உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 கத்தரி மூக்குப் பறவை

434 கத்தரி மூக்குப்பறவை போமாப்சிஸ் இலைப்புள்ளி நோய். ஃபோமாப்ஸிஸ் வெக்சான்ஸ் (phomopsis vexans) என்னும் பூசணத் தால் ஏற்படும் இது சுத்தரிப் பயிருக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானது. இது தரைமட்டத்துக்கு மேலுள்ள செடியின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கக்கூடியது. தாக்குதலுக்குள்ளான செடியின் இலைகளில் வட்டமான அல்லது நீள்வட்டமான பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். செடியின் வயது அதிகரிக்கும்போது இந்தப் புள்ளிகள் ஒழுங்கற்ற நோயற்ற வடிவமுடையலையாக மாறுகின்றன. செடியிலிருந்து கிடைத்த விதைகளைப் பயன்படுத்து கொல்லிகளைச் தல், விதைப்பதற்கு முன் பூசணக் கொண்டு விதை நேர்த்தி செய்தல், நோய் தாங்கும் வலிமையுள்ள இனங்களைத் தேர்ந்தெடுத்துப் பயிர் செய்தல், நீண்ட பயிர் மாற்ற முறைகளைக் கையாளு தல், வாரம் ஒருமுறை வீதம் பயிருக்கு நாற்றங் காலிலும் நடவு வயலிலும் சணக் கொல்லிகளைத் தெளித்தல், 50°C வெப்பநிலையில் முப்பது நொடி வெந்நீர் மூலம் நேர்த்தி செய்தல் போன்றவை நோயைக் கட்டுப்படுத்தும் வழி முறைகளாகும். வாடல் நோய். இந்நோய் ஃபியூசாரியம் (Fusarium) ஒசோனியம் (Ozonium), வெர்ட்டிசில்லியம் (Verticil- dium) போன்ற பூசண வகைகளால் தோன்றுகிறது. லைகள் மஞ்சள் நிறமாக மாறுவது இந்நோயின் அறிகுறியாகும். செடியின் கீழ்ப்பகுதியிலுள்ள இலை கள் முதலில் மஞ்சள் நிறமாக மாறிய பிறகு பக்க நரம்புகளுக்கிடையேயுள்ள இலைப்பரப்பு, பழுப்பு நிறத்தை அடையும். நோய் தாக்கிய செடியின் தண்டை நேராகப் பிளந்து பார்த்தால் உட்புறத்தில் சாற்றுக்குழாய்த் தசை கறுப்பு நிறமாக இருப்பதைக் காணலாம். இந்தச் செடிகள் வளர்ச்சி குன்றி, இளம் பருவத்திலேயே அழிந்து விடுகின்றன. நோய் தாங்கும் ஆற்றலுடைய னங்களைப் பயிர் செய்தல், நீண்ட பயிர்மாற்ற முறைகளைக் கையாளுதல், அவ்வப்போது பூசணக் கொல்லிகளைச் செடிகளுக்குத் தெளித்தல் போன்ற முறைகளால் நோயைக் கட்டுப்படுத்தலாம். ஆறு சிற்றிலை நோய். இந்த நோய் மைகோபிளாஸ்மா போன்ற உயிரியால் உண்டாகிறது. செடிகள் வாரம் வளர்ந்தபின் இந்நோய் தோன்றக்கூடும். இந் நோயின் முக்கிய அறிகுறியாக இலைகள் மிகவும் சிறியனவாகவும், வெளுத்தும் காணப்படும். இலைக் காம்புகள் சிறுத்தும், லைகள் மெலிந்தும், முள்ளில்லாமலும் காணப்படும். செடிகள் குட்டை யாகி விடும். கணுக்களில் மிகவும் சிறிய இலைகள் தோன்றி அடர்த்தியான தோற்றத்தை அளிக்கும். பொதுவாக, தாக்கமுற்ற செடிகள் மலட்டுத் தன் மையை அடைகின்றன. பூக்களின் பகுதிகள் இலைகள் போன்று பச்சையாக மாறுகின்றன. தத்துப்பூச்சு களால் (Hishimonus Phycitis) இந்த நோய் செடிக்குச் செடி பரவும். அனைத்து வகைக் களைச் செடிகளை அகற்றி அழித்தும் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த 0.05% நுவக்ரான் அல்லது 0.03% ரோகர் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தியும் நோய் பரவுவதைத் தடுக்கலாம். தேமல் நோய்கள். புகையிலைத் தேமல் நச்சுயிரி போன்றவையால் கத்தரியில் தேமல் நோய் தோன்றக் கூடும். நோய் தாக்சுப்பட்ட செடிகளின் இலைகளில் மஞ்சளும் பச்சையும் கலந்த பகுதிகள் காணப்படும். நோய்த் தாக்குதல் கடுமையாகும்போது இலைகளில் குழிகள் போன்ற பகுதிகள் தோன்றும். இலைகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் நோய் செடிக்குச் செடி பரவும். வெள்ளரித் தேமல் நோய் அசுவணிப் craccivora) பூச்சிகளின் மூலம் (Aphis gossypii, A. பரவுவதால் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன் படுத்தி நோய் பரவுவதைத் தடுக்கலாம். எப்பிலாக்னா வண்டு. இந்த வண்டு வெண்கல நிறத்திலிருந்து சிவப்பு நிறம் வரை பல வண்ணங் களைக் கொண்டது. அளவில் சிறியதாக, முதுகுப் புறம் உயர்ந்து வளைந்த இளம் மஞ்சள் நிறமுள்ள இதன் புழுக்கள் மயிருடன் காணப்படும். பூச்சி தாக்கிய தொடக்கத்திலேயே தாக்கமுற்ற இலை களையும், பூச்சிகளையும் அழித்து விட வேண்டும். செடியின் வளர்ச்சிப் பருவத்தைப் பொறுத்து ஹெக்டேருக்கு 20 கிலோ கிராம் வீதம் 5% BHC தூளைத் தூவலாம். சிறப்பு உண்ணி, சிறிய உருவமுடைய இந்தப் பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன. இந்த உண்ணி தாக்கினால் செடிகள் மஞ்சள் நிற மாகத் தோற்றமளிக்கின்றன. இலைகளின் மேல் சிலந்தி வலைகளும் காணப்படும். ஆரமைட் அல்லது ஃபாலிடால் (0.02%). (0.03%) மாலத்தியான் போன்ற பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து இவற்றைக் கட்டுப்படுத்தலாம். அசுவணிப்பின்னல்வண்டு, தத்துப் பூச்சிகள் போன்றவை கத்திரியைத் தாக்கும் பிற பூச்சி வகைகளாகும். ரா. துரை நூலோதி. கோ. ரா. முத்துக்கிருஷ்ணன் & சிவ. சுந்தாராஜன், காய்கறிச் சாகுபடி, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பிரைவேட் லிமிடேட் சென்னை, 1983; பெ.நாராயணசாமி & கோ.அர்ச்சுணன், பயிர்களைத் தாக்கும் நச்சுயிர் மைக்கோபிளாஸ்மா நோய்கள், நியூ செஞ்சரி புக்ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை, 1980; B. Choudry, Vegetables, National Book Trust of India, New Delhi, 1972. கத்தரி மூக்குப்பறவை இது நீண்ட றக்கைகள் கொண்ட கடற் பறவை யாகும். நீண்ட தொலைவு பறக்கக்கூடியது. அலகு