494 கதிரியக்கங் காணல்
494 கதிரியக்கங் காணல் அடைகிறது (பகுதி II). இப்பகுதியில் மின்னோட்டத் தின் அளவு முதலில் தோற்றுவிக்கப்பட்ட அயனி - இரட்டைகளின் மதிப்பைப் பொறுத்தது. மின் முனை களுக்கிடையே மேலும் மின்னழுத்தம் அதிகரித்தால் முதலில் தோற்றுவிக்கப்பட்ட எலெக்ட்ரான்களின் இயக்க ஆற்றல் கூடுகிறது. இதனால் துணை அயனி யாக்கம் தூண்டப்பட்டு வெளிவரு துடிப்பின் (output pulse) மதிப்பு. பெருமமாகிறது. இதை வளிமப் பெருக்கம் (gas multiplication) என்று கூறுவர். பகுதி iII இல் முதன்மை அயனிகள் 10 மடங்கு வரை பெருக்கப்படலாம். இவ்விகிதச் சம பகுதியில் வேறு பட்ட ஆற்றல், அயனியாக்கத் திறன் கொண்ட கதிர்வீச்சுகளை வேறுபடுத்திக் கண்டறியலாம். மின்னழுத்தம் மேலும் மிகும்போது, சரிவு விளைவால் (avalanche) இரண்டாம் நிலை எலெக்ட்ரான்கள் (secondary electrons) தோற்று விக்கப்படுகின்றன. இவற்றைச் சேகரிக்கும்போது மின்முனைகள் இடையே தொடர் மின்னிறக்கம் உண்டாகும். பகுதி IV-இல் தோன்றும் துடிப்பின் அளவு படுகதிர் வீச்சின் ஆற்றலையோ அயனி யாக்கத்தையோ பொறுத்தது அன்று. பகுதி! மறுசேர்க்கைப் பகுதி எனப்படுகிறது. அயனிக்கலம் (ionization chamber) பகுதி II இலும், விகிதச்சம எண்ணி ( proportional counter) பகுதி III இலும்,கீகர் முல்லர் எண்ணி (Geiger-Muller counter) பகுதி IV இலும் செயல்படுத்தப்படும். அடுத்தடுத்து நிகழும் இரண்டு அயனியாக்க விளைவுகளை உணரக் காணிகள் எடுத்துக் கொள்ளும் கால டைவெளி உணர் நேரம் (response time) ஆகும். அயனிக் கலத்தின் உணர் நேரம் மில்லி நொடி. விகிதச் சம எண்ணியின் உணர் நேரம் மைக்ரோ நொடி (10- நொடி), அதன் எண்ணிக்கை விகிதம் பெருமம் (ஒரு நொடியில் ஏறத்தாழ 200,000 எண்ணிக்கைகள்), கீகர் முல்லர் எண்ணியின் உணர் நேரம் 300 மைக்ரோ நொடி வரை இருக்கும் (ஒரு நொடியில் ஏறத்தாழ 15,000எண்ணிக்கைகள்). காமாக் க-கதிர்களைக் கண்டறியக் காற்றும், கதிர்களைக் கண்டறிய அழுத்தம் கொண்ட சனான் அல்லது கிரிப்டான் வளிமமும் அயனிக் கலத்தில் பயன்படுகின்றன. விகிதச் சம எண்ணியில் வளிமக்கலவை பயன்படுகிறது. காட்டு: 90% ஆர்கான், 10% எத்தில் ஆல்கஹால் அல்லது மீத்தேன். இக்காணியில் பொதுவாக வளிமக்கலவை தொடர்ந்து பாயும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆல்கஹால் அல்லது மீத்தேன் பெருக்க எண்ணைக் multiplication factor) சுட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இதைத் தணிப்பான் (quenching agent) என்று குறிப்பர்.-கதிர்களைக் கண்டறிய விகிதச் சம எண்ணி பயன்படுகிறது. இக்கருவி க,நீ-கதிர்களை மாறுபடுத்திக் காட்டும். கீகர் முல்லர் எண்ணியிலும் வளிமக்கலவை பயன்படுகிறது. சரிவு விளைவு கட்டுக் கடங்காமல் போவதைத் தடுக்கத் தணிப்பான் உதவு கிறது. ஆல்சுஹாலுக்குப் பதில் குளோரினைத் தணிப்பானாகப் பயன்படுத்தினால் கீகர் முல்லர் எண்ணியின் ஆயுட்காலம் நீடிக்கும். கதிர்களை விட நீ கதிர்களை இவ்வெண்ணி நுட்பமாகக் கண்டறி கிறது. இக்கருவியின் உதவிக்கொண்டு படுகதிர் வீச்சின் ஆற்றலைக் கணக்கிட முடியாது. இக்கருவியின் மின்முனைக்கு இடையே உள்ள மின்னழுத்த வாட் டத்தை (potential gradient) மிகுவிக்க (படம் 3) மெல்லிய டங்ஸ்டன் கம்பி பயன்படுகிறது. யுரேனியத் தாதுக்களைத் தேடுவதற்குக் கீகர் முல்லர் எண்ணி பயன்படுகிறது. நியூட்ரான்களைக் கண்டறிய, அயனிக் கலத் திலோ விகிதச் சம எண்ணியிலோ போரான் டிரை ஃபுளோரைடு வளிமத்தை நிரப்ப வேண்டும். இச் சேர்மத்தில் உள்ள போரான் அணு நியூட்ரானைக் கவர்ந்து - கதிர்களை வெளியிடும் (சமன்பாடு 1). குறைவேக நியூட்ரானைக் கண்டறிய U35 கொண்ட சேர்மத்தையும், மிகுவேக நியூட்ரான்களைக் கண் டறிய U28, Th'3* கொண்ட சேர்மத்தையும் காணியின் சுவரில் பூசவேண்டும். நியூட்ரானின் இடையீட்டுச் செயலால் அணுக்கருப் பிளப்பு (fission) நிகழும் (சமன்பாடு 2). ஹைட்ரஜன் கொண்ட பொருள்கள் (காட்டு: பாராபின்) ஊடே நியூட்ரான் செல்லும்போது, அவை புரோட்டான்களுடன் மீட்சிச் சிதறல் விளைவில் ஈடுபடுகின்றன. இதனால் பின் உதைப்பு (recoiling) பெறும் புரோட்டான்களை அதன் அயனியாக்கும் தன்மை மூலம் கண்டறியலாம். சுள் ஒளித்துடிப்பு எண்ணி (scintillation counter), சில ஒளிபுகும், கனிம கரிமப் பொருள்கள் மீது கதிர்வீச்சுப் படும்போது அப்பொருளில் உள்ள மூலக்கூறுகள் கிளர்விக்கப்படுகின்றன. 10-5 நொடிக்குள் அம்மூலக் கூறுகள் கிளர்ச்சி தணிந்து (de-excite) ஒளிக்கதிரை உமிழ்ந்து கீழ்நிலைக்கு வருகின்றன. இச்செயலை ஒளித்துடிப்பு (scintillation) என்றும், இப்பண்பு கொண்ட பொருள்களை ஒளித்துடிப்பான் (scin- tillator) என்றும் கூறுவர். ஒளித்துடிப்பு எண்ணி பின் வரும் முறையில் செயல்படுகிறது (படம் 4), கதிர் வீச்சு ஒளித்துடிப்பானில் படுவதால் வெளிவரும் ஒளித்தெறிப்பு ஒளி எதிர் மின்வாய் (photo cathode) மீது படும்போது எலெக்ட்ரான்கள் வெளிவருகின்றன. ஒளி எதிர்மின்வாயின் மீது ஒளி எலெக்ட்ரான்களை உமிழும் பொருள்கள் பூசப்பட்டு இருக்கும். வெளி வரும் எலெக்ட்ரான்கள் டைனோடு (dynode) எனப் படும் மின்முனையில் வீழ்கின்றன. அடுத்தடுத்த டைனோடுகள் மிகுவிக்கும் மின்னழுத்தத்தில் வைக்கப்பட்டு இருக்கும். இதனால் எலெக்ட்ரான் களின் இயக்க ஆற்றல் அதிகரித்து, டைனோடில் பிரதிபலிப்பதால் அவற்றின் எண்ணிக்கை பெருகு