உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் களஞ்சியம் சுக்குவான் இருமல் தொகுதி - ஏழு நலமாக இருந்த குழந்தை நலம் குன்றிப் போவதற் கும். பின்னர் காசம் போன்ற நோய்கள் தொடர் வதற்கும் வழி வகுப்பது கக்குவான்இருமல் (whooping cough) என்ற நோய் ஆகும். தொத்துநோய்த் தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் இந் நோய் தற்காலத்தில் அதிகம் இல்லை. தடுப்பு முறை பரவாத நாடுகளிலும், சிற்றூர்களிலும் இன்றும் இந் நோய் பல குழந்தைகளைத் தாக்குகிறது. பரவும் விதம். பார்டெட்டெல்லா பெர்டூசிஸ் (Bordetella pertusis) என்னும் கிருமிகளால் இந்நோய் பரவும். தொடக்கத்தில் வரும் இருமல், தும்மல் மூலம் விரைவில் பரவ இந்நோயைத் தொடக்க நிலையில் அறிய முடிவதில்லை. எனவே பள்ளியில் ஒரு பிள்ளைக்கு இந்நோய் இருந்தால் பல குழந்தை களுக்கும் விரைவில் பரவிட வாய்ப்புண்டு. பின்னர் வரும் தொடர் இருமல் அந்த அளவு பரவுவதில்லை. மழைக் காலத்தில் சளிக் காய்ச்சலோடு இந்நோயும் அதிகம் இருக்கும். ஐந்து வயதுக் குழந்தைகளுக்கே. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கே இந்நோய் அதிகம் உண்டாகிறது. நோயின் தன்மை. தொற்றிய 7-8 நாள்களில் சளி, மூக்கு ஒழுகல், தும்மல், கண்களில் கண்ணீர் முதலியவற்றோடு சிறு காய்ச்சலும் தோன்றும். வறட்டு இருமல் வாட்டும். இதைச் சளி பிடித்த தொடக்க நிலை எனலாம். சுமார் ஒரு வாரம் சென்ற பின், தணிந்து போகும். சாதாரண காய்ச்சல் போலில்லாமல் இருமல் தொடரும். அது தொடர் இருமலாக இருக்கும். காரணமின்றியோ, அழுவதாலோ, அச்சத் தாலோ, எதையேனும் சாப்பிடுவதாலோ சிறுசிறு இருமலாகத் தொடங்கி, பின்னர் விடாத நீண்ட இருமலாகி, பல நிமிடங்களுக்குக் கூடத் தொடரக் கூடும். இந்நிலையில், திறந்த வாய், வெளி நீட்டிய நாக்கு, பிதுங்கிய கண்கள், அஞ்சிய முகம், வியர்த்த உடல் என அக்குழந்தையின் தோற்றமே அச்சுறுத்து வதாக அமையும். தொடர் இருமல் முடிவில் குறுகிய குரல் நாண் வழியாகக் (vocal chord) காற்று உட்புகும் நேரத்தில் கேவல் ஒலி கேட்கும். இது இவ்விருமலின் தனித் தன்மையாகும். இருமலின்போது மூச்சுப் பையிலுள்ள காற்று வெளியேற்றப்படுகிறது. எனவே குழந்தை தொடர்ந்து இருமும்போது, நெடுநேரத்திற்குக் காற்று உட்புகாத காரணத்தால் ஆக்சிஜன் குறைந்து, குழந்தை நீல நிறமாகி (cya-nosis ) விடும். அதேநேரத்தில் மார்பின் அழுத்தமும் மிகுவதால் சிரை அழுத்தமும் மிகுந்து, சிரை நாளங்கள் புடைத்துவிடும். சுண். மூக்கு, காது, தோலுக்கடி போன்ற இடங்களில் இரத்தம் தேங்குவது தெரியும்; வலிப்பும் தோன்றக்கூடும். மூச்சுப்பை அழுத்தம் மிகும்போது, அது எங்கேனும் வெடித்து, காற்று வெளிப்பட்டும் ஃபுளுரா உறையில் (pneumothorax) தேங்கும். மூச்சுக் குழாய் களில் சளி அடைவதால், அப்பகுதி சுருங்கிப் பின்னர் லிரிந்து மூச்சுக் குழல் விரிநிலை (bronchectasis)தோன்ற லாம். நாக்கை நீட்டி இருமுவதால், அதன் அடிப் பகுதி, கீழ்ப்பற்களில் பட்டுக் காயம் உண்டாகலாம். தொடர் இருமலால், வயிற்று அழுத்தம் மிகுந்து குடல் பிதுக்கம் உண்டாகலாம். இருமலோடு, வாந்தி எழும். உண்ட சிறிதளவு உணவும், இவ்வாறு வெளிப் படுவதால் குழந்தை மெலிந்து போகும். தொடர் இருமல் நிலை 4-6 வாரங்களுக்குத் தொடர் வதோடு பிற கேடுகளும் உண்டாகும். இல்லையேல், மெல்ல இருமல் குறைந்து நலமடையும். பிற கேடுகள். மேலே குறித்தவற்றோடு குழந்தை காசம்போன்ற பிற நோய்களுக்கும் இலக்காகலாம். காதில் சீழ் பிடிக்கலாம்.