உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/894

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

870 ஓணான்‌

870 ஓணான் நன்மைகள் செய்கின்றன. மனிதனுக்கும் ஆடு மாடு களுக்கும் நோய் தோற்று விக்கும் கிருமிகளைக் கடத்தும் பூச்சிகளையும், கொசுக்களையும் இதர தொல்லைதரும் பூச்சிகளையும் தேடிப்பிடித்து உண்ணுகின்றன. மேலும் இவை பயிர்களையும், தாவரங்களையும் தளிர்களையும் தாக்கும் வெட்டுக் கிளிகளையும், பூச்சிகளின் இளவுயிரிகளையும் பிடித்து உண்ணும். எனவே இப்பூச்சிகளால் சாதாரண மனிதனுக்கும் விவசாயிகளுக்கும் பெரிதும் பயன் ஏற்படுகிறது. விவசாயப் பொருள்கள் பாதுகாக்கப் படுவதால் நல் நாட்டின் பொருளாதார முன்னேற் றத்தில் இப்பூச்சிகள் பெரும் பங்கேற்கின்றன. வகைப்பாடு. வரிசை ஓடோனேட்டாவில் சுமார் 5000 இனங்கள் வரை இன்றைய உலகில் காணப் படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. வரிசை ஓடோ னேட்டா இரண்டு உள்வரிசைகளாகப் (Suborder) பிரிக்கப்பட்டுள்ளது. உள்வரிசை. 1. சைகாப்ட்ரா (Zygoptera) உள்வரிசை. 2. அன்ஐசாப்ட்ரா (Anisoptera) சைகாப்ட்ரா. இதில் எல்லா ஊசித்தட்டான் பூச்சிகளும் (Damsel flies) அடங்கும். இவை ஆஸ்தி ரேலியா கண்டத்தில் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் ஊசித்தட்டான் பூச்சிகள் வெஸ்ட்டாலிஸ் (vestalis) மற்றும் நியுரோபேசிஸ் (neurobasis) இனத்தைச் சேர்ந்தவை. இவை மிக மெண்மையான உடலுடைய சிறிய பூச்சிகள். இவை அழகிய வண்ணங்களுடன் திகழும். நதிக்கரையோரம். அல்லது குளக்கரையோரங் களில் அதிகம் காணப்படுகின்றன. இப்பூச்சிகள் மெது வாகப் பாய்ந்து பாய்ந்து பறக்கும் இயல்புடையன. இப்பூச்சிகள் ஓய்வாக அமர்ந்திருக்கும்போது தம் றக்கைகளை ஒன்று சேர்த்துக் குவிந்த நிலையில் வைத்துக்கொள்ளும். தம் இறக்கைகளின் உதவியால் வை உணவினைப் பிடிக்கும் மெல்லிய உடலைக் கொண்டிருப்பதால் இவை ஊசித்தட்டான் எனப் பெயர் பெற்றன. அன்ஐசாப்டிரா. இதில் எல்லாத் தட்டாம் பூச்சி களும் (dragon flies) அடங்கும். இவை உருவத்தில் பெரியவை. உறுதியான உடலமைப்புடையவை. மிக விரைவாகவும், உறுதியாகவும் பறக்கும் ஆற்றல் பெற்றவை. ஓய்வெடுக்கும் காலத்தில் தம் இறக்கை களை விரித்த நிலையிலேயே வைத்திருக்கும், பறக்கும் போதே உணவினைப் பிடிக்கும். இவை மனித சமு தாயத்திற்குப் பெரும் உதவி புரிகின்றன. இவற்றின் வளர்ச்சிநிலைகள் ஓராண்டு வரை நீடிக்கும். அ.ஷேக் தாவூத் நூலோதி. Mani. M.S., General Entomology. Oxford Publishing Co. Bombay. படம். ஓணான் ஓணான் ஊர்வன வகுப்பில் ஓந்தி உள்வரிசையைச் சேர்ந்தது.இதன் விலங்கியல் பெயர் கலோட்டிஸ் வர்சிகோலர் (Calotes Versicolor) என்பதாகும். மரத்தில் வாழும் இதற்குப் பட்டையைப் பற்றிக் கொண்டு ஏறுவதற்கேற்ற நீண்ட விரல்களும் நகங் களுமுள்ளன. ஓணான் தோட்டங்களிலும் வேலி யிலும் சுவரிலும் புல்தரையிலும் ஓடிக்கொண்டும், தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டும். வெயிலில் காய்ந்து கொண்டும் இருப்பதைக் காண லாம். இது பூச்சி, சிலந்தி புழுக்களையே முக்கிய உணவாகக் கொள்ளுகிறது. ஓணான் நிறம் மாற வல்லது. நிறம் மாறுவது உணர்ச்சியின் பயனாகவோ. வெயில் காயும் போதோ விளையலாம். தலையும் கழுத்தும் சற்று மஞ்சளாகவும் ஆங்காங்கு சிவப்பு விழுந்தும், உடல் சிவந்தும், காலும் வாலும் கறுத்தும் இருப்பதுண்டு. இனப்பெருக்கப் பருவத்தில் ஆண் ஓணான் பளிச்சென்ற செந்நிறத்தைப் பெறுகிறது. இக்காரணத்தால் இதற்கு இரத்த உறிஞ்சி (blood sucker) என்னும் பெயர் வழக்கிலிருந்து வருகிறது.