உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 கடற்கரைப்‌ பாதுகாப்பு

286 கடற்கரைப் பாதுகாப்பு படம் 12. தடைப்பாறை வகைகளும் பகுதிகளும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தடைப்பாறை எனப்படும் கடல்மண் திட்டுகளும் காயல் (lagoon) போன்ற ஏரிகளும் மிகுதியாகக் காணப்படும். கடல் மட்டம் எதிர்பாராமல் குறையும்போதோ, அலை வேகம் எதிர்பாராமல் வேக மட்டத்திலிருந்து குறைவ தாலோ தடைப்பாறை உண்டாகலாம். பாலைவனப் பகுதியில் காணப்படும் மணல் திட்டுகளைப்போல் விட்டுவிட்டுக் காணப்படும் இது மணல்மேடு எனப் படும். தடைப்பாறை நிலத்துடன் ணையாமல், கரையிலிருந்து சற்றுத் தள்ளி அமைவதால், கடலின் அலை வேகத்தைத் தடுப்பதற்கு இயற்கையாகவே உதவுகிறது. காயல் எனப்படும் பகுதி, கடலுடன் தொடர்புள்ள ஆழமில்லாத ஏரியாகும். தடைப் பாறை அமைப்பில் கரைப்பகுதி, சமதளப் பகுதி போன்றே காணப்படும். கடற்கரைப் பாதுகாப்பு எஸ். சுதர்சன் கடலில் காற்றால் உருவான அலைகள் மணற்கடற் கரையைத் தாக்கி உடையும் போது மண் துகள்கள் கலக்கப்பட்டு அங்கிருந்து கடத்தப்படுகின்றன. எனவே