உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/855

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒற்றை மின்மாற்றி 831

சுருணையில் T, சுற்றுகள் உள்ளன என்று கொள்ள லாம். வெளியீடு அதன் T, சுற்றுகள் உள்ள இடத் தில் எடுக்கப்படுகிறது என்று கொள்ளலாம். வெளி வீட்டு மின்னழுத்தம் V. என்றும், மின்னோட்டம் I, என்றும் கூறலாம். 1" W அதற்கான உள்ளீடு அழுத்தம், மின்னோட்டம் என்பன VI. 1. எனலாம். இழப்புகளைக் கணக்கில் கொள்ளாவிட்டால் Vi = 1/1₁ T./T,சாதாரண V, இரு சுருணை மின்மாற்றி போன்றே ஆம்பியர் சுற்றுகள் I, T,, 1,T;, ஐ எதிர்க்கும். ஆகவே சுருணை யின் பொதுப்பகுதியில் (I,-II) மின்னோட்டம் பாயும். சுருணை முழுதும் ஒரே அளவு மின்னோட்ட அடர்த்தி என்று கொண்டால் சிறிய கடத்தி குறுக் களவே போதும். கடத்திப் பொருள் அளவுவிகிதம் = ஒற்றை மின்மாற்றி இருசுருணை மின்மாற்றி = 1, (T, -T) + (I, - 1,) T,/I, T, + I, T, =1 2 ¯(T₁/T₂) + (I,/I₁) = 1- (V,/V) மேற்காணும் சமன்பாட்டிலிருந்து V1 இன்மதிப்பு V, ஐ நெருங்கச் சேமிப்பு மிகுதியாகிறது என்று உணரலாம். Vg=V. என்றால் சமன்பாட்டின்படி ஒற்றை மின்மாற்றிக்குக் கடத்தி எதுவும் தேவை யில்லை. ஏனெனில் மின்மாற்றியே தேவையில்லை. பொருள், விலையில் உள்ள சேமிப்பு, குறிப் பிட்டதைவிடக் (மின்மாற்றியில் உள்ளதைவிட) குறைவாகவே இருக்கும். ஏனெனில் உள்ளகம் சாதாரண மின்மாற்றி அளவே இருக்கும். மின் இவற்றின் நேரடிப்பொருத்தம் மாற்றியின் விலை, திறன் ஆகியவை கி.வோ. ஆம்பியருக்கு உடையன அல்ல. 2:1 என்ற மின்னழுத்த விகிதத் திற்கு ஏறக்குறைய 50% செம்பு மீதமாகலாம். ஒற்றை மின்மாற்றி அதே நியமம் கொண்ட இரு சுருணை மாற்றியின் விலையில் 70% ஆகும். வெளிப்பெறு கி.வோ..திறன், நிலையான வெளிப்பெறு மின்னோட்டம், பளுவின் மின் எதிர்ப்பு ஆகியவற்றிற்கேற்பப் பல ஒற்றைமின் மாற்றிகள் ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்ற கடத்திப் பகுதியுடன் வடிவமைக்கப்படக்கூடும். உற்பத்தி முறையில் அவை சிக்கலானவையாகும். மின்னழுத்தவிகிதம் 3:1ஐத் தாண்டினால் ஒற்றைமின் மாற்றிகள் மின்னோடித்தொடக்கம் தவிர வேறு நோக்கங்களுக்குப் பயன்படுவதில்லை. ஏனெனில் ஒற்றை மின்மாற்றி 831 அவற்றால் தீய விளைவுகள் ஏற்படக்கூடும். இரண்டு பகுதிகளுக்கும் இடையே உள்ள நேரடி மின்வழி இணைப்பால் ஒரு பகுதியில் ஏற்படும் தொல்லைகள் மற்றொரு பகுதியைத் தீவிரமாகப் பாதிக்கின்றன. மின்னோட்ட முதன்மை மற்றும் இரண்டாம் சுருணைகள் ஒருங்கே இயங்குவதால் மின்மறுப்புக் குறைவதாலும், மதிப்புக் குறைவதாலும் குறுக்கு இணைப்பின் நிலைமைகள் தீவிரமாக உள்ளன. ஒற்றை மின்மாற்றிகள், தொழிற்சாலை களில் உயர் திறனுள்ள மின்னோடிகளை இயக்கவும். ஆய்வு செய்யவும் பயன்படுகின்றன. மிகவும் மாற்றும் மடை சுற்றுகளின் விகிதத்தை பொருட்டு, ஒற்றை மின் மாற்றிகளில் மடை(tap). வைக்கப்படும். மின்மாற்றியின் செயல் எல்லைக்குள் வெளி அமைப்பு அழுத்தத்தையும் கட்டுப்படுத்த இது உதவுகிறது. இம் மடை பொதுப்பகுதியிலோ தொடர் இணைப்பகுதியிலோ இடம் பெறும். பளுவுடன் மடைகளை மாற்றும்போது காணப்படும் சிக்கல்கள் இருசுருணை மின் மாற்றிக்கு ஒப்பான வையேயாகும். மின்சாரம் வழங்கலைத் தடை செய்யாமலேயே மடைகளை ஒன்றிலிருந்து அடுத்தடுத்து மாற்றலாம். ஆய்வுக்காகச் சிறிய மாறுவிகித ஒற்றை மின் மாற்றிகள் பயன்படுகின்றன. அவற்றில் ஒரு மின் தொடித் தொடுவானைச் (brush contact) சுற்றுகளின் குறுக்கே நகர்த்துவதன் மூலம் மிகு அழுத்தத்தில் 1000%வரை மாறுபடும் அழுத்தத்தை வெளிப்பெற முடியும். சிறிய மற்றும் நடுத்தர வகை ஒற்றைமின் மாற்றிகள் மிகவும் குறைந்த விலை உடையவை. பல்வேறு நோக்கங்களுக்கு நிறைவான பயனளிக் கின்றன. இவை மின்விசிறிகள், தையல் எந்திர ஓடிகள் ஆகியவற்றிற்குத் தேவைப்பட்டால் குறை மின்னழுத்தத்தில் மின்சாரம் வழங்கக்கூடியவை. கூடு சுழலிகள் கொண்ட தூண்டல் மின்னோடி களுக்கான ஒற்றை மின்மாற்றித் தொடக்கிகளின் முத்தறுவாய் நட்சத்திர இணைப்புகளில் (three phase star connection) ஒற்றை மின்மாற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட மடைகள். இருவழித்திறப்பான், மிகு மின்னோட்டம், குறை அழுத்தக் காப்பு ஆகியவை இடம்பெறுகின்றன. இத்தகைய கருவி சில நொடிகள் இயங்கினால் போதும் (அதாவது மின்னோடி செந்தர வேகத்தை எட்டும் வரை). ஆகவே விலைக் குறைப் பின் பொருட்டு அதை உயர் மின்னோட்டம், பாயும் அடர்த்தி (flow density) ஆகியவற்றிற்கு ஏற்ப வடிவமைத்தால் போதும். மின்னழுத்தச் சீராக்கல், ஒற்றை மின்மாற்றிகளை எதிர்வினைப்பிகளைப் பயன்படுத்தி, மின்னூட்டி களில் ஏற்படும் மின் அழுத்தக்குறைவை ஈடுசெய்ய