736 கருவுறுதல்
736 கருவுறுதல் உள்ளுறை வளர்துளையின் வழியாகக் குழாய்போல் வளருகிறது. இக்குழாயினுள் குழாய் நியூக்ளியஸும், செல்லுண்டாக்கும் நியுக்ளியஸும் செல்கின் றன. மக ரந்தக்குழல் வளர்ந்து சூலகத்தண்டின் வழியாகச் சூல்பையில் உள்ள கருப்பையை அடைகிறது. இப் போது செல்லுண்டாக்கும் நியூக்ளியஸ் பகுப்படைந்து ரு ஆண் இணைவிகளைத் தோற்றுவிக்கிறது. கருப் பையில் உள்ள அண்டமும் மகரந்தக் குழாயில் உள்ள ஓர் ஆண் இணைவியும் இணைந்து கருமுட்டை (zyzote) ஆகும். இந்த நிகழ்ச்சிக்குக் கருவுறுதல் (fertilizatlon) என்று பெயர். பக்குவமடைந்த சூல் கருவுறுதல் இந்த மகரந்தக் குழலிலிருந்து கருப்பையை அடை ந்த மற்றோர் ஆண் இணைவி இரண்டாம் நிலை நியூக் ளியசுடன் இணைந்து கருப்பையில் நிகழும் இரண்டாம் சேர்க்கைக்கு இரட்டைக் கருவுறுதல் என்று பெயர். கருவுற்ற அண்டம் ஒரு செல் உடைய கருமுட்டை ஆகும். இது பல பகுப்புகள் அடைந்து பல செல்களுடைய கருவைத் தோற்றுவிக்கிறது. கரு வுறுதலுக்குப் பின் சூல் விதையாகிறது. விதையில் முதிர்ச்சி அடைந்த கருவும், அதில் ஒரு சிறிய மைய அச்சும் உள்ளன. அதன் இரு முனைகளிலும் ஆக்கத் திசுக்கள் அமைந்துள்ளன. மைய அச்சில் ஒன்று அல்லது இரண்டு வித்திலைகளும் (cotyledons) அமைந்திருக்கும். சூல்துளை கருவுறுதலுக்குப்பின் விதைத்துளை ஆகிறது. விதைத்துளைக்கு அருகில் கருவின் நுனியில் முளைவேர் காணப்படும். சூல் உறைகள் இரண்டும் விதை உறைகளாகி விதை உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கின்றன. கருவுறுதலுக்குப்பின் சூல்பை கனியாக மாறு கிறது. கனிய தியாகும்போது பூவில் பல மாறுதல்கள் நிகழ்கின்றன. பூவின் பிற உறுப்புகளான புல்லி. அல்லி இதழ்கள், மகரந்தத்தாள்கள், சூலகமூடி சூலகத்தண்டு இவை யாவும் உதிர்ந்துவிடும். சில கனிகளில் ஏதாவது ஓர் உறுப்பு கனியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாகக் கத்தரியில் புல்லி இதழ்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். சூல்பையினுள் சூல்கள். நேரான சூல், தொங்கிய மேல்தொங்கிய சூல், ஓரத்தில் தொங்கும் சூல், குறுக்குச்சூல் என்று பலவகையாக அமைந்திருக்கும். 00000 சூலின் அமைப்பிடம் சூலின் வகைகள். விதைத்தழும்பு, சூலடி வளை முதலியவற்றின் அமைப்பைப் பொறுத்துச் சூல்களை பலவகையாகப் பிரிக்கலாம். நேர்சூல். இதில் விதைத் தழும்புப் பகுதியும், சூலடியும் ஒரே இடத்தில் உள்ளன. சூல்துளை விதைத்தழும்பிற்கு அப்பால் சூலின் எதிர்க்கோடியில் காணப்படும். எ.கா. பாலிகோனம், வெற்றிலை. வளைந்த சூல். இதில் நேர் சூலிலிருந்து ஒழுங் கற்ற வளர்ச்சியால் இவ்வகைச் சூல் உண்டாயிற்று. இதனால் சூல்துளை சூலடிக்கு சூலடிக்கு அருகில் கொண்டு வரப்படுகிறது. எ.க : கடுகு, முள்ளங்கி, வேளைச் செடி தலைகீழ்ச்சூல். இவ்வகையில் சூல் முற்றிலும் வளைந்து அதனால் சூல்துளை சூல்காம்பிற்கு அருகில் காண்டு வரப்படுகிறது. விதைத்தழும்பு சூல் துளைக்கு அருகில் இருந்தாலும்சூலடி எதிர்க்கோடியில் அமைந்துள்ளது. சூல்காம்பு, சூலுடன் விதைத் தழும்பில் இருந்து, சூலடி வரை இணைந்து நீளமான மேடு போன்ற பகுதியை ஏற்படுத்துகிறது. இதற்கு ரேஃபே என்று பெயர், எ.கா : அவரை, மிளகு.