கலப்பகாஸ் தீவுகள் 785
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கக் கப்பல்களில் பயணம் செய்தோர் இத் தீவுகளில் இறங்கினர். அதுவரையில் மனிதர்கள் பார்த்திராத இயற்கைக்கு மாறான விந்தையான பேருருவம் படைத்த கடலாமைகளையும் வேறு பல உயிரினங்களையும் கண்டு வியந்தனர். கூடிய வரை கடலாமைகளைக் கப்பல்களில் எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினர். கடலாமை இறைச்சி மிகவும் சுவையாக இருந்ததால் அவை மிகுதியாக வேட்டையாடப்பட்டன. காலப்போக்கில் மக்கள் அங்கு தங்கி வாழத் தொடங்கிய பிறகு ஏனைய நாடுகளிலுள்ள ஆடு, மாடு, நாய், பன்றி முதலிய வற்றையும் இங்கு புகுத்தினர். பல் தலைமுறை களுக்குப் பிறகு அவை முரட்டுத்தனம் கொண்ட விலங்கினங்களாக மாறி இன்றும் வாழ்கின்றன. இத்தீவுக்கூட்டங்களின் உள்ள தாவர வகை பிற களும் தட்பவெப்ப சூழ்நிலையும் வெப்ப நிலைத் தீவுகளைப் போன்றில்லாமையால் இங்கு அண்டார்க்டிக் பகுதியில் வாழும் பெங்குவின் பறவை களும் வெப்பநிலைப் பகுதியில் வாழும் இகுவானா போன்ற ஊர்வன விலங்குகளும் ஒரே இடத்தில் வாழ்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடிப்பால் மேலுந்தப்பட்ட தரைப்பகுதிகளாகக் கலப்பகாஸ் தீவுகள் தோன்றியிருக்கக்கூடும் எனப் புவியியலார் கருதுகின்றனர். தோன்றியபோது கலப்பகாஸ் தீவுகள் 785 உயிரினங்களே இல்லாத இத்தீவுகளில் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்த பறவைகள் தங்கியபோது அவற்றின் எச்சத்திலிருந்து வீழ்ந்த விதைகள் முளைத் துத் தாவரங்கள் தோன்றியிருக்க வேண்டும். மேலும் புயல், சூறாவளிக் காலங்களில் தென் அமெரிக்காவி லிருந்து சிறு செடிகள், ஊர்வன, பறவைகள், சிறு பாலூட்டிகள் முதலியன இத்தீவுகளுக்கு அடித்து வரப்பட்டுப் பல்கிப் பெருகியிருக்க வேண்டும். ஆமைகள் முதன்முதலில் கடலில் தோன்றி வளர்ந்து வாழ்ந்தாலும் படி மலர்ச்சியில் பல்வேறு தகவ மைப்புக்களைப் பெற்றுத் தரைவாழ் ஆமைகளாக மாறியுள்ளன. பலவகை உயிரினங்களின் எண்ணிக்கை பெருகப் பெருக ஒன்றுகூடி வாழும் உயிரினங்களும், சூழ்நிலைக்கேற்ற தகவமைப்புகளைப் பெற்றவையும் நிலைத்து வாழ, ஏனையவை அழிந்தன. இன்றும் கலப்பகாஸ் தீவுக்கூட்டங்களில் ஒவ் வொரு தீவிலும் தனித்தன்மை வாய்ந்த உயிரிகள் வாழ்கின்றன. கடல் சிங்கம். குருவி வகை, பறக்க வியலாக் சுடற்பறவை, அல்பட்ராஸ், பெங்குவின், நாரை, ஆமை. இகுவானா போன்ற வியத்தகு விலங்கினங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள வற்றில் பல உயிரிகள் உலகில் வேறெங்கும் காணப் படாதவை ஆகும். உலகில் வாழும் ஊர்வனவற்றில் மிகத் தொன்மையான தரை ஆமைகள் இங்கு உள்ளன. இகுவானாவைப் போன்று கடல் பாசிகள் முள் செடிகளைத் தின்று வாழும். இவை 1.5மீட்டர் நீளமும், 250 கி.கி. எடையும் கொண்டவை. கடற் VOL 7