உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 எக்ஸ்‌ கதிர்‌ தூள்முறை

62 எக்ஸ் கதிர் தூள்முறை இதில் விளிம்பு விளைவை ஏற்படுத்தும் பொருள் கொள்ளப்படுவ நுண்துகள்களாகப் பொடி செய்து தால், அதைப் பன்னிலை நுண் படிகங்களாகக் கருத லாம். எண்ணிறந்த படிகங்கள் இருப்பதாலும் அவற் றின் திசையமைவு தாறுமாறாகச் சிதறியவாறு காணப்படுவதாலும், நுண்படிகங்களுள் குறிப்பிட்ட திசையமைவுடன் கூடிய ஒரு நுண்படிகத் தொகுதி, அவற்றில் உள்ள ஒரு வகையான இணைப் படிகத் தளங்கள் ஒரு குறிப்பிட்ட அலைநீளமுடைய எக்ஸ் கதிரின் விளிம்பு விலக்கத்திற்கு ஏற்றவாறு அமைந் திருக்கலாம். இதுபோல மற்றொரு நுண் படிகத் தொகுதியில் மற்றொரு வகையான இணைப் படிகத் தளங்கள் அதே குறிப்பிட்ட அலை நீளமுடைய எக்ஸ் கதிர்களின் விளிம்பு விளைவிற்கு ஏற்றவாறு அமையலாம். இங்கு படிகத் தளவிடைத் தொலை வும், விலகுகோணமும் வரையறைக்கு உட்பட்ட தொரு வகையில் ஒன்றுக்கொன்று ஏற்ற வகையில் அமையப்பெற்றுப் பிராக் விதிக்கு ஏற்ப விளிம்பு விளைவை ஏற்படுத்துகின்றன. இணைத்தளங்களில் இதில் பலவகையான படிக் எதிரொளிப்பு ஏற்படுவதுடன், பல வரிசைப்படிகளி லும் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஒரு குறிப் பிட்ட விலகு கோணத்தை ஏற்படுத்தக்கூடிய நுண் படிகங்களின் அச்சு ஒரு சிறிய கூம்பு முனையில் அமையப்பெற்றிருக்கின்றது என்பதால், விலகு எக்ஸ் கதிர்கள் ஒரு கூம்பு வடிவில் வெளியேறுகின்றன (படம். 1). எனவே ஒவ்வொரு படிக இணைத்தளத் திற்கும் ஒரு தனிச்சிறப்புள்ள கூம்பு போன்ற விலகு கதிரின் அமைப்பு உண்டு. ஒரு புகைப்படச் சுருளை அதன் தள விலகு கதிருக்குச் செங்குத்தாக இருக்கு மாறு செய்து கொண்டால், கூம்பு வடிவ விலகு கதிர்கள் ஒரு மைய வட்டத் துண்டுக் கோடுகளை ஏற்படுத்துகின்றன. இவற்றின் ஆரங்களை மதிப்பிட்டு, விலகு கோணத்தையும் அதிலிருந்து தாலைவுகளையும் கண்டறிய முடியும். படிகத்தளவிடைத் எக்ஸ் கதிர்களின் தூள் முறையின் ஆய்வு அமைப்பு முறை படம் 3 இல் காட்டப்பட்டுள்ளது. இம்முறைக்குத் தேவையான ஒற்றை நிற ஒளி எக்ஸ் கதிர்கள் தனி வகையான அலை வடிப்பான்களைப் filters) பயன்படுத்திப் பெறப்படுகின்றன. வாக்கிக் மெல்லிய ஈயத்தாலான S,,S, என்ற சிறிய பிளவுகளின் துணை கொண்டு மெல்லிய ணைக்கற்றை உரு கொள்ளப்படுகின்றது. இது நுண்படிகங் களின்மீது விழுமாறு செய்யப்படுகின்றது. நுண்தூள் கள் பொதுவாக, சீரான தடிப்புள்ள ஒரு கண்ணாடிக் குழாயினுள் ஓரளவு இறுக்கமாக அடைத்துக் கொள்ளப்படுகின்றன. இக்கண்ணாடிக் குழாய் உருளை வடிவப் புகைப்படப் பெட்டியொன் றின் மையத்தில் அதன் அச்சிற்கு இணையாக இருக்கு பல்லினப் படிகம் விழுகதிர் கூம்பு வடிவ விவகுகதிர் 311 220 200. 111 புகைப்படத்தட்டு படம் 1. புகைப்படத்தட்டில் விளிம்பு விளைவுப்பாங்கம்