உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/932

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

908 ஓரை ஒளி

908 ஓரை ஒளி ஓரை ஒளி இது ஓரை வட்டப்பகுதியில் (zodiac) காணப்படும் மிகவும் மங்கலான ஒளிப் பட்டையாகும். மேலைத் திசையில் சூரியன் மறைவைத் தொடர்ந்தும், வைகறையில் மங்கலொளிக்கு முன்னர் கீழ்த்திசையி லும் இது தோன்றும். இது கூர் நுனிக்கோபுர வடிவில் (pyramid) இருக்கும். சூரியனிலிருந்து தொலைவு கூடக் கூட இவ்வொளியின் பொலிவு குறைந்து கொண்டே செல்லும். எனவே எவ்வளவு தொலைவு வரை இது காட்சியளிக்கும் என்பது காண்போரின் பார்வைக் கூர்மையைப் பொறுத்ததாகும். பொது வாகச் சூரியனிலிருந்து 25°க்கு அப்பால் இதைப் பார்ப்பது அரிது, நடுத்தர நிலக்குறுக்குக் கோட்டுப் பகுதியில் intermediate latitudes ) ஓரை வட்டம், அதன் உச்ச ஏற்றத்தை அடையும்போதுதான் இது காணப்படும். இந்நிலை இளவேனில் கால மாலைப் போதிலும், இலையுதிர் காலக் காலைப் போதிலும் ஏற்படும். பிற காலங்களில் தொடுவானத்துக்கு மிக அருகில் இருக்கும். வளிமண்டலத் தூசாலும் ஆவி மூட்டத் காணமுடியாத தாலும் இது மிக மிக மங்கலாகக் அளவில் இருக்கும். வெப்ப மண்டலங்களில் (tropics) ஓரைவட்டம் ஆண்டு முழுதுமே பெரும்பாலும் நிலைக்குத்தாகத்தான் இருக்கும். எனவே. இங் கெல்லாம் ஓரை ஒளியை அனைத்துப் பருவத்திலும் காணலாம். ஓரை ஒளி தன்னொளிர் மூலமன்று என்பதை நிறமாலையில் ஆய்வுகள் சுட்டுகின்றன. சூரியக் குடும்ப வெளி முழுதும் பரவலாக உள்ள எண்ணற்ற சிறு சிறு துகள்களில் சூரிய ஒளி பட்டு எதிரொளிப்ப தாலும் கோட்டம் (diffraction) அடைவதாலுமே ஓரை ஒளி தோன்றுகிறது. ஹென்ட்ரிட்சி.வான் டே கூறினர். ஹல்ஸ்ட் என்பார் ஓரை ஒளியின் ஒளிப்பொலிவின் கணக்கீடுகளிலிருந்து சூரிய மண்டலம் முழுதும் பரவியிருக்கும் துகள்கள் 1. மி.மீ. விட்டமுடையன 8கி.மீ. என்றும் ஒன்றுக்கொன்று ஏறக்குறைய தொலைவில் இருக்கவேண்டுமென்றும் இத்துகள் மேகம், தட்டு வடிவில் இருக்க வேண்டும் என்றும் இத்தகடு ஞாயிற்றின் தோற்றப்பாதையின் (ecliptic) தளத்திலேயே அமையவேண்டும் என்றும் இத்தகட்டின் கனம் புவிச் சுற்றுப் பாதையின் விட்டத்தில் ஏறத்தாழப் பத்தில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்றும் இவர் கணக்கிட்டார், இந்த அளவுடைய துகள்கள் சூரிய வெப்பத்தையேற்றுச் சூடாகி வெப்பக்கதிர் வீசும்போது இவை சுருள் வட்டப் பாதையில் (spiral) (spiral) சென்று சூரியனை அடைந்துவிடும் என்பதைப் பாயிண்டிங் ராபர்ட்சன் விளைவிலிருந்து உணரலாம். எனவே, இவை அண்மைக் காலத்தில்தான் உண்டாகியிருக்க வேண்டும்; காலவெளியில் தொன்மையில் தோன்றி இருக்க முடியாது என உணரலாம். எனவே, இத் துகள்கள் வால்மீன்கள் (comets) படிப்படியாகச் சிதைவதாலும் சிறு கோள்கள் தொடர்ந்து பொழிவ தாலும் ஏற்படலாம். ஓரை ஒளி (கணிதம்) காண்க: இராசி ஒளி ஓல்டாம் பிணைப்பு ச. சம்பத் இயக்கத்தில் அல்லது சுழற்சியில் இருக்கக்கூடிய செயல் தண்டுகளை இணைப்பதற்குப் பல்வேறு வழி விளிம்புப்பட்டை உருள்பலகை ஓல்டாம் பிணைப்பு படம் 1. ஓஸ்டாம் பிணைப்பு 105 170