உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 கண்ணாடி விரியன்‌

358 கண்ணாடி விரியன் உலோக ஆக்சைடுகள் பயன்படுகின்றன. படிக அமைப்புள்ள கண்ணாடிகளின் நிறம், நீரைப் போல் தெளிவானது. கண்ணாடிகளுடன் காரீய ஆக் சைடைக் சேர்த்துச் செய்தால் கண்ணாடிகளுக்கு மிகுந்த பளபளப்புக் கொடுக்க முடியும்.இவை மேலும் மிகுதியான ஒளி விலகல் தன்மை கொண்டவை. பண்புகள்: கண்ணாடிகளின் பண்புகளில் குறிப் பிடத்தக்கவை பாகுநிலை, உறுதி, ஒளி விலகல் எண், ஒளி பரவல் எண், ஒளி ஊடுருவும் தன்மை,அரிமான எதிர்ப்புத்திறன், மின்னியல் என்பனவாகும். கண்ணாடிகளின் பாகுத்தன்மை அதன் உற்பத்தி யில் பெரும் பங்கேற்கிறது. வெப்பநிலை குறையும் போது பாகுத்தன்மை மிகுதியாகிறது. பாகுத்தன்மை வெப்பநிலைப் படங்கள் பல வகைகளில் பயன்படு கின்றன. இப்படங்களிலிருந்து வெவ்வேறு வெப்ப நிலைகளில் கண்ணாடியின் பாகுத் தன்மையைத் அறிந்து கொள்ளலாம். கண்ணாடியின் வலிமை மதிப்புகள் (strength. values)முக்கியமானவை. பொதுவாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட இம்மதிப்புகள் கொள்கையளவில் கண்டுபிடிக்கப்பட்ட விட மதிப்புகளை மிகவும் குறைவாக உள்ளன. உறுதி மிகுந்த கண்ணாடிகள் குறைந்த அளவே குறைகள் கொண்டவையாகவும், கீறல்கள் உள்ளனவாகவும் உள்ளன. கண்ணாடியின் ஒளிவிலகல் எண்ணும், ஒளி பரவல் எண்ணும் கண்ணாடியின் இயைபைப் பொறுத்து அமைகின்றன. பொதுவாக ஒளி விலகல் எண் மிகுதியாக இருக்கும்போது,ஒளிபரல்ல் தன்மை யும் மிகுதியாக இருக்கும், புதுவகைக் கண்ணாடிகள் வந்த பிறகு ஒளியியல் கண்ணாடிகள் செய்யக் கருத் தில் கொள்ளப்படும் பண்புகளின் எண்ணிக்கை(range) பெருகியுள்ளது. வண்ணக் கண்ணாடிகள், வடிகட்டி கள் முதலிய கண்ணாடிகளில் ஒளி ஊடுருவும் தன்மை முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது. ஒளி சாதாரணக் கண்ணாடிகளிலும் வண்ணம், ஊடுருவும் தன்மையைப் பொறுத்து அமையும். முக்கியமாகக் கண்ணாடிகள் வண்ணம் கொள்வதற்கு ஃபெரஸ் ஆக்சைடு பயன்படுகிறது. இதனால், வெளிறிய பச்சை நிறம் கிடைக்கிறது. இந்நிறம் ல்லாமல் தெளிவான கண்ணாடிகள் பெறுவதற் கும். இவற்றின் முழு ஊடுருவும் தன்மை முக்கிய மில்லாதபோதும் ஒரு நிறம் நீக்கியின் மூலம் இதை அடையலாம். ஒளி ஊடுருவல் மிகுதியாகத் தேவைப் படும் ஒளியியல் கண்ணாடிகள் செய்ய வேண்டு மெனில் இரும்பை முழுதும் நீக்கியாக வேண்டும். வெப்பம் மிகும்போது கண்ணாடிகளின் மின் கடத்தும் தன்மையும் மிகும். கி. மு. மோகன் கண்ணாடி விரியன் து ஊர்வனவற்றில் வைப்பரிடே எனும் விரியன் பாம்புக் குடும்பத்தைச் சார்ந்தது. முதுகிலும் விலாப் பக்கத்திலும் மூன்று நீள் வரிசையில் நாற்கோண வடிவமான . வெள்ளை ஓரமுடைய அடையாளங்கள் நீண்ட வட்டவடிவமாகத் தனித்தனியாக இருக்கும். கண்ணாடி பதித்தவைபோல் தோற்றமளிப்பதால் இவற்றிற்குக் கண்ணாடி விரியன் என்னும் பெயர் வந்திருக்கலாம். உடல் கயிறு போல் நீளமானது. முதுகில் கண்ணாடி வட்டங்கள் காணப்படும். முழு வளர்ச்சியடைந்த பாம்பு ஏறத்தாழ 1 1.25 மீட்டர் நீளம் இருக்கும். சில பெரிய விரியன்கள் 1.75 மீட்டர் நீளம் வரை இருக்கும். வால் குட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும். 1 பின்பக்கம் உலர் வளை உடல் செம்பழுப்பு நிறத்திலிருக்கும். புதர்களும் சருகுகளும் நிறைந்த திறந்தவெளியிலும், களிலும் காணப்படும். சருகுகளிடையே மறைந் திருக்கும்போது எளிதில் புலப்படுவதில்லை. முதுகி லுள்ள கண்ணாடி வட்டங்களும், தலையை ஒத்த உடல் நிறமும் அதற்குத் தற்காப்பளிக்கின்றன. தலை முன்பக்கம் குறுகியும் அகன்றும் இருக்கும். சுழுத்து ஒடுங்கியிருப்பதால் தலை நன்கு தெரியும். தெரியும். உடல் முழுதும் மேல் தோல் மூடியிருக்கும். தோலில் தடிப்பான செதில்கள் வளர்ந்திருக்கும். இச்செதில்கள் உடம்பு முழுதும் சிறியவையாக, நெருக்கமாக ஒன்றையொன்று தழுவி யிருக்கும். முன் செதிலின் பின்பக்கம் பின் செதிலின் முள் பகுதியின் மேல் சிறிது படிந்திருக்கும். தலையி லுள்ள செதில்கள் மிகவும் சிறியவையாக இருக்கும். இவை ஒன்றையொன்று தழுவாமல் விளிம்புகளால் ஒன்றையொன்று தொடும். இவற்றிற்குத் தலைக் கேடயங்கள் (head shields) எனப்பெயர். வயிற்றுப் பக்கம் அல்லது அடிப்பகுதி முழுதும் அகலமான செதில்கள் ஒரே வரிசையாக அமைந்திருக்கும். இவ் வயிற்றுச் செதில்கள் குறுக்குச் செதில்கள் அல்லது அடிக்கேடயங்கள் (ventral shields) எனப்படும். வாலின் அடிப்படைச் செதில்கள் இரட்டை வரிசை யில் இருக்கும். அடிப்பக்கம் சிறிது வெண்மையாகத் தோன்றி னாலும், மேல்நிறம் அது வாழும் தரையின் நிறத்தை ஒத்திருக்கும். கரிசல் காட்டில் வாழும் கண்ணாடி விரியன் கரிசல் மண்நிறத்தையும், செம்மண் நிலத்தில் வாழும் கண்ணாடி விரியன் செந்நிறத்தையும் பெற்றிருக்கும். கண்ணாடி விரியன் குறைந்த வேகத் துடன் ஊர்ந்து செல்லும். பிற பாம்புகளைப் போலவே கண்ணாடி விரியனும் ஓராண்டில் பல் முறை தோலுரிக்கும். மேல்தோல் முழுதும் சட்டை யுரித்தாற் போல உரிந்துவிடும். இதற்குத் தோலு ரித்தல் அல்லது சட்டையுரித்தல் என்று பெயர்.