கடல் மீன் முட்டை 243
கட்டிகள் போன்ற சரக்குகளை ஏற்றும்போதும் இறக்கும்போதும் தூசி மிகும். கந்தகம், போராக்ஸ் போன்றவை துன்பம் விளைவிக்கக் கூடியவை. நகரும் பட்டை வழிச் செல்லும் சரக்கை மேலிருந்து கொட்டும்போது தூசி காற்றில் சேரும். இவ்வாறு காற்றில் மாசு சேர்வதைத் தடுப்பதற் காகப் பல ஏற்பாடுகள் உள்ளன. சரக்குக் கொட்டப் படும் இடத்தைச் சுற்றிலும் அடைப்பு ஏற்படுத்தி, அதிசுக் காற்று வீசித் தூசி பரவ வழியின்றிச் செய் வது ஒரு முறை. அடைப்புக்கு மாறாகச் சுற்றிலும் நீரை விசிறித் தெளித்தபடி, நீர்த் திரை அமைத்துத் தூசு பரவாமல் தடுப்பது மற்றொரு முறை, கந்தகம், நிலக்கரி போன்றவற்றைக் கையாளும்போது தெளிப்பு முறை பயனுள்ள தாயிருக்கும். சரக்கைக் கொட்டும்போது வரும் தூசியைச் சேர்த்து, காற்றில் பரவ விடாமல் செய்யும் முறையும் கையாளப்படுவதுண்டு, தூசியை வடிகட்டும்முறையில் பையொன்றில் தூசியைச் சேர்க்கலாம். தூசியின் தன்மை, பரிமாணம், ஒட்டும் குணம், எரியக்கூடிய தன்மை, அரிப்புத் தன்மை, ஈரச்சத்து, வெப்பநிலை முதலியவற்றைப் பொறுத்து வடிகட்டிச் சேர்க்கும் முறை அமையும். 10 மைக்ரான் விட்டத்திற்கும் குறைவான பொருள் கொண்ட அளவு தூசுப் காற்றின் விசையால் பை வழிச் செல்லும்போது தூசு பைக்குள் தங்கிவிடும். நீர் கலந்து காற்றின் விசைகொண்டு சரக்குப் பொருளைக் குழாய்வழிக் கொண்டு செல்வதும், தூசியை அடக்கிக் குழாய் வழியாகக் கொண்டு செல் வதும் சூழல் மாசாகாதவாறு காக்கும் வேறு முறை களாகும். கோதுமை, அரிசி, சிமெண்ட், மணல் போன்றவற்றை மொத்தக் காற்று விசையால் குழாய் வழியாக ஏற்றுவதும் இறக்குவதும் பயனுள்ளவை. கப்பலின் புகைக்கூண்டு வழியாக வரும் புகையில் சல்பர் டை ஆக்சைடு வந்து காற்றில் கலக்க வாய்ப் புண்டு. உயர் வெப்பத்தில் எரிபொருள் எண்ணெய் எரியும்போது நைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்து பல மாசு வளிமங்கள் உண்டாகக்கூடும். காற்றில் கார்பன் டை ஆக்சைடு மிகுதியாகச் சேரும். அப்புகை கலப்ப தால் சாதாரணமாகக் காற்றில் இருக்க வேண்டிய 20% ஆக்சிஜன், 5% ஆகக்குறையும். துறைமுகக் காற்று மாசடைவதும் சிக்கலாகும். கடல் மாசடைவதைத் தடுப்பதற்கான சட்டங்கள். கடற்கரையை உடைய நாடு. கரையிலிருந்து 12 கடல் மைல் (ஏறத்தாழ 22 கி.மீ) தொலைவு வரை கடற்பகுதியில் உரிமை கொண்டிருக்கும். பன்னிரண்டு கடல் மைலுக்கு அப்பால் அனைத்துலகச் சட்டம் பொருந்தும். பன்னிரண்டு கடல்மைல் தொலைவு வரை அந்தந்த நாடு, சட்டதிட்டங்கள் விதிக்க இய லும். இந்தியாவைப் பொறுத்த வரை காற்று மாசடைவதைக் கட்டுப்படுத்துவதற்கும், அ.க.7-16 அ நீர் கடல் மீன் முட்டை 243 மாசடைவதைத் தடுப்பதற்கும் சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளன. 1973 ஆம் ஆண்டு அனைத்துலகக் கடல்துறை ஆலோசனை நிறுவனம் ஏற்படுத்திய ஒப்பந்தமுறை விதிப்படி எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் கேடு தரும் பொருளால் தன் நாட்டுக் கடலை மாசுபடுத்தி விட்டால் அந்த நாடு மாசு உண்டாக்கியவர் மீ குறைகூற உரிமை உண்டு. மாசை அகற்றுவதற்கு ஏற்பட்ட செலவைப் பெறவும், இழப்பீடு பெறவும் உரிமை உண்டு. 1969 ஆம் ஆண்டில் கடல் மாசுறச் செய்ததற்காகக் கொடுக்கவேண்டிய இழப்பீடு குறித்து அனைத்துலக ஒப்பந்தமொன்று ஏற்பட்டது. அதன்படி, மாசுவிளைவித்த கப்பலின் எடை எத்தனை டன்னோ அத்தனை டன்னுக்கும், டன் ஒன்றுக்கு 160 டாலர் வீதம் இழப்பீடு கொடுக்க வேண்டும். தொகையின் கொடுக்கக்கூடிய பெருமத்தொகை 168 லட்சம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. சில நாடுகள் தமக்கு உரிமையுள்ள கடலில் மாச டைவு ஏற்படுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றி யுள்ளன. ஐக்கிய நாடுகள் நிறுவனம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புப் பற்றி மிகுந்த கவனம் செலுத்துகிறது. அது அவ்வப்போது மாநாடுகள் கூட்டி அனைத்துலக உடன்படிக்கைகள் ஏற்பட வழி செய்கிறது. கழிவுப் பொருள்களையும் பிறவற்றையும் போட்டுக் கடலை மாசுபடுத்துவதைத் தடுப்பதற்கான ஒப்பந்த விதி களை லண்டன் நகரில் ஐ.நா. நிறுவனம் கூட்டிய அனைத்துலக மாநாடு ஒன்று உருவாக்கியது. அந்த உடன்படிக்கையின் முதல் பின்னிணைப்பில் கடலில் சேரக் கூடாத பொருள்களின் பட்டியலைக் கொடுத் துள்ளது. பாதரசம், கேட்மியம், வலிமிக்க கதிரி யக்கக் கழிவுகள் ஆகியவை அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவற்றுள் ஒரு சிலவாகும். ஏற்பளிப்புப் பெற்றுக் கடலில் கொட்டக்கூடிய கழிவுகளின் விவரம் இரண்டாம் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது. கு.இராஜாராம் கடல் மீன் முட்டை மீனினங்களை நன்னீர் மீனினங்கள், கடல் மீன்கள் (உவர் நீர் மீன்கள்) எனப் பிரிக்கலாம். இவ்விரண்டு வகை மீன்களிலும் பல்லாயிரக்கணக்கான வேறுபட்ட னவகையும் உண்டு. இதுவரை ஏறக்குறைய 21 ஆயிரம் மீனினங்கள் உள்ளன என அறிவியலாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பலவகை மீன் கள் மனிதன் உண்பதற்கு ஏற்றவை. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மீன்பிடிக்கும் தொழிலும்