898 ஓரதர்
898 ஓரதர் பண்ணைகளில் பயன்படுத்தும் இடைச்செய்தித் வீடு, தானியக் தொடர்பு அமைப்புகள் பண்ணை பண்ணை ஆகியவற்றிற் களஞ்சியம், வெளியிடப் கிடையே செய்தித் தொடர்பு கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.. இவ்வமைப்புகள் மைய அலுவலகத்திலிருந்து வரும் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவும், மைய அலுவலகத்தை அழைக்கவும் ஏற்ற வசதிகளைப் பெற்றுள்ளன. பொதுவாக, அனைத்து இடைச்செய்தித் தொடர்பு நிலையங்களும் பேசக்கூடிய வகையில் வெளியிலுள்ள கையால் எடுக்காமலேயே அமைந்துள்ளன. கட்டடத்திற்கு இடங்களுக்கும் கேட்குமாறு உரத்து ஒலிக்கும் மணி களைக் (bells) கொண்டுள்ளன. தொழிலகங்களில் பயன்படும் இடைச்செய்தித் தொடர்பு அமைப்புகள் பெரும்பாலும் கையால் எடுக்காமலேயே பதிலளிக்கும் வகையில் அமைந் துள்ளமையால், பிற இணைப்புகளுக்கான அழைப்பு களைத் தாமாகவே (automatically) ஏற்படுத்தவும் பதிலளிக்கவும் முடியும், மருத்துவமனைகளில் உள்ள இவ்வமைப்புகள் செவிலியர் நோயாளிகளைக் கவனிக் கும் போது ஏற்படும் உடனடித் தேவைகளைஈடு செய் வதற்கு உதவியாக உள்ளன. உள் அமைப்பு. உள் அமைப்புகள் நாடு தழுவிய தொலைபேசிப் பங்கீட்டு அமைப்புடன் ணைக்கப் படுவதில்லை. அளவு, செயல்படும் முறை, அமைப்பு ஆகியவற்றால் இவை வேறுபடுகின்றன. பெரும்பா லான இவ்வமைப்புகள் உயர் ஈட்ட மிகைப்பிகளைக் (high gin amplifiers) கொண்டுள்ளன. இவற்றால் மைய நிலையத்திலுள்ள தள்ளு பொத்தான்களின் கட்டுப்பாட்டால் இயங்கும் துணை நிலையங்களி லும், அழைப்புகளைத் தெளிவாகக் கேட்க முடியும். பொதுவாக இந்த ஒலிபெருக்கிகள், எதிர்த்திசையில் (microphone) பேசுவதற்குரிய ஒலிவாங்கியாகவும் செயல்படுகின்றன. வா. அனுசுயா ஓரிடத்தி வடிவியலில் ஒரு பரப்பிடத்தில் வரையப்படும் வெவ் வேறுவிதப் பாதைகளைப் பற்றி அறிந்து, பின்னர் பரப்பிடங்களை வகைப்படுத்துதல் ஓரிடத்தி (homo- topy) எனப்படும். பொது முனைப்புள்ளிகளையுடைய இரு பாதைகளில் ஒன்று அதன் முனைப்புள்ளிகளி லிருந்து விலகாமல் தொடர்ச்சியாக, மற்றபாதையாக உருத்திரிபு பெற்றால் அவ்விரு பாதைகளும் ஓரிடத்தி களாகும். மேலும் அடிப்புள்ளியில் தொடங்கப் பெற்று மீண்டும் அதே புள்ளியில் முடிவடையும் மூடிய பாதைகளும் ஓரிடத்திகளாகும். இயற்கணிதத்தில் இவை ஒரு குலமாகக் கருதப்படும். பரப்பிடத்தின் தன்மைக்கேற்ப, குலத்தின் அமைப்பு வேறுபடும். துளையே இல்லாத பரப்பிடத்தில் எல்லா மூடிய பாதைகளும் ஓரிடத்திகளாகும். ஒரே ஒரு துளை யுள்ள பரப்பிடத்தில் அந்தத் துளையைச் சுற்றி எத் தனை தடவை வளைந்து, வளைந்து செல்கிறதோ அத்தனை முறை ஓரிடத்திகளாகும். இப்பிரிவுகள் சமமாகவும் இருக்கும். உ ஒரு பாதை, மற்றொரு பாதையாக ருத்திரிபு பெறுவதைப் பின்வருமாறு விளக்கலாம். ஒரு புள்ளி யில் தொடர்ச்சியாக உள்ள புள்ளிகளுடன் (0,1) கொண்ட என்ற இடைவெளியில் உள் புள்ளிகளைக் சார்புடன் ஒரு பாதையைத் தொடர்புபடுத்துவதால். இடைவெளியில் உள்ள சுற்றுப்புறப் புள்ளிகள், பாதையில் உள்ள புள்ளிகளுக்கு ஒத்திருப்பனவாகும். f (x),g (x) என்ற இரண்டு பாதைகளுடன் h (x, t) என்ற ஓரிடத்திச் சார்பு தொடர்புடையதாகும். x, 1 என்ற இரண்டு மாறிகளையுடைய சார்பு t=o ஆனால் f (x) க்கும், t = ! ஆனால் g (x) க்கும் சம மாகும். மேலும் t, 0விலிருந்து 1க்கு மாறும்போது பரப்பிடம் மாறாமல், உருத்திரிபு அடைகிறது. ஓரிடத்திக்குலங்கள் உயர் அளவு வடிவங்களுக்கு வரையறுக்கப்பட்டாலும், அவற்றின் அமைப்புகளைக் கணிப்பது எளிதன்று. ஆகையால் இவற்றிற்கு அமைப்பு ஒப்பியல் குலங்கள் (homology groups) பயன்படுகின்றன. பங்கஜம் கணேசன் ஓரதர் காண்க: கட்டுப்பாட்டிதழ் ஓரதர் இயக்கத் தொடர் காண்க: கட்டுப்பாட்டிதழ் இயக்கத் தொடர். ஓரிதழ்த் தாமரை இது வயலேசி (Violaceae) என்ற இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதைத் தாவரவிய லர்கள் ஹைபேந்தஸ் என்னியேஸ்பர்மஸ் (Hybanthus ennea spermus) என்று கூறுவர். இதன் பழைய கலைப் பெயர் அயோலிடியம் ஸஃப்ருடி கோசம் (Ionidium suffrnticosum) என்பதாகும். இச்செடி வெப்ப