கடல் சட்டம் 159
கடல் சட்டம் 159 நீளக் கடற்கரையுடைய கினியா 211 கி.மீ. வரை யும், 164 கடல் மைல் நீளக் கடற்கரை நாடான எல்சால்வடார் 333 கி. மீ. வரையும் ஆட்சிமண்டலக் கடல் வேண்டுமென்றன. ஆட்சி மண்டலக் கடலின் எல்லைக்கு அப்பால் உள்ள கடல் ஆழ்கடல் (high seas) எனக் குறிப்பிடப் பட்டு அதில் அனைத்துலகமும் உரிமை பாராட்டியது. கடற்கரை நாடுகள் தாம் மீன் பிடிப்பதற்காகச் செல்லக்கூடிய தொலைவு இவ்வளவு என்றும், அந்த எல்லைக்குள் பிற நாடுகள் மீன் பிடிக்கக்கூடாது என்றும் கூறிவந்தன. எடுத்துக்காட்டாக நியூசிலாந் தின் ஆட்சிக் கடல் எல்லைக்குள் ஜப்பான் மீன் பிடிக்க வந்ததை நியூசிலாந்து எதிர்க்கவே ஜப்பான் பின்வாங்கியது. பின்னர் நியூசிலாந்து தன் ஆட்சிக் கடலுக்கு அப்பால் 15 கி. மீ வரை தன் மீன்பிடி மண்டலம் உள்ளது எனச் சட்டமியற்றியது. அதை எதிர்த்து ஜப்பான் அனைத்துலக நீதிமன்றத்துக்கு மனுச் செய்தது. வழக்கு இருந்தபோதும் இரண்டு நாடுகளும் ஒன்றையொன்று மதித்து நடந்துகொண் டன. இறுதியில் இரு நாடுகளும் சமாதானமாகவே கலைத் தீர்த்துக் கொண்டன. ஆழ்கடலில் அனைத்து நாடுகளும் மீன் பிடிக்க லாம் என்னும் சுடல் சட்டம் இருந்தபோதிலும் வசதி மிக்க சில நாடுகளே நீண்ட தொலைவு சென்று மீன் பிடித்தன. 1950 ஆம் ஆண்டு வரை உலக மீன் உற்பத்தியில் நூற்றுக்கு 2% தான் பிடிக்கப் பட்டு வந்தது. 1950 க்குப் பின் மீன்பிடி துறையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டது. ஜப்பானியர்கள் தம் நாட்டிலிருந்து 1666 கி. மீ. அப்பாலும் சென்று மீன் பிடித்து வரலாயினர். சோவியத் ஒன்றியக்குடி யரசும் மீன் பிடிப்பதில் பெருமளவு முன்னேறியது. ஸீல் எனும் கடல்வாழ் விலங்கை வேட்டையாடு வதில் பெரும் போட்டியும், சில பகுதிகளில் ஸீல் இனம் அழிந்து போகக்கூடிய அழிநிலையும் ஏற்பட்ட தால் ஸீல் பிடிப்பதில் பங்கு கோண்ட நாடுகளுக் கிடையே ஒரு மாநாடு நடந்து அதில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. பின்பு 1940 ஐ அடுத்த ஹாலிபுட் சால்மன் என்னும் வகை மீன்கள் பிடிப்பது பொறுத்து ஒரு சில நாடுகளிடையே ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அதே போல் வடமேற்கு அட்லாண்டிக் ஒப்பந்தம், வடபசிபிக் ஒப்பந்தம் போன்றவை ஏற்பட்டன. இத்தகைய ஒப்பந்தங்களைப் பின்பற்றி அனைத் துலகச் சட்ட ஆணையம் (international law mission ) விதிகளை வகுத்தது. 1930 இல் நிலவிய சூழ்நிலைகளைக் கொண்டே அவ்விதிகள் அமைக்கப்பட்டதால் 1950 க்குப் பின் விளைந்த தொழில் நுட்ப வளர்ச்சியை ஆணையம் நோக்கத் தவறியதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் (U. N.O.) சுட்டிக் காட்டியது. பழைய கருத்தில் com- வளங்களைப் பயன் உலகநாடுகள் ஆழ்கடல் படுத்துவதை நெறிப்படுத்தத் தொழில் நுட்ப வல்லு நர், சட்ட வல்லுநர் ஒருங்கிணைந்து மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்று 1954 இல் ஐக்கிய நாட்டு நிறுவனம் முடிவெடுத்தது. ஆனால், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சட்ட வல்லுநர்கள் தொழில் நுட்ப வியலாரின் தலையீடு தேவையற்றது எனக் கருதினர். பல முயற்சிகளுக்குப் பின்னர் கடல் உயிர்ப் பொருள் வளம் பற்றிய தொழில்நுட்ப மாநாட்டைக் (In ternational Technical conference on living resources of the sea) கூட்டுவதற்கு ஐ.நா. நிறுவனம் இசைந் தது. அம்மாநாடு 1955 ஏப்ரல் 18 இல் ரோம் நகரில் கூடியது. 45 நாடுகள் தம் பிரதிநிதிகளையும் ஆறு நாடுகள் பார்வையாளர்களையும் அனுப்பின.கடற் கரையில்லாத நாடுகள் சிலவற்றின் பிரதிநிதிகளும் அம்மாநாட்டில் பங்கேற்றனர். மூன்று வாரங்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் தொழில் நுட்ப அடிப் படையில் கொள்கைகள் வகுக்கப்பட்டன. அம் மாநாட்டின் முடிவுகள் ஜெனிவாவிலிருந்த அனைத் துலகச் சட்ட ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டன. அதற்கு முன் ஏழு ஆண்டுகளாக அந்த ஆணையம் தயாரித்து வந்த விதிகள் கைவிடப்பட்டு, தொழில் நுட்பக் கருத்துகளின் அடிப்படையில் மீன் பிடித்தல் தொடர்பான புதிய விதிகள் உருவாக்கம் பட்டன. அவ்விதிகள் 1955 இல் பல் நாடுகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டன. சில நாடுகள் அல் விதிகளில் செய்யவேண்டிய மாறுதல்கள் பற்றிப் பயன்படும் கருத்துகளைக் கூறின. 1956 இல் அனைத்துலகச் சட்ட ஆணையம் அவ்விதிகளை மீள் ஆய்வு செய்து ஒரு புதிய அறிக்கையைத் தயாரித்து உலக நாடுகளின் பார்வைக்கு அனுப்பியது. மீன் பிடிப்பதற்கான திட்டவட்டமான முடிவு களைத் தீர்மானம் செய்திட ஒரு கடல் சட்ட மாநாடு கூட்டப்பட வேண்டுமென்னும் கருத்து ஐ.நா. அவையில் எழுந்தது. சில நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து தம் கருத்தை வலியுறுத்தின. அப்போது எழுந்த கருத்து வேறுபாட்டை இந்தியா தீர்த்து வைத்து, பயனுள்ள ஒரு முடிவை நிலைநிறுத்தியது. அதன் பின்னர் ஐ.நா. நிறுவனம் கடல்சட்ட மாநாடு ஒன்றை 1958 இல் ஜெனிவாவில் கூட்டியது. அதில் 85 நாடுகள் பங்குபெற்றன. நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டன. முதலாம் குழு ஆட்சிமண்டலக் கடல், அதை அடுத்து ஒட்டிய மண்டலம் (conti- nuous zone) ஆகிய இரண்டையும் பற்றி விவாதித்தது. இரண்டாம் குழு ஆழ்கடல் கட்டுப்பாட்டு மேலாண்மை பற்றியும், மூன்றாம் குழு ஆழ்கடல் மீன்பிடிப்பு, ஆழ்கடலில் உயிர்ப் பொருள்கள் அழிந்து விடாலண்ணம் நிலை காக்கும் பணி (conservation ) பற்றியும் நான்காம் குழு கடற்படுகை (continentai stelf) பற்றியும் விவாதித்தன.