ஓஜோ விளைவு 913
ஓஜோ விளைவு 913 ஓஜோ விளைவு. அணுவின் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் கட்டுக்குள்ளிருந்து (energy shell)ஓர் எலெக்ட் ரான் வெளித்தள்ளப்பட்ட பிறகு அந்த இடத்தில் வெற்றிடம் ஏற்படுகிறது. அதனால் அணு சற்றே கிளர்ச்சியுற்ற நிலையில் உள்ளது. அது மீண்டும் கீழ்க்காணும் இரு வகையான நிகழ்ச்சி மாற்றங்களில் ஒன்றினாலோ அவற்றின் தொடர்ந்த நிகழ்வு களாலோ சாதாரண நிலைக்கு வருகின்றது. முதல் எக்ஸ்-கதிர் வெளிப்பாடு, கதிர் வீச்சில்லா மாற் றம் ஆகிய ரு வகையான நிகழ்ச்சி மாற்றங்களி லும் மிகுதியான ஆற்றல் நிலையிலிருக்கும் ஓர் எலெக்ட்ரான் அந்தக் குறைநிலை எலெக்ட்ரான் வெற்றிடத்தை நிறைவு செய்கிறது. இதில் ஓர் ஆற்றல் நிலைக்கும் மறு ஆற்றல் நிலைக்கும் உள்ள கட்டுப்பாட்டு ஆற்றல் (binding energy) வேறுபாடு எக்ஸ் - கதிர்களாக வெளிப்படலாம். து வகை நிகழ்ச்சி மாற்றம் ஆகும். இந்த நிகழ்வின் போது, மேற்கூறிய கட்டுப்பாட்டு ஆற்றல் வேறுபாடு மிகுந்த ஆற்றல் நிலையிலுள்ள வேறோர்எலெக்ட் ரானின் கட்டுப்பாட்டு ஆற்றலைவிட மிகுதியாக இருந்தால் எக்ஸ்-கதிர் வெளிப்பாட்டிற்குப் பதிலாக அந்த எலெக்ட்ரானும் வெளிப்பட்டுவிடும் (படம் 2). இதனால்தான் இது கதிர் வீச்சில்லா மாற்றம் எனப்படுகிறது. ஆய்வு மூலமாக இதை நிறுவிக் காட்டிய ஓஜோ பெயரால் ஓஜோ விளைவு என்று இது குறிப்பிடப்படுகிறது. இது தன்னிச்சைத் துகள் பிரிதல் (auto ionisation) என்று கூறப்படுகிறது. இவ்வாறாக K-கூட்டில் ஏற்பட்டுள்ள எலெக்ட் ரான் வெற்றிடத்தை நிறைவு செய்யும்போது ஓஜோ எலெக்ட்ரான் I - கூட்டிலிருந்து உருவாகலாம். அவ் வாறு உருவானால் K-கூட்டுக்கட்டுப்பாட்டு ஆற்றல் நிலைக்கும் L - கூட்டுக்கட்டுப்பாட்டு ஆற்றல் நிலைக்கு முள்ள வேறுபாடு L-கூட்டுக்கட்டுப்பாட்டு ஆற்றலை விட மிகுதியானது என்று பொருள். அதாவது வெளிப்பட்ட ஓர் ஓஜோ எலெக்ட்ரானின் ஆற்றல் ஒரு K-கூட்டுக்கட்டுப்பாட்டு ஆற்றலுக்கும் L-கூட்டுக் கட்டுப்பாட்டு ஆற்றலின் இரு மடங்குக்கும் உள்ள வேறுபாடாகும். இவ்வாறு K-கூட்டு வெற்றிடத்தை L - கூட்டு எலெக்ட்ரான் நிறைவு செய்யும்போது வெளிப்படுகின்ற L - கூட்டு ஓஜோ எலெக்ட்ரான் K-LL ஓஜோ எலெக்ட்ரான் எனப்படும். ஓஜோ வினைவின் முன்னோடியும் ஆய்வும். பர்க்லா. சாட்லர் ஆகியோர் சில தனிப்பட்ட பொருள்களின் மூலம் K-கூட்டில் சற்று ஆற்றல் மிகுந்த எக்ஸ்-கதிர் கள் உறிஞ்சப்படுகின்றன. என்பதைக் கண்டனர். கோசல் ஒளியின் வெளிப்பாடு தவிர மிகையாக ஏற்படும் உள்ளிட்ட வெற்றிடங்கள் கதிர்வீச்சில்லா நிகழ்வு மாற்றங்கள் மூலமாக நிறைவு செய்யப் பட்டிருக்கக்கூடும் என்று தெரிவித்தார். வில்சன் அ.க.6-58 M சூட்டு அணுமையம் படம் 2 எலெக்ட்ரான் கூடுகள் ஓஜோ எலெக்ட்ரான் என்பவர் தம் முகிலறை (cloud chamber) ஆய்வு மூலமாக ஒரே விலிருந்து அணு இரு எலெக்ட்ரான் கள் ஒரேநேரத்தில் வெளிப்படுவதைத் கண்டறிந்தார். இவ்வாறு படிப்படியாக வளர்ந்த கருத்துக்கு ஒஜோ முதன் முறையான திட்டமான ஆராய்ச்சியும் ஆய்வு வடிவமும் கொடுத்தார். அவர் தம் முகிலறையில் ஆர்கன் வளிமத்தைப் பயன்படுத்திச் செய்த ஆய்வு களின் பயனாகக் கிடைத்த புகைப்படங்களால் கீழ்க் காணும் குறிப்புகளை உறுதிப்படுத்தினார். முகிலறையில் பயணம் செய்யும் எக்ஸ் கதிர் கள் ஒளி எலெக்ட்ரான்களை உண்டாக்குகின்றன. எலெக்ட்ரான்கள் பயணம் செய்த சுவடுகளின் நீளம் எக்ஸ்கதிர்களின் ஆற்றல் பெருகப் பெருக உயரும். ஒளி எலெக்ட்ரானும் அதைத் தொடர்ந்து ஓஜோ எலெக்ட்ரானும் ஒரே புள்ளியிருந்து தோன்று கின்றன. ஓஜோ எலெக்ட்ரான் சுவடு (trace) நீளம். பயன்படுத்தப்பட்ட எக்ஸ்கதிரின் அலைநீளத்தின் சார்புடையதன்று. முகிலறையில் பயன்படுத்தப்பட்ட வளிமத்தைச் சார்ந்தது. ஓஜோ எலெக்ட்ரான் வெளிப்படும் திசை, எலெக்ட்ரான் வெளிப்படும் திசையுடன் தொடர்புடையதன்று. அனைத்து ஒளி எலெக்ட்ரான் சுவடுகளும் உடன் தோன்றும் ஒஜோ எலெக்ட்ரான் சுவடுகளைக் கொண்டிருப்பதில்லை. அவருடைய ஆய்வில் பொதுவாக K-LL G எலெக்ட்ரானின் சிறிய சுவடுகளைக் கண்டார். சிற்சில சூழ்நிலைகளில் மேலும் சில கூடுதலான எலெக்ட்ரான் சுவடுகளைக் கண்டார். ஓஜோ அவை