உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/878

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

854 ஓடல்‌ காட்டி

854 ஓடல் காட்டி விளையாத சூழ்நிலையில் ஓட்ஸ் வளரும் தன்மை பெற்றது. அது அமிலத்தன்மையுள்ள மண்ணிலும் வளரக்கூடியது, குளிர்பகுதிகளில் இள வேனிற் காலத்திலும், மிதவெப்பப் பகுதிகளில் இலையுதிர் காலத்திலும் நடப்படுகின்றது. விதைகள் கைகளாலோ கருவிகள் மூலமாகவோ தூவப்படு கின்றன. விதைத்த மூன்று மாதத்தில் தானியங்கள் அறுவடைக்கு ஏற்ப முற்றிவிடும். பயன் பயன். ஓட்சைக் கிரேக்கர்களும் ரோமானியர் களும் முதலில் கால்நடைத் தீவனமாகப் படுத்தினர். பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் மனிதர்களால் உணவாகக் கொள்ளப்பட்டது. ஸ்காட்லாந்துக்காரர்கள் இதை முக்கிய உணவாகக் கொள்கின்றனர். . மனிதருக்குப் பயன்படும் ஓட்ஸ் தானியத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதன்மேலேயுள்ள உமி நீக்கப்படவேண்டும். சிற்றுண்டித் தானியங்களின் பெரும்பகுதியில் ஓட்ஸ் அடங்கும். விலை குறைவான இதில், புரோட்டின் சத்து மிகுதியாகும். ஓட்சி லிருந்து தயாரிக்கப்படும் ஓட்ஸ் - சோறு மிகுதியான வைட்டமின் B கனிமப்பொருள்களான கால்சியம், இரும்பு, பாஸ்ஃபரஸ், நிக்கோடினிக் அமி லம் ஆகியவற்றைப் பெற்றிருக்கும். இது நரம்பு மண் டலத்திற்கு ஏற்றது. (Oat-meal) ஓட்ஸ் சோறு தயாரிப்பு. ஓட்ஸ்சோறு தயாரிப்பில், முதலில் ஓட்சைக் காயவைத்து வறுக்கவேண்டும். இதனால் உமியை நீக்கவும், தானியத்திற்கு மணம் சேர்க்கவும் முடியும். பிறகு நீராவியில் வேசவைத்து, வெட்டிச் சுருட்டவேண்டும். வணிகப் ஓட்ஸ் மாவை அவினெக்ஸ் என்னும் பெயரால் குறிப்பர். இது ஆக்சிஜன் ஏற்பு எதிர்ப் பொருள் (anti oxidant) ஆகும். அதனால் இது எளி தில் கெடுவதில்லை. நிலக்கடலை - வெண்ணெய், மார்க்ரைன், வெண்ணெய்த் தின்பண்டங்களில் இது நிலைப்படுத்துவானாகப் (stabilizer) பயன்படுகிறது. சில ஆக்சிஜன் ஏற்பு எதிர்ப்பு பொருள்கள் நச்சுத் தன்மை கொண்டிருந்தமையால் இதையே பெரும் பாலும் பயன்படுத்துகின்றனர். மேலும் காஃபிபொடி, உப்பிட்ட கொட்டைகள், உருளைக் கிழங்கு வறுவல் முதலியவற்றைத் தாள் பொட்டலம் போடுவதற்கு முன்பு பொட்டலத்தினுள் இம்மாவு தூவப்பட்டு வந்தது. வணிகச் சிறப்புப் பெற்ற ஃபர்ஃப்யூரால் என்னும் வேதிப் பொருள் ஓட்ஸ்உமியிலிருந்து சல்ஃப்யூரிக் அமிலத்தின் உதவியால் எடுக்கப்படுகிறது. உமியில் 32-36% பென்டோசான் 35% செல்லுலோஸ் 10- 15% விக்னின் உள்ளன. இதில் பென்டோசான்தான் அமிலத்தின் கிரியையால் தேன் வண்ணம் காண்ட ஃபர்ஃப்யூராலாக மாறுகிறது. இதனால் செயற்கைப் . பிசின்கள், நைலான், மசகு எண்ணெய், பூஞ்சைக் கொல்லிகள், பாதுகாப்பான்கள் (preservatives) முத லிய பொருள்களைத் தயாரிக்கின்றனர். . நோய். சில புழுக்கள் ஓட்ஸ் நாற்றின் குருத்தைக் கத்தரித்து அழிப்பதுண்டு. இதைத் தவிர்க்கப் பருவத் திற்கு முன்பே விதைகளைத் தூவ வேண்டும். பூஞ்சை களான பக்சினியா (puccinia) மூலம் துரு நோயும் அஸ்ட்டிலாகோ மூலம் தூசிநோயும் வருவதுண்டு. கதிர்வீச்சு மூலம் பல உயர்வகை ஓட்ஸ் வகைகள் தோன்றியுள்ளன. 1960 இல் ஃபுளாரிடா மாநிலத்தில் ஃபுளாரேட் என்னும் புதுவகை ஓட்ஸ் அறிமுகப்படுத் தப்பட்டது. இது தண்டு துரு நோய் எதிர்ப்பாற்றல் காண்டது. மேலும் இதன் வைக்கோல் கெட்டி யானது. தற்சமயம் கலப்பினச் சோளம், அல்ஃ பால்பா இவை பயிரிடப்படுவதால் ஓட்ஸ் சாகுபடி பெருவாரியாகக் குறைந்து வருகிறது. ஓடல் காட்டி தி. ஸ்ரீகணேசன் சொல்லுக்குப் ஹோடோஸ்கோப் என்ற கிரேக்கச் பாதை காட்டி என்பது பொருள். ஒரு துகளின் பாதை ஆயங்களை நேரடியாகக் காட்டக்கூடிய ஒரு கருவியை இது குறிக்கிறது. 1955ஆம் ஆண்டில் கான்வெர்சி, கோசினி என்ற இத்தாலிய அறிவியலார் தாம் உருவாக்கிய ஒரு கருவிக்கு இந்தப் பெயரிட் டார். அக்கருவியில் இரு உயர் மின்னழுத்தத் தகடு களுக்கிடையில் நியான் நிரம்பிய பல குழல்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் துகள்கள் ஓடும் போது அவற்றின் பாதைகள் நியான் குழல்களில் தோன்றிய ஒளிர்வுகளால் காணப்பட்டன. அதன் பிறகு துகள்களின் பாதைகளைக் காட்டக்கூடிய பிற கருவிகளுக்கும் ஹோடோஸ்கோப் என்ற பெயர் அளிக்கப்பட்டு விட்டது. பொறிக்கல ஓடல் காட்டி (spark chamber hodoscope) என்ற கருவி ஒரு கம்பிப்பொறிக் கல மாகும். இதில் இணையான பலகம்பிகள் அடங்கிய இரு சட்டங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கம்பியிலும் ஒரு முனையில் ஒரு பெர்ரைட் உள்ளகம் நுழைக்கப் பட்டிருக்கிறது. பெர்ரைட் பொருள்களுக்கு இரு நிலைப்பாடுள்ள காந்தமாக்கல் நிலை உண்டு. மின்னோட்டத்தின் மூலம் உண்டாகும் காந்தப் புலத்தைப் பயன்படுத்தி ஒரு காந்தமாக்கல் நிலையி லுள்ள பெர்ரைட் உள்ளகத்தை ஏனைய காந்த மாக்கல் நிலைக்கு மாற்றி விட முடியும். ஒரு கம்பியில் துகள் படும்போது ஏற்படும் பொறிகளால் தோன்றும் மின்னோட்டம் அதிலிணைந்துள்ள