ஓடும் நீர்ச் சூழலமைப்புகள் 861
அந்நீர்ச் சூழ்நிலையின் உயிர் அமைப்பு முற்றிலும் மாறுபடும். அதனால் சில உயிரினங்கள் அடியோடு அழிந்து போகும். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இத்தகைய சூழ்நிலை மாற்றங்கள், கணிப்புக்கு அப்பாற்பட்டவையாக நடைபெற்று வருகின்றன. நன்னீர்ச்சூழ்நிலையின் வகைகள். நன்னீர்ச் சூழ் நிலை அமைப்புகளை இருவகைகளாகப் பிரிக்கலாம். 1) நிலையான நீருள்ள நீர்நிலைகள் - ஏரி, குளம், குட்டை மற்றும் சதுப்பு நிலம் ஆகியன. 2) ஓடும் நீருள்ள நீரமைப்புகள் - ஊற்று, அருவி, ஓடை, ஆறு, கழிமுகம் ஆகியன. காட்ட உலகின் ஓடும் நீருள்ள அமைப்புகள். நதி, அருவி மற்றும் அதனைச் சார்ந்தவை, ஓடும் நீர்ச்சூழ்நிலை அமைப்பு களில் (Lot c Ecosy stem) அடங்குவன ஆகும். இவற்றின் பரிமாணங்களை அளவிட்டுக் முடியாது. சிறு ஊற்றுகள் தொடங்கி மிகப்பெரும் நதியான அமேசான் வரை இதில் அடங்கும். அமேசான் நதியின் வேகம் ஒரு நொடிக்கு 93000 மீட்டர் ஆகும். சீறிப்பாயும் காட்டாறுகள், கடும் வேகத்தில் விழும் அருவி கள். அமைதியாய் ஓடும் நதிகள் ஆகியன ஓடும் நீர் அமைப்புகளே. ஓடும் நீருள்ள நீரமைப்புகளில் முக்கியப் பண்புகள் யாவும் அதனுடைய இயக்கத்துடன் தொடர்பு கொண்டவை. நீரோட்ட வேகம் மற்றும் நீர் வரத்து வீதம் ஆகியவை நீர் இயக்கத்தைக் குறிப்பிடப் பயன்படும் அலகுகள் ஆகும். இவற்றுடன் நீர்ச் சூழல் அமைப்பின் சிறப்புத் தன்மை அதன் ஒழுங்கற்ற கொந்தளிப்பு ஓட்டம் ஆகும் (turbulence). நீர், ஒரே சீராக நேர் கோட்டுப் பாதையில் ஓடிக் கொண்டிருக்குமேயானால் அது நேரிய ஓட்டம்' (laminar flow) எனப்படும். மாறாக உள்ளும் புறமுமாக முட்டி மோதிச் சுழன்று ஓடினால் அது ஒழுங்கற்ற கொந்தளிப்பு ஓட்டம் (turbulent flow) எனப்படும். காண்க படம் 1. கொந்தளிப்பு ஓட்டத்தின் வேகம் அதிகமாகும் போது, நீரின் அரிமான ஆற்றல் (shear forces) அதிகமாகி, அடித்தளத்திலுள்ள வண்டல் படிவின் மேல் பலமாக மோதுவதால் வண்டலும் அதனைச் சார்ந்து வாழும் உயிரினங்களும் மேலே கொண்டு வரப்படுகின்ற அத்துடன் றன. மேற்பகுதியிலுள்ள ஆக்சிஜன் கீழ்மட்டம் வரை கொண்டு செல்லப் படுகிறது. எனவே அடிப்பகுதியில் வாழும் உயிரினங் கள் வாழ ஏதுவாகிறது. பெரும்பாலும் இம்மாதிரி யான நீரோட்டங்களில் மேல் மட்டத்திலும் அடி மட்டத்திலும் ஆக்ஸிஜன் அளவு ஒரே மாதிரியாக க ஓடும் நீர்ச் சூழலமைப்புகள் 861 சுழல் ஓட்டம் நேரிய ஓட்டம் படம் 1 . நீரின் இருவித ஓட்டங்கள் இருக்கும். ஆனால் நேரிய ஓட்டமுடைய நீரில் இந்த அரிமான ஆற்றல் (shear force) குறைவு. இந்த நீர்ச் சூழலில் மேல்மட்ட ஆக்ஸிஜன் கீழ்மட்டத்திற்குக் கொண்டு செல்லப்படுவதில்லை. எனவே அடிப் பகுதியில் மேல் மட்டத்தைவிட ஆக்ஸிஜன் குறை வாகவே இருக்கும். ஆக்ஸிஜன் அளவுக்கு ஏற்ப அங்கு உயிரினங்கள் காணப்படுகின்றன. அரிமான ஆற்றலை அடிப்படையாகக் கொண்ட தன்மை. ஓடும் நீரமைப்புகளில் மிகவும் முக்கியமானது. நீரால் சூழப்பட்டுள்ள நிலப்பரப்பு எவ்வாறு எந்த அளவுக்கு அரிக்கப்படும் என்பது நீரின் இந்த ஆற்றலைப் பொறுத்துள்ளது. ஓடும் நீரமைப்பில் வாழும் உயிரினங்களின் வகைகளும் எண்ணிக்கையும் இதைப் பொறுத்தே அமைகின்றன. இந்த ஆற்றலின் தாக்கத்தைத் தாங்கக்கூடிய உயிரினங்கள் மட்டுமே அடித்தள வண்டலில் உயிர் வாழ முடியும். மேலும் இந்த அரிமான ஆற்றல் பாறைகளை அரிப்பதால் பாறைத் துகள்கள் உண்டாகின்றன. இவற்றில் பெரும்பகுதி நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்படு கிறது. எந்தப் பாறைத் துகள்கள் அடித்துச் செல்லப் படுகின்றன.எவை அடித்துச் செல்லப்படாமல் தங்கி நிற்கின்றன என்பதைப் பொறுத்து நீர்ச் சூழல் மற்றும் உயிரமைப்புகள் இருக்கும். ஓடும் நீர்ச்சூழ்நிலை அமைப்புகளை அருவி சார்ந்தவை, ஓடை சார்ந்தவை, ஆறு சார்ந்தவை என வரையறுத்துக் கூற முடியாது. பொதுவாக