உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கங்கிரினைட்‌

4 கங்கிரினைட் அடி தூரத்தைக் கடந்து விடும் ஆற்றல் பெற்றுள் ளன. உயரம் குறைவான வேலிகளை மிக எளிதாகத் மணிக்கு கடக்கும் தாவிக் தன்மையுடையவை. இருபது மைல்வேகத்தில் தாவித்தாவி ஓடக்கூடியவை. இவ்வாறு ஓடும்போது வால் தரையில் பட்டு ஒலி எழும் இவற்றை நன்கு பழக்கலாம். சர்க்கஸ்களில் இவற்றைப் பழக்கி மக்களை மகிழ்விக்கின்றனர். கங்காரு தன் குட்டிகளிடம் அதிக அன்பு காட்டு கிறது. ஐந்து வாரக் கருவளர் காலத்துக்குப் பிறகு குட்டி பிறக்கிறது. ஒரே அங்குலம் நீளமுள்ள இந்தக் குட்டி மயிரின்றி, கண் திறவா நிலையில் பாலருந்த இயலாத நிலையில் இருக்கும். பிறந்தவுடன் அடிவயிற்றைப் குட்டி தன் தாயின் வரை பற்றிக் கொண்டு மதலைப்பையை அடைந்து அங்குள்ள தாயின் முலைக்காம்பை உறுதியாகக் கவ்விக் கொள் கிறது. அக்காம்புகளைச் சுற்றி அமைந்திருக்கும் தசைகள் சுருங்கி விரியும்போது குட்டியின் வாயில் பால் பீச்சப்படுகிறது. இக்குட்டிக்கு ஜோயி என்று பெயர். தாய் சில வேளைகளில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஒரு ஈன்றாலும் பொதுவாக குட்டியை மட்டுமே வளர்க்கும். குட்டி சில வாரங் கள் வரை தாயின் மதலைப்பையிலேயே வாழ்கிறது. சில வேளைகளில் குட்டி ஆறு மாத காலம் மதலைப்பையிலே வளர்கிறது. தாய் புல்மேயும்போது குட்டி, பையிலிருந்த வண்ணம் தலையை மட்டும் வெளியே நீட்டிப்புல்லைத் தின்னும். தானாகவே வெளியில் குதித்துச் செல்லக்கூடிய ஆற்றல் வந்த குட்டி வெளியில் வந்து விளையாடும். வுடன் பிறகு தாயின் உதவி தேடிக்கொள்ளும். நியூகினியில் காணப்படும் ஒருவகைக் கங்காரு களைத்தவிர மற்ற கங்காருகள் தாவரவுண்ணிகள். இவை புல், பூண்டு, மெல்லிய மரப்பட்டை, கீழே விழும் மாழம் ஆகியவற்றைத் தின்று வாழ் கின்றன. இவற்றிற்குப் பசி அதிகம். இரண்டு ஆடுகள் தின்னக்கூடிய புல்லை ஒரு கங்காரு ஒரே வேளையில் தின்னும். கங்காருகளால் விவசாயிகள் பெரும் தால்லைகளுக்கும், பேரிழப்புகளுக்கும் ஆளாகின்றனர். அதிகாலையிலும், மாலையிலும் புல் மேயும் கங்காருகள் ஒரே இடத்தில் மேயாமல் அடிக்கூடி மேய்ச்சலிடத்தை மாற்றுகின்றன. சிறு கூட்டங்களாக இடம் பெயர்ந்து செல்லும் கங்காருக் கூட்டத்திற்கு ஓர் ஆண் கங்காரு தலைமை தாங்கும். ஓராண்டுக் காலத்திற்குப் யின்றித் தன் உணவைத் தானே கங்காருகள் பதினைந்து ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.நன்றாக நீந்தும் ஆற்றல் பெற்றுள்ள இவ்விலங்குகள் நீரோட்டத்தை எதிர்த்து வேகமாக 3கி.மீ வரை நீந்தக் கூடியவை. சிற்சில சம்யங் களில் நாய்க்கூட்டத்தினால் துரத்தப்படும் போது குளம், ஏரி போன்ற நீர் நிலைகளை அடைந்து நீந்தித் தப்பித்துக் கொள்கின்றன. இவற்றைத் தாக்க நாய்கள் நீருக்குள் வந்தால், அவற்றை முன் கால்களினால் நீரில் அமுக்கிக் கொன்றுவிடுகின்றன. ஒன்றிரண்டு நாய்கள் தாக்கினால் நாய்களைப் பின் கால் நகங்களால் கிழித்துக் கொன்று விடும். இவற்றின் இறைச்சி உண்பதற்கு ஏற்றதாக இருந்தாலும், மக்கள் இதை அதிகமாக விரும்பி உண்பதில்லை. இவற்றின் தோல் பதனிடப்பட்டு வணிகப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கங் காருகளில் சிறிய வகையானவால்லபிகளின் தோலி லிருந்து செருப்பு, கையுறை, பை போன்றவை செய் யப்படுகின்றன. வால்லபிகளின் இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. விளைபயிர்களுக்குத் தொல்லையாகக் கருதப் படும் கங்காருகளின் எண்ணிக்கையைக் குறைக்க சில ஆண்டு வை வேட்டையாடப்படுகின்றன. களுக்கு முன்னர் குறைந்திருந்த கங்காருகளின் எண்ணிக்கை தற்சமயம் மீண்டும் பெருகி கங்கிரினைட் விட்டது. -கே. சுப்பிரமணியம் இது ஃபெல்ஸ்பதாய்டல் தொகுதியைச் சேர்ந்த டெக்டோசிலிகேட் கனிமம் ஆகும். கங்கிரினைட் (cancrinite) அறுகோண அமைப்புடையது. அரிதான படிகங்கள் படிக அமைப்புடனும், ஒழுங்கான படிகப் பிளவுடனும் இருக்கும். இக்கனிமம் பொதுவாக நெருக்கமாகவும் அல்லது சிதறியும் காணப்படும். இதன் கடினத்தன்மை 5-6; ஒப்படர்த்தி 2.45; எளிதில் உருகும் தன்மையுடையது. குறை சங்கு முறிவு கொண்டது. அமிலத்தில் கரைந்து பசை போன்ற ஊன் சிவப்பு வீழ்படிவைக் கொடுக்கும். இது ஓரச்சு எதிர் (-) ஒளி சுழற்றும் தன்மை கொண்டது. பிளவுகள் முத்துப் போன்ற மிளிர்வைக் கொண் டுள்ளன. இதன் நிறம் மஞ்சள் கலந்த பழுப்பு நிற மாகவும், சிவப்பு, பச்சை, வெண்மையாகவும் நிற மற்றவையாகவும் காணப்படும். இதன் கனிம உட் கூறு NagCaAlgSi,0,,CO (OH), ஆகும். கங்கிரினைட் நெஃப்பிலின் சயனைட்டில் முதன்மைக் கனிமமாகக் காணப்படுகிறது. ஆனால் அதிகமாக நெஃப்பிலினின் மாறுபாட்டால் உருவாகிறது. யூரல் மலைத்தொடர் களில் மியாஸ்க் என்ற இடத்திலும், பின்லாந்து' ஸ்வீடன், ஒன்டேரியோ, கனடா ஆகிய நாடுகளிலும் இது காணப்படுகிறது. கங்லாமரேட் காண்க: உருள்திரளை இரா. சரசவாணி