உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 கடல்‌ தறி

192 கடல் தறி கிறது. இவ்வெப்பம் அனைத்துக் கடல்தரைப் பர வலை ஒட்டிய நிகழ்ச்சிகளிலும் பெரும் பங்கு வகித் தாலும், இந்த வெப்பத்தில் கடந்த கால அமைப்பைப் பற்றி அறிய முடியவில்லை. இதற்குக் காரணம் வெப்பத்திற்கு உருவம் இன்மையே ஆகும். கடல் தட்டு நகரும் அளவு. லிதோஸ்ஃபியர் தட்டுகள் ஒரு குறிப்பிட்ட அளவில் நகர்கின்றன. இது தரைப் பரவலால் ஏற்படுகிறது. புவியின் வரலாற்றை அறிய வேண்டுமென்றால் காலத்துடன் தொடர் புடைய தட்டு நகரும் அளவும் தெரிந்தாக வேண்டும். எரிமலைப் பாறைகள். கடற்குன்றுகள் இவற்றின் வயதை அறுதியிடுவதன் மூலம் கடல்தரைப் பர வலைக் கணக்கிட இயலும்; இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகும். எரிமலைத் தீவுத்தொடர். ஹாவாய்த் தீவுகள் என்பவை எரிமலைத் தீவுகளாகும். ஹாவாய்த் தீவு களின் வயது வடமேற்குத் திசையில் அதிகரிக்கிறது. இந்தப் போக்கு மூவாமேடு தீவுகளுக்கும் ஆஸ்டிரல் தீவுகளுக்கும் பொருந்தும். ஒரு தீவுக் கூட்டத்திற்கும் அவற்றின் வயதிற்கும் உள்ள தொடர்பு ஒவ்வொரு திசையிலும் ஆண்டிற்கு ஏறத்தாழ 8 செ.மீ வரை நகர்வதாகத் தெரிகிறது. இது அரைக்கால் அள வாகும். அதாவது ஒன்றுக்கொன்று எதிராக நகரும் புள்ளிகள் இரண்டின் நடுவில் ஓராண்டு அளவிற்குப்பின் ஏறத்தாழ 16 செ. மீ. இடைவெளி வரும் வரை நகர்தல் நடைபெறும். இவ்விரண்டும் அரைக்கால அளவிற்குச் சமமாகும். நடு அட்லாண்டிக் மலைகள் அருகில் இருக்கும் தீவுகளின் வயது ஒப்பு அடிப்படையில் மிகவும் குறைவாகும். களுக்கு மிகவும் தொலைவிலுள்ள தீவுகளுக்கு வயது மிகுதியாவும் அருகே உள்ளவற்றிற்குக் குறைவாகவும் இருப்பது தக்க சான்றாகும். கடல் வீழ்படிவுகளாலும் வயது பற்றிய உண்மைகளை நிறுவ முடியும். கால மலை நீர்வெளிகளின் புவியியல் வரலாறு. இலையனைத் தும் வேறுபாடின்மை (uniformitarianism) என்னும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சொல்லப் பட்டவை. அதாவது புவியியல் தத்துவங்களும், நிகழ்சி களும், கடந்த காலத்திலும் தற்காலத்திலும் ஒரே முறையில் நடைபெறுகின்றன என்னும் நம்பிக்கையில் ஏற்பட்டவையாகும். இந்த உண்மையும் எண்ணங் களில் ஏற்பட்ட உண்மைகளும் தவறானவையாகும். அதாவது இயற்கை ஒரே வகையில் இயங்கிக் கொண் டிருக்கிறது என்பது தவறானால் இதனுடன் தொடர் புடையவற்றை விளக்கும் அனைத்துமே தவறாகலாம். இயற்கை மாறுவதில்லை என்னும் அடிப்படையில் தொகுக்கப்பட்டவையே மேற்கூறிய கொள்கைகளும் சான்றுகளும் ஆகும். உலகக்கடல் வெளிகளின் எதிர்காலம். 50 மில்லியன் ஆண்டுகளுக்குப்பின் அட்லாண்டிக் கடல் வெளியும் இந்துமாக் கடல் வெளியும் விரிவடையும். ஆனால் பசிபிக் கடல் குறுகும். வட்ட தென் அமெரிக்கக் கண்டங்களில் ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ் தீவுகளுடன் மோதும். கிழக்கு ஆப்பிரிக்கா தன் இருப்பிடத்தில் இருந்து பிரியும். வடக்கு நோக்கி நகரும் ஆப்பிரிக்கா மத்திய தரைக்கடலை அகற்றும். பிஸ்கே விரிகுடா மூடிக்கொள்ளும். அண்டார்டிகா தட்டு பெருங் மாற்றம் அடையாமல் சிறிது மேற்கு நோக்கிச் கழலக் கூடும். சுரிபியன் கடலில் புதிய நிலப்பரப்புத் தோன் றும். தற்போது சான்பிரான்சிஸ்கோ உள்ள இடத்தில் லாஸ் ஏன்ஜல்ஸ் கொண்டு வரப்படும். பின்பு லாஸ் ஏன்ஜல்ஸ் நகர்ந்து அலுசியன் பள்ளத்தாக்கு அடியில் சிறுகச்சிறுக மறையும். இவ்வாறு பற்பல மாற்றங்கள் நிகழக்கூடும். இவையனைத்தும் 50 மில்லியன் ஆண் டிற்குள் நிகழும். எஸ்.பி.சுப்ரமணியன் -டி. ராஜாராமன் கடல் தறி ஆற்றின் கடல் வாயிலிலோ, துறைமுக நுழைவிடத் திலோ கடற்கரையிலிருந்து உட்புறம் நோக்கி நீண்ட வாறு கட்டப்படும் கட்டகம், கடல் 50 (jetty) ஆகும். இது கப்பல் போக்குவரத்துக் கால்வாயின் ஒரு புறத்துடனோ இரு பக்கங்களுடனோ இணை யாக அமையலாம்; குறிப்பாக, கடல் நீரின் பெயர்ச்சி யால் கால்வாய்களுக்குக் குறுக்காகத் திட்டுகள் தோன்றாவண்ணம் இது கட்டப்படுகிறது. இது கடல் நீரின் பெயர்ச்சியைத் தடுத்துக் கால்வாயுள் பாயும் நீரின் விரைவைக் கூட்டி, கடல் நீர்ப் பெயர்ச்சியால் திட்டுகள் தோன்றாதவாறு தடுக்கிறது. இது அலை மறிக்கட்டுமானத்தை (break-water) ஒத்தோ தனிப் பலகைத் தொடராகவோ அமைக்கப்படலாம். இப் பலகை மரத்தாலோ, கற்காரையாலோ எஃகாலே: செய்யப்பட்டிருக்கலாம். தறிகள் நேர் கடல் அமையலாம். கோட்டிலோ வளைகோட்டிலோ கொலம்பியா ஆற்றுக் கடல்வாயில் ஓர்கான் அருகில் கட்டப்பட்ட 7 கி. மீ. கடல் தறி தக்க எடுத்துக் காட்டாகும். - மு. புகழேந்தி கடல் தீவுகள் நாற்புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி தீவு எனப்படும். கடல் நீரால் சூழப்பட்டிருந்தால் அது கடல்தீவு (oceanic island) ஆகும். இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள இலங்கைத் தீவு, அந்தமாள், நிக்கோபர், இலட்சத் தீவுகள், ஆப்பிரிக்கா கண்டத்