472 கதிர்வீச்சு வானியல்
472 கதிர்வீச்சு வானியல் செய்கை முறைகளில் சில கதிர்வீச்சு மண்டலத்துகள் களையும் முடுக்குகின்றன என அறியப்படுகின்றது. சிக்குண்ட கதிர்வீச்சு, காந்தப்புயல் வீச்சுகளிலும் பெரும்பங்கு பெறுகிறது. காந்தப்புயலில் இன்றியமை யாக் கூறுகளில் ஒன்றான முதன்மைக் கூட்டத்தில் புவியின் நடுவரைக் கோட்டில் புவிக்காந்தப்புலத்தின் கிடைப்புல வளிமை மதிப்புக் குறைகிறது. சிக்குண்ட எலெக்ட்ரான்கள், அயனிகள் ஆகியவற்றின் மின்னோட்டங்களால் இந்த வீழ்ச்சி ஏற்படுகிறது. கதிர்வீச்சு மண்டலத்திலிருந்து தொடர்ச்சியாகத் துகள்கள் வளிமண்டலத்திற்குள் கசிந்து கொண் டுள்ளன. இதனால் ஏற்படும் அயனியாக்கம் அயனிக் கோளத்தின் எலெக்ட்ரான், அயனித்தொகையை அதிகரிக்கின்றது. காற்றொளிக்குத் (airglow) தேவை யான ஆற்றலில் மின்னூட்டம் பெற்ற துகளில் ஒரு பகுதி வளிமண்டலத்தில் படிவதால் பெறப்படலாம். பிற கோன்களின் கதிர்வீச்சு மண்டலங்கள். கதிர் வீச்சு க மண்டலங்கள் ஏற்படக் காரணங்கள் பொது வானவையாதலால், போதுமான காந்தப்புல வலிமை காண்ட எந்தக் கோளிலும் அல்லது திசுக்களிலும் கதிர்வீச்சு மண்டலம் இருக்கும் எனக் கருதப்படுகிறது. புதன், வெள்ளி, செவ்வாய் போன்ற கோள்களுக்கு மேற்கொண்ட விண்வெளிப் பயணங்கள் மூலம் ஆற்றல்மிகு துகள்களை மிகுதியான காலம் சிறைப் படுத்தும் அளவுக்கு வலிமைமிக்க காந்தத் திருப்பு திறன் இக்கோள்களுக்கு இல்லை எனக் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் வியாழன், சனி ஆகிய கோள்கள் வலிமைமிக்க காந்தப் புலமும், புவிக் கொத்த மிகப்பெரிய, செறிவுள்ள கதிர்வீச்சு மண் டலமும் கொண்டுள்ளன. முடிவு செய்யத்தக்க உறுதியான சான்றுகள் இல்லையென்றாலும், யுரேனஸ், நெப்ட்டியூன் ஆகிய கோள்களிலும் கதிர் வீச்சு கிறது. மண்டலங்கள் இருக்கலாம் எனக் கருதப்படு வியாழன், சனி ஆகிய கோள்கள் சூரியனிலிருந்து மிகத் தொலைவில் உள்ளமையாலும், இவற்றின் நிலவுகளும் வளையங்களும் கதிர்வீச்சு மண்டலங் களில் அமைவதாலும் இவற்றின் கதிர் வீச்சு மண்டலங் கள் புவிக் கதிர்வீச்சு மண்டலத்திலிருந்து மாறுபட்ட பல பண்புகளைக் கொண்டவை. சனிக்கோளத்தின் வளையங்கள் ஆற்றல் மிகு துகள்களை உள் உறிஞ்சும் மிகு பண்புடையவை ஆதலால் வளையப் பகுதிகளின் மண்டலங்களில் இடைவெளி காணப்படுகிறது. இவ் வாறே சனி, வியாழன் ஆகிய கோள்களின் நிலவு க்ளும், துகள்களை உள் உறிஞ்சும் தன்மை கொண்டவை. ஆதலால் நிலவுகளின் பாதைகளின் கதிர்வீச்சு மண்டல அமைப்பில் சிறுமங்கள் காணப் படுகின்றன. மாறாக, சில நிலவுகள். குறிப்பாக வியாழனின் ஐஓ (1 0), சனிக் கோளின் டைட்டன் (Titan) ஆகிய நிலவுகளின் வளிவெளியிலிருந்து அணுக்கள் வெளிக்கிளம்பி அயனியாக்கம் பெற்றுக் கதிர்வீச்சு மண்டலத்தின் பகுதியாகின்றன. இதனால் இவ்வெளிக் கோள்களின் கதிர்வீச்சு மண்டலங்களில் அவற்றின் நிலவுகளிலிருந்து பெறப்பட்ட சோடியம். கந்தகம் போன்ற எடை மிக்க அயனிகள் காணப்படு கின்றன. பிற கதிர்வீச்சு மூலங்கள், குறிப்பாக, சிதை வடையும் நியூட்ரானிலிருந்து புரோட்டான்களும், சூரியனிலிருந்து புரோட்டான்களும் ஹீலிய அயனி களும், கோள்களின் வளிவெளியிலிருந்து அயனிகளும் புவியின் கதிர்வீச்சு மண்டலத்தில் உள்ளவை போன்றே செயல்படுகின்றன. கதிர்வீச்சு மண்டலங்கள் உரு வாகக் காரணமான பல்வேறு அயனிக்குழுச் செயல் முறைகளின் இன்றியமையாமையை அறிந்து கொள்ள வெவ்வேறு கோள்களின் கதிர்வீச்சு மண்டலங்களை ஒத்து நோக்கலாம். விண்கலன்கள் மீது ஏற்படும் விளைவுகள். கதிர் வீச்சுகள் நீண்ட நேரம் விண்கலன்கள் மீது பட்டால் சிக்குண்ட எலெக்ட்ரான், புரோட்டான் ஆகிய வற்றின் பாயங்கள் விண் கலத்தில் செல்லும் மனிதருக்கும், விண்கல எந்திரங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடும். கதிர்வீச்சு மண்டலங்களின் வடி வமைப்புக் காரணமாக இவ்வாறு ஏற்படும் கேட்டின் அளவு விண்கலம் செல்லும் பாதை அமையும் இடத்தைப் பொறுத்திருக்கும். உள்மண்டலப் பகுதி களில் மிகு ஆற்றல் புரோட்டான்கள் பல கி. செ.மீ. அளவு தடிமன் கொண்ட பொருள்களையும் ஊடுருவிச் சென்று விண்கலத்தின் உட்பகுதியில் உள்ள உறுப்பு களைத் தாக்க வல்லவை. ஆனால் மண்டலத்தின் பல பகுதிகளில் கதிர்வீச்சு மண்டலங்களில் உள்ள சிக்குண்ட துகள்கள் குறைந்த நுழைதிறன் கொண் டவை ஆதலால் சூரியச் செல்கள் போன்ற விண் கலத்தின் வெளித்திறந்திருக்கும் பகுதிகளே தாக்க முறுகின்றன. 1962 ஜூலை 9ஆம் நாள் ஏற்படுத்தப் பட்ட பெரும் உயர் அணுக்க சுரு வெடிப்பைத் தொடர்ந்து சூரியச் செதில்கள் தாக்கப்பட்டமையால் பல விண்கலன்கள் புவிக்குச் செய்தி அனுப்புவது நின்று போயிற்று, . கதிர்வீச்சு வானியல் வெ. ஜோசப் மிகச்சிறிய அணு முதல், மிகப்பெரிய அண்டங்கள் வரை விண்வெளியில் உள்ள அனைத்துப் பொருள் களாலும் வெளிப்படுத்தப்படும் கதிர்வீச்சு அலை களின் கணிப்பின் மூலம் பேரண்டத்தைப் பற்றி அறியச் செய்வது கதிர்வீச்சு வானியல் (radio astro nomy) ஆகும். ஒளித்தொலைநோக்கியின் காட்சிக்கு எட்டாத விண்பொருள்களைக் கதிர்வீச்சுத் தொலை நோக்கி கொண்டு அறியலாம். தற்கால வானியலின்