458 கதிர்வீச்சு இயற்பியல்
458 கதிர்வீச்சு இயற்பியல் பொறிப்படக்கருவி அல்லது ஸ்பின்தாரிகான் (spark camera or spintharicon) உதவி கொண்டும் ஓர் உறுப்பின் உருவத்தைத் தோற்றுவிக்கலாம். (படம் 7) 1251 ஏறக்குறைய 34°C. அது குறிப்பிட்ட உறுப்பிலிருந்து வெளிவரும் காமாக் கதிர் தங்கம் கொண்ட பீங்கான் வகைச் சேர்மம் பூசப்பட்ட எதிர்மின்முனையைத் தாக்கும்போது துணை எலெக்ட்ரான்கள் தோன்றுகின்றன. அயனி அறையில் உள்ள மின் அழுத்தம் காரணமாக எலெக்ட்ரான்கள் தோற்றுவிக்கும் அயனியாக்கப் பட்ட பாதையில் பொறி தூண்டப்படுகிறது. உள்ளடங்கிய இப்பொறியை ஒளிப்படமாக எடுக்க லாம். பொறிப்படக் கருவியைத் தயாரிப்பது எளிது: அதன் விலையும் மலிவு; தைராய்டு சுரப்பியின் உருவத்தை தனிமத்தின் உதவிகொண்டு தோற்றுவிக்கப் பொறிப்படக்கருவி பயன்படுகிறது. வெப்ப வரைமுறை (thermography). மனிதத் தோலின் வெப்பநிலை வெளியிடும் அசுச்சிவப்புக் கதிரின் அலைநீளம் 4-6/m. கட்டி வரப்பெற்ற திசுக்கள் சாதாரணத் திசுக்களை விட மிகு வெப்பநிலையில் இருக்கும். இண்டியம் (InSb) ஆன்ட்டிமனைடு பாதரசக் காட்மியம் டெலுரைடு (McT) ஆகிய காணிகளை இவ்வலை நீளத்தில் உள்ள அகச்சிவப்புக் கதிர்களைக் கண் டறியப் பயன்படுத்தலாம். இக்காணிகளின் உணர்வு நுட்பத்தை மிகுவிக்க InSb காணியை-196°C வெப்ப நிலைக்கும் MeT காணியை -40 -80°C வரை உள்ள வெப்பநிலைக்கும் குளிர்விக்க வேண்டும். இக்காணிகள் வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன. வெப்ப, இம்மின் குறிப்பலைகளை மிகைப்படுத்தி வரைபடமாகவோ ஒரு கோட்டில் உள்ள வெப்ப நிலை மாறுபாட்டைக் காட்டும் வரைகோடு தொலைக்காட்சித் திரையில் உருவமாகவோ பதிவு செய்யலாம். கட்டி வரப்பெற்ற திசுக்கள் சூடாக இருப்பதால் அவை உருவத்தில் ஒளிமிக்கவையாகத் தோன்றும். வெப்ப வரைமுறை தொடக்க நிலையில் உள்ள மார்பின் புற்று நோயைக் கண்டறியப் பயன் படுகிறது. கேளா ஒலி வரையியல் (ultrasonography). 18 மெகாஹெர்ட்ஸுக்கும் மேலான அதிர்வெண் கொண்ட ஒலி, கேளா ஒலி என்று குறிக்கப்படுகிறது. கண்டறி கேளா ஒலிஇயலில் (diagnostic ultrasonics ) 0.5= 25 MHz வரை அதிர்வெண் உள்ள ஒலி அலைகள் பயன்படுகின்றன. ஆற்றல் மாற்றி (trans- ducer) என்று குறிப்பிடப்படும் படிகத்துக்கு மாறும் மின்னழுத்தம் கொடுத்தால் இப்படிகம் அதிர்ந்து கேளா ஒலியை உண்டாக்கும். இப்பண்பு அழுத்த மின் விளைவு piezoelectric effect) எனப்படும். கேளா ஒலி ஆற்றல் மாற்றியைத் தாக்கும்போது அதன் புறப்பரப்பில் சிறு மின்னூட்டம் தோன்று பயன் கிறது. எனவே, ஆற்றல் மாற்றி ஒன்றே கேளா ஒலியைத் தோற்றுவிக்கவும், கண்டறியவும் படுகிறது. ஆற்றல் மாற்றி A B C D E படம் B. திசுக்களின் பொதுமுகங்கள் (interface) எதிரொலியைத் தோற்றுவித்தல். A, B. உராய்வற்ற (smooth) பொதுமுகம் C-உராய் வுடைய (rough) பொதுமுகம்; D - தொடர்ச்சியில்லாமல் ஒருங் கிணைக்கப்பட்ட திசுக்களின் தொகுதி; E- சாய்ந்த நிலையி லுள்ள பெரிய புறப்பரப்பு. கேளா ஒலியின் மூலம் இரண்டு திசுக்கள் சேரும் பொது முகத்தைப் (tissue interface) பற்றிய விவரங் களை அறிந்து கொள்ளலாம். கேளா ஒலி உடலை ஊடுருவிச் செல்லும்போது திசுக்களின் பொதுமுகங் களில் படும் ஒலிகளின் ஒரு பகுதி எதிரொலிக்கப் பட்டு ஆற்றல் மாற்றிக்குத் திருப்பி அனுப்பப்படு கிறது (படம் 8). ஒலிக்கற்றை வரும் திசையைக் கொண்டும், எதிரொலி ஆற்றல்மாற்றியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் கொண்டும் திசுக்களின் பொதுமுகம் எங்கு உள்ளது என்பதைக் கணக்கிட லாம். எதிரொலியின் அளவு, எதிரொலிக்கும் பொது முகத்தின் நெடுக்கம் ஆகிய விவரங்களைக் கொண்டு திசுவின் தன்மையைக் கண்டறிய முடியும். எதிரொலி டுவதால் ஆற்றல்மாற்றியில் தோன்றும் னழுத்தக் குறிப்பலை னணுச் சுற்றிகள் மூலம் சீராக்கப்பட்டு வரை படமாக மாற்றப்படுகிறது. இப்படம் திசுக்களின் அமைப்பைக் காட்டும். பல் இடங்களிலிருந்து எதிரொலிகளைத் தொகுத்து ஆராய்ந்தால் உடலு றுப்புகளின் உருவத்தைத் திரையில் தோற்று விக்கலாம். (voltage signal) மின் மின் உள் உறுப்புகள் பற்றிய விவரங்கள் எதிரொலி யிலிருந்து இரண்டு விதத்தில் தொகுக்கப்படுகின்றன. A - அலகிடுதல் (A-scanning) என்னும் முறையில் கேளா ஒலி ஒரு திசையில் மட்டுமே அனுப்பப்படு கிறது. எதிரொலியும் அதே திசையில் உணரப்படு -