உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/799

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலங்கரை விளக்கு 779

மலட்டுத்தாள்களாக மகரந்தத் தாள்கள் யாவும் (staminodes) அல்லி இதழ்கள் போன்றிருக்கும். இவற்றுள் ஒன்று லேபெல்லம்' (labellum) ஆகச் செயல்படும். லேபெல்லம் மற்ற இதழ்களை விடப் பெரியதாக வெளிப்புறம் மடங்கி நாக்கு வடிவில் உள்ளது. கல்வாழைக் காய்களின் மேல்தோவில் புடைப்பு கள் (warty) நிறைந்து இருக்கும். விதைகள் உருண்டை யாசு 8மிமீ. அளவில் உற்பத்தியாகின்றன. வை கறுப்பாகவும் பளபளப்பாகவும் கெட்டியான விதைத் தோல் (testa) மற்றும் நேரான கருவைக் கொண்டவையாகவும் இருக்கும். பயன்கள். இச்செடியின் தண்டிலிருந்து எந்திரத் தின் உதவியால் நார் தயாரிக்கலாம். இது சணலுக்குப் பதிலாகப் பயனாகும். இதன் கிழங்கு சுறுசுறுப்பைத் தரும். காமத்தைத் தூண்டும். விதை உடலுக்கு வலிவு தரும். இரணத்தைக் குணமாக்கும் விதைச்சாற்றைச் சுடவைத்துக் காதிலிடக் காதுவலி நீங்கும். இதன் வேர், சிறுநீரைப் பெருக்கும். வியர்க்கச் செய்யும், மேலும் காய்ச்சலுக்கு உதவும். காய்ச்சலைப் போக்க இலைக் கஷாயத்தைப் பயன் படுத்திக் குளிக்கலாம். கோல்டுகோஸ்ட் நாட்டில் இதன் பூக்களைக் கண் நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்துகின்றனர். விதைகளிலிருந்து அழகான நிலையற்ற ஊதாச் சாயம் தயாரிக்கலாம். விதைகள் காய்வதற்கு முன் தொகுத்து அவற்றைக் கொண்டு பதக்கம் செபமாலை முதலியன செய்யலாம். தண்டைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, மிளகுடன் சேர்த்து அரிசிக் கஞ்சியில் கொதிக்கவைத்துக் கால் நடைகளுக்குத் தர நச்சுப் புற்களின் நச்சு முறியும். இராபின்சன் தாமஸ் கலங்கரை விளக்கு மனிதன் கடலில் பயணம் செய்யத் தொடங்கிய காலத்திலிருந்து கலங்கரை விளக்கம் (light house) பயன்படுத்தப்பட்டுள்ளது. கடலில் செல்லும் கப்பல் களுக்குக் கடற்கரை அல்லது துறைமுகம் உள்ள டத்தைக் காட்டவும். சுப்பல்கள் மோதிக் கொள்ளாமல் கடலிலுள்ள பாறைகளின் இருப் பிடத்தை மாலுமிகளுக்குக் காட்டவும், மூடுபனி உண்டாகும் சூழ்நிலையை அறிவிக்கவும் கலங்கரை விளக்குகள் பயன்படுகின்றன. இவை துறைமுகங்களின் கடற்கரையோரங்களி லும், கடலிலுள்ள தீவுகள் பெரிய பாறைகள் மீதும், அவற்றின் முனைகளிலும், கடலினுள்ளும் கட்டப் பெரும்பாலும் படுகின்றன. முற்காலத்தில் இவை வட்ட வடிவில், மிக உயரமான கோபுரங்களாகக் கலங்கரை விளக்கு 779 கற்கள், மணல், சுண்ணாம்பு ஆகியவற்றால் கட்டப் பட்டன. பின்னர் இரும்புக் கட்டை-கம்பிகள் கொண்ட வார்ப்புக் காரைகளாலும், எஃகு, வலிவான கற்காரைத் தளங்களாலும் உருவாக்கப்பட்டன. நீரின் கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும் பேழையைக் கொண்டும். வார்ப்பிரும்பு, தேனிரும்பு போன்ற பல வலிவான பொருள்களைக் கொண்டும் கடலுள் கட்டப்படும்போது, இவை அடிப்புறத்தே அகன்றும் மேலே செல்லச் செல்லக் குறுகியும் அமையும். உட்புறச் சுழல் படிகளின் மூலம் கலங்கரை விளக்கத்தின் உச்சி வரை செல்ல முடியும். பயன்படுத்தப்பட்டன. கலங்கரை விளக்கின் முக்கியமான பகுதி அதன் ஒளிமிகுந்த விளக்காகும். பத்தொன்பதாகும் நூற் றாண்டுத் தொடக்கம் வரை மரக்கட்டைகள், நிலக்கரி அல்லது கொழுப்பிலான மெழுகுவத்திகள் போன் உண்டாக்கப் றவை ஒளி முதன்முதலில் எகிப்தில், விபியர்களால் வடக்குக் கடற்கரையில் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு கள் மத்திய தரைக்கடலில் சென்ற கப்பல்களுக்கு வழிகாட்டியாக இருந்தன. உலோகச் சட்டிகளில் மரக்கட்டைகள் அல்லது நிலக்கரியை நிரப்பி எரிய விட்டுக் கோபுர உச்சியில் தொங்கவிட்டனர். அலெக சாண்டிரியாவுக்கு அருகில் ஏறக்குறைய கி. மு. 300 ல் அமைத்த கலங்கரை விளக்கு உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. ரோமானி யர்கள். ஆங்கிலேயர். அமெரிக்கர் ஆகியோரும் அவரவர் நாடுகளில் கலங்கரை விளக்குகளை அமைத் தனர். ஹாலந்தில் ஹெல்டருக்கு அருகில் உள்ள கிஜ்க்டுயின் கலங்கரை விளக்கு, நியூயார்க் துறைமுக வாயிலில் உள்ள நேவ்சிங்ச் என்னும் கலங்கரை விளக்கு. இந்தியாவில் சென்னை, பம்பாய், கல்கத்த போன்ற துறைமுகங்களில் உள்ள கலங்கரை டி, கள் குறிப்பிடத்தக்கவையாகும். இந்தியாவில் மட்டும் உள்ள ஏறக்குறைய 200 கலங்கரை விளக்குகள் பல கலங்கரை விளக்குகள் புது எந்திரக் கருவிய பொருத்தப்பட்டுப் புதுப்பிக்கப்படுகின்றன; புதியவாகவும் கட்டப்படுகின்றன. எந்திர அமைப்புகளின் உதவியால், கலங்கரை விளக்கின் ஒளிக்கற்றை, 30-35 கிலோ மீட்டர் வரை கடலில் தெரியுமாறு அமைக்கப்பட்டிருக்கு மிகப்பெரிய பீப்பாய் வடிவான் வில்லை ஒன் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஒரு பகுதி ஒளிபுகாத வாறு கருநிறம் பூசப்பட்டு, மின்உந்தாலோ ஓர் எந்திரத்தாலோ வில்லை சுழலுமாறு அமைக்கப்பட்டி ருக்கும். வில்லை சுழலும்போது கருநிறம் பூசப்பட்ட பகுதி வழியே ஒளி வெளியே செல்லாது. கறுப்புப் பூசப்படாத பகுதி சுழன்று வரும்போது ஒளி வெளிச் செல்லும். ஒளியின் பாதையில், வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் பல பட்டகங்களின் மூலம் ஒளி செல்வதால் கலங்கரை விளக்கின் ஒளி பல மடங்கு