உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் பாசி 229

கடல்பாசி 229 கடல்பாசி கடல் வாழ் தாவரங்களில் பெரும்பகுதி பாசிகளே (algae) ஆகும். கடல்பாசி வகைகளில் கண்ணுக்குப் புலனாகாத, மிக நுண்ணிய மிதக்கும் உயிரிகள் தாவர மிதவை உயிரிகள் (phytoplankton) எனப்படும். பிறவகை உயிரிகள் கண்ணுக்குப் புலனாகும். வளர் தளத்தைப் பற்றி வாழும் இவை பெரும்பாலும் கடற் களைகள் (sea weeds ) எனப்படுகின்றன. அலை ஏறி இறங்கும் இடைவெளியிலும் (inter tidal regions) அதற்குக் கீழுள்ள இடங்களிலும் இவை வளர்கின்றன. சேப்மேன் என்னும் பாசியில் வல்லுநரின் கருத்துப்படி ஆல்காக்கள் என்னும் சொல் ஏறத்தாழ 1800 பேரி னங்கள். 21,000 சிற்றினங்கள் அடங்கிய ஒரு பெரும் தொகுதியைக் குறிப்பதாகும். கடற்சூழலில் வாழும் கண்ணுக்குப் புலனாகும் பெரும் பாசி வகைகளில் (கடற்களைகள்) பெருமளவு குளோரோஃபைட்டா, பி யோஃபைட்டா, ரோடோஃ பைட்டா ஆகிய பிரிவுகளையே சாரும். இத்தகைய வகைப்பாடு பாசிகளில் காணப்படும் நிறமிகளின் அடிப் படையிலேயே ஏற்படுத்தப்படுகிறது. மேலும் கசை யிழை (flagellum) போன்ற நுண்கரிமப் பண்புகள் உயிர் வேதியியற் பண்புகள் ஆகியவை வகைப் பாட்டியலில் பயன்படுத்தப்படுகின்றன. சயனோஃபைட்டாவைத் தவிர, பிற பிரிவுகள் யூகேரியாட்டா வகையில் அடங்கும். புரோகரியோட் டாவில் சயனேஃபைட்டா பிரிவு மட்டும் வைக்கப் பட்டுள்ளது. ஏனெனில் பாக்டீரியாக்களைப் போலவே, சயனேஃபைட்டா என்னும் நீலப்பச்சைப்பாசி வகை களும் குறைந்த அளவே உள்ளமைப்பு வேறுபாடுகளை உடையவை. இவற்றில் உண்மையான மைட்டோ காண்டிரிய உறையும், நியூக்ளியஸ் உறையும் காணப் படுவதில்லை. பாசிகளின் சூழலும் அவற்றின் பரவலும் குளோரை ஃபைட்டா. 7000 பசும்பாசி இனங்களில் 13% கடல் வாழ்பவை; வெப்ப மண்டல, மிதவெப்ப மண்டல நீர் நிலைகளில் இவ்வகைப் பாசிகள் அலை கீழ்ப் பகுதிகளில் காணப்படுகின்றன. கிளாடோ போரெல்ஸ் சைபனோகிளாடேல்ஸ் பேசிகிளாடேல்ஸ், காலர்பேல்ஸ், அல்வா, எண்ட்ரோமார்பா போன்ற சிலவகைகள் ஆர்டிக் பகுதிகளில் இருந்து வெப்ப மண்டல நீர்நிலைகள் வரை பரவியுள்ளன. ஃபியோஃபைட்டா. வட அட்லாண்டிக்கின் கரை யோரக் கெல்ப் படுகைகளில் லேமினேரியா, அலேரியா போன்ற மிதவெப்ப வகைகள் காணப்படுகின்றன. மேக்ரோசிஸ்டிஸ், நீரியோசிஸ்டிஸ் போன்றவை வட பசிபிக் கடலில் பரவியுள்ளன. பனி உறைந்துள்ள தென் துருவப் பகுதிகளான தென் ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, நியூசிலாந்து, ஆப்பிரிக்கப் பகுதிகளில் ஃபியூக்கேல்ஸ் துறைப் பாசிகள் பெருமளவு பரவி உள்ளன. மேலும் பலவகைப்பட்ட டிக்டியோட்டா. பெபைனா, சர்காஸம், சிஸ்டோசிரா போன்ற பாசிகள் வெப்ப மிதவெப்ப நீர் மண்டலங்களில் யுள்ளன. நன்கு பரவி ரோடோஃபைட்டா. ஆழ் கடல்பாசிகளில் பெரும் பாலானவை உலகில் கடற்சூழல்களில் அலையிடைப் பகுதியிலும் அதற்குக் கீழ் உள்ள பகுதிகளிலும் பரவி உள்ளன. இவற்றின் செல் சுவர்கள் கால்சியத்தால் நிரப்பப்பட்டுள்ளன. கடற்பாறைகளை உருவாக்கு வதில் இவை பெரும்பங்கு கொள்கின்றன. பொருளாதாரச் சிறப்பு. கடலினின்றும் பெறப்படும் பயன்களில் பெரும்பகுதி கடற்பாசிகளின் மூலம் கிடைக்கிறது. கோவாவில் உள்ள தேசியக் கடலியல் கழகத்தின் 1983 ஆம் ஆண்டு அளவீட்டின்படி உலகக் கடல்களின் பாசி உற்பத்தி ஆண்டொன்றுக்கு 1,72,10,000 டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதாரச் சிறப்பு வாய்ந்த இவ்வுற்பத்தியில் ஜப்பான், கொரியா, மெக்சிகோ கடா போன்ற நாடுகளே பெரும்பங்கு கொள்கின்றன. இந்தியாவின் பரந்த கடற்பரப்பும் அதன் தீவுத் தொகுதிகளும் பல்வேறு வகைப்பட்ட கடல்பாசி இனங்களின் புகலிட மாக விளங்குகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டி லிருந்தே பல கடல்பாசியியல் வல்லுநர்கள் இந்தியக் கடல்பாசியைப் பற்றி ஆய்வு செய்து வந்துள்ளனர். இதுவரையில் 624 கடல்பாசி இனங்கள் அறியப் பட்டுள்ளன. மேலும் இந்தியக் கடல்பாசி இனங்களின் உற்பத்தி ஆண்டிற்கு 70, 000 டன் எனவும் கணக் கிடப்பட்டுள்ளது. இந்த பாறைகள் உள்ள கடற்கரைப் பகுதிகளில் கடல் பாசி இனங்கள் பெருமளவில் காணப்படுகின்றன. வை மிகுந்த உற்பத்தித்திறன் உடையவை. வகைகளின் உற்பத்தித்திறன் அலையிடைப்பகுதியில் ஆண்டொன்றுக்கு 500-1000 gmc/m* எனவும் அதன் கீழுள்ள பகுதிகளில் 1000-2000 gm c/m எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவை முதல் நிலை உற்பத் திப் பெருக்கத்திற்கு அடிப்படையாக அமைகின்றன. எனவே பிற உயிரிகளின் உணவுத் தொடரில் முதல் இடத்தைப் பெறுகின்றன. கண்ணுக்குப் புலனாகும் பெரியவகைப் பாசிகள் மனிதர்களுக்குப் பல வழிகளிலும் பயன்படுகின்றன. அவற்றில் பல நேரடி உணவுப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் கால்நடைத் தீவனங்களா கவும் உரங்களாகவும் பயன்படுகின்றன. தாள் உற் பத்தி, கூழ்மங்கள் (colloids), உப்பு உற்பத்தி ஆகிய வற்றிற்கான மூலப்பொருள்களாகவும் பயன்படுகின் றன. எரிபொருள் பற்றாக்குறை பரவிவரும் இந் நாளில் சுடற்பாசிகளில் இருந்து மீத்தேன் போன்ற எரிவளி மங்களை எடுப்பது குறித்த ஆய்வு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.