும். ஒலி அலைகள். ஒரு வளிமத்தில் ஒலி பரவும் திசைவேகம், தனி வெப்பநிலையின் இருமடி மூலத் ஒளி விலகல் 8/1 திற்கு நேர்விகிதத்தில் உள்ளது. வளி மண்டலத்தில் செங்குத்தாக வெப்பநிலை மாறுவதன் காரணமாக ஒலி விலகல் மேம்பட்டுக் காணப்படுகிறது. ஒரு குறிப் பிட்ட உயரத்தில் ஒரு பரந்த கிடைத்தளத்தில் வெப்பநிலை சீராக இருந்தால்தான் பெரிய அளவில் ஒலி விலகல் ஏற்படும். உயரம் மிகும்போது வெப்ப நிலை குறைந்தால் ஏறக்குறைய கிடைத்தளத்தில் பயணம் செய்யும் ஒலி அலைகள் மேல்நோக்கி விலக் கம் அடையும். திறந்த வெளியில் உண்டாகும் ஒலி பெருந்தொலைவில் கேட்கப்படாததற்கு இதுவே காரணம். ஆனால் நீர்ப்பரப்புகளின் மேல் வெயில் அடிப்பது போன்ற சூழ்நிலைகளில் வெப்பநிலை மேலே செல்லச் செல்ல உயருவதாயிருக்கலாம். அப்போது ஒலி அலைகள் கீழ் நோக்கி விலக்கம் அடையும். ஓர் அமைதியான நாளில் நீர்ப்பரப்புக்கு மேலாக ஒலி பெருந்தொலைவுகளுக்குப் பரவுவதற்கு இதுவே காரணம். காற்றடிக்கும்போது கிடைத்தள வெப்பநிலைப் படவங்கள் கலைக்கப்பட்டு ஒலி சிதறிவிடும். எதிரொலியுடன் விலகலும் சேர்ந்து நிகழும்போது பெரும் வெடிச் சத்தங்கள் அண்மையிலுள்ள சில டங்களில் கேட்காமல் பெருந்தொலைவிலுள்ள இடங்களில் மட்டும் கேட்பதுண்டு. பெரும் உயரங் களில் வெப்பநிலைத் தலைகீழாக்கம் (temperature inversion ) ஒலியைக் கீழ் நோக்கி விலக்க மடையச் செய்து சில பகுதிகளில் அது கேட்கும்படிச் செய்யும். அதன் பிறகு ஒலி தரையில் எதிரொலித்து மேலே சென்று, மீண்டும் கீழ்நோக்கி விலக்கமடைந்து வேறு சில பகுதிகளில் கேட்கும். இவ்விரு நிலைகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் ஒலி கேட்காது. நிலநடுக்க அலைகள் (Selsmic waves). ஒரு திண் மத்தில் மீள்திறன் அலைகளின் திசைவேகம், அதன் மீள்திறன் குணகத்தையும் அடர்த்தியையும் பொறுத் துள்ளது. திண்மநிலைத் தரையின் ஊடாகப் பரவும் அலைகள் பொருள் மாறுவதாலோ அடர்த்தி மாறுவதாலோ விலக்கமடைகின்றன. உலகளாவிய அளவில் நில நடுக்க அலைகள் பரவுவதை ஆய்வு செய்ததால் புவியின் அடர்த்திப் பரவீட்டைப் பற்றிய பல முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அலைகள் புவியின் உள்ளகத்தின் (core) மேற்பரப் பில் முழு அக எதிரொலிப்பு அடையக்கூடும். புவி நடுவில் ஓர் அடர்வு மிக்க உள்ளகம் இருப்பதைப் பற்றிய கருதுகோள் இத்தகைய நிகழ்வுகளின் அடிப் படையிலேயே எழுந்தது. உண் தரைக்கடியில் வெடிகளை வெடித்து டாக்கும் இறுக்க அலைகளின் எதிரொலிப்பும், விலக்கமும் எண்ணெய், எரிவளி மற்றும் கனிவளத் தேட்டத்தில் உதவுகின்றன. சுற்றியுள்ள பாறை களுக்கும் இத்தகைய கனிவளப் படிவுகளுக்கும் இடையில் அடர்த்தி, மீள்திறன் குணகங்கள் ஆகிய வற்றில் பெரும் வேறுபாடுகள் இருக்கும். E